விஷ்வா I Viswa I Profile picture
¶ உடல் வலிமையினால் எல்லோரையும் ஜெயிக்க முடியாது? ¶ ஆனால் அன்பினால்? ¶ சிந்திக்கலாம். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தலாம். ¶ தமிழன் என்பதில் பெருமை.
👑KUINSAN👑 Profile picture RAJARAM Profile picture Aishwaryan Profile picture Karthik Mecheneer Profile picture 4 added to My Authors
11 Jul 20
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான்.

ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் எல்லாம் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பி விடுவார்.
(சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா.
(ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்)

அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன் (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
Read 10 tweets
10 Jul 20
ஒரு மந்திரவாதி
காட்டில் வசித்து வந்தான்.
அவனிடம் பல நூற்றுக்கணக்கான ஆடுகள் இருந்தன.

ரெகுலராக ஆடுகளை வெட்டித் தின்று வந்தான்.
ஒரு நாள் அவனுக்கு ஒரு பிரச்சனை வந்தது.

தொடர்ந்து அவனுடைய உணவுக்காக சில ஆடுகள் வெட்டப்படுவதை அங்கிருந்த பிற ஆடுகள் கண்டன. பயம் தோன்றியது அவைகளுக்கு.
அந்த ஆடுகள் அந்த மந்திரவாதியைக் கண்டும் பயப்பட ஆரம்பித்தன.
சில அவனிடமிருந்து தப்பி வெகு தூரம் ஓடின.

அவ்வளவு பெரிய காட்டில்
அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இழுத்து வருவது கடினமாகிப் போனது அவனுக்கு.

அவன் மந்திரவாதி என்பதால் ஒரு தந்திரம் செய்தான். ஒவ்வொரு ஆட்டையும் அழைத்தான்.
ஒவ்வொன்றாக அழைத்து அவற்றினுடைய மனதை மாற்ற ஆரம்பித்தான்.

ஒரு ஆட்டினை அழைத்து,
'நீ ஆடல்ல. நீ ஒரு மனிதன்.
நீ பயப்படத் தேவையில்லை. மந்திரவாதி கொன்று சாப்பிடப் போவது ஆட்டைத் தான்.

உன்னையல்ல. ஏன் எனில் நீ என்னை போல மனிதன் தான்' என்று கூறி அந்த ஆட்டை வார்த்தைகளால் மயக்கினான்.
Read 9 tweets
5 Jul 20
அட்டை போடாத அஞ்சாவது புக்கு என்னைக்கோ கிழிஞ்சுருச்சு ஆறாம் வகுப்புக்கு தேறிட்டன்னு அறிவிப்பு மட்டும் வந்திருச்சி.

பள்ளிக்கூடம் பூட்டு போட்டு
மாசம் இன்னைக்கு நாலாச்சு..
பிரைவேட்ல படிக்கிறவனுக்கு ஸ்கூல் வீட்டுக்கே வந்தாச்சு.

ஆன்லைன்ல படிக்கிறேன் டா ஆணவமா ஆதி சொன்னான்.
எதிர்வீட்டு கோபி சொன்னான்
ரெண்டு ஜிபி தேவைப்படுமாம்.

சட்டையில மட்டுமில்ல அப்பா போன்லயும் ரெண்டு பட்டன் இல்லை.
ஸ்மார்ட் போன் வாங்க காசு இருந்தா ஸ்கூல் பீஸ் கட்டி சேர்த்திருப்பார்.

கூலிக்கு மாரடிக்கும் குருவம்மா எங்கம்மா.
கூறுகெட்ட #கொரோனா வால வீட்டுக்குள்ளே முடங்கிருக்கா.
#அப்துல்_கலாம் ஆவன்னா அரசு பள்ளியில சேர்த்துவிட்டா?
ஒரு வேல சுடுசோறு தின்பான்னு ஆசைப்பட்டா.

இப்ப சொல்லித் தரவும் ஆளில்லை.
சோத்துக்கும் வழியில்ல.

கத்து தந்த வாத்தியாரும் அரிசி போட போய்ட்டாராம்.

வறுமை ஒன்னும் புதுசில்ல
வாழ்ந்து பார்த்து பழகிடுச்சு.
Read 4 tweets
24 Jun 20
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்,

''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன் சுவாமி. என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு எதேனும் பரிகாரம் உண்டா சுவாமி?''

அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
'நான் இவர் அளவுக்கு இல்லை.
பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை சுவாமி. நான் செய்தது எல்லாமே சின்னச் சின்னப் பொய்கள், சிறு சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.

தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன சுவாமி.?'' நீங்களே சொல்லுங்கள் என்றான்.

ஞானி இருவரையும் பார்த்துச் சிரித்தார்.
பெரிய பாவம் செய்ததாக சொன்னவனிடம், ''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா" என்றார்.

சின்ன சின்ன பாவங்கள் செய்ததாக சொன்ன இரண்டாவது ஆளிடம்,
'நீ போய் இந்த கோணி நிறைய சிறு சிறு கற்களை இந்தப் பகுதி முழுவதும் பொறுக்கி வா.'' என்று அனுப்பி வைத்தார்.

இருவரும் அவ்வாறே செய்தனர்.
Read 9 tweets
23 Jun 20
#கொரோனா_அலட்சியம்_ஆபத்து
#எச்சரிக்கை
#Caution

சில மரணங்கள் நமக்கு நேரடியாக சில செய்திகளை விட்டு செல்கின்றன.?!

1) திரு. அன்பழகன் MLA (62). இவருக்கு எந்தவிதத்திலும் பணத்திற்கு குறைவில்லை. எந்தவித உயர்தர வைத்தியமும் பார்க்க முடியும். ஆனால் #கொரோனா விடம் ஜெயிக்க முடியவில்லை.
2) திரு. சரத் ரெட்டி (43). இவர் இந்தியாவின் டாப் 25 மற்றும் சென்னையின் டாப் 10 மருத்துவமனைகளில் ஒன்றான விஜயா மருத்துவமனையின் இயக்குநர்.

ஒரு பெரிய மருத்துவமனையின் இயக்குநர் என்றால் அங்கு அவருக்கு எந்த மாதிரியான வைத்தியம் பார்த்திருப்பார்கள் என நம்மால் யூகிக்க முடியும். ஆனாலும்.?!
#கொரோனா விடம் திரு. சரத் ரெட்டியால் ஜெயிக்க முடியவில்லை.

3) திரு. பாலகிருஷ்ணன் (55). இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் தலைவர்.

இவருக்கு உலகின் எவ்வளவு பெரிய மருத்துவமனையின் வைத்தியத்தையும் பெற வசதியிருக்கிறது. ஆனாலும் #கொரோனா விடம் ஜெயிக்க முடியவில்லை.
Read 12 tweets
7 Jun 20
சென்னை ஏர்போட்டை விட்டு லக்கேஜுடன் வெளியே வந்து பெருங்களத்தூருக்கு ஆட்டோ பேசினேன்.

காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைபாஸ் வழியே கிண்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது. நான் சீர்காழி போக வேண்டும்.

"ஆட்டோ சார், பெருங்களத்தூர் போகலாமா? எவ்ளோப்பா?"
"500 ரூபாய் சார்"

"400 ரூபாய்க்கு வருவியா?"

"சார் 450 ரூபாய். ஏறுங்க சார்!"

சென்னைக்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது.
பல்லாவரத்தை தாண்டியது.

"ஏம்பா, ஆட்டோ சார், நீங்க இந்த வழியா தினமும் சவாரி போனால் எங்க காலை டிபன் சாப்பிடுவீங்க.?!"

"ரோட்டுக்கடைத்தான் சார்!"
"நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்துங்க. டிபன் சாப்பிட்டு போவோம்!" என்றேன்.

குரோம்பேட்டைக்கும் தாம்பரத்திற்கும் இடையே ஒரு இடத்தில் ஓரமாக இருந்த தள்ளு வண்டியிடம் ஆட்டோவை நிறுத்தினார்.

ஒரு நடுத்தர வயது அம்மா நெற்றி நிறைய திருநீறு.
தட்டுகளை வாழை இலை போட்டு வைத்திருந்தார்கள்.
Read 12 tweets
2 Jun 20
தினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விற்கும் அந்த அம்மா போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டு போச்சு.

தினம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா, வாழக்கா மாத்திரம் கொண்டாரும்.
கீரக்கட்டு ரூ 15. முருங்கக்கா கட்டு ரூ 20.
வாழக்கா 3 பீஸ்கள் ரூ 15 என்று குடுக்கும்.
பழைய சேலை கட்டிருக்கும். அள்ளி முடிஞ்ச தலை. எண்ணெய் பாக்காத முடின்னு பாக்கவே கஷ்டமாக இருக்கும்.

கீரக்கட்டோட பத்திரிக்கை குடுக்கக் கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டு போச்சு.
இது மாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல.
அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு.

ஆனா கல்யாணத்திற்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன்
கல்யாண வேலை இருக்குன்னு சொல்லிட்டு போச்சு.

நான் சொன்னேன் ஏதாவது பணத்த கவர்ல போட்டுக் குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போக முடியாது.
Read 23 tweets
18 May 20
#கருணாநிதி_ஒரு_நாத்திகர்?!

கோயில் வருமானத்தில் கருணை இல்லங்களையும், மறுவாழ்வு இல்லங்களையும் அமைத்தவர் #கருணாநிதி!

தமிழகக் கோயில்களின் நிர்வாகங்கள் எல்லாம் காலம்காலமாகப் பெரும் பணக்காரர்கள், பண்ணையார்களின் வசமே இருந்தன.

அவர்களிடமிருந்து கையகப்படுத்துவதற்காக என்ன செய்தனர்.?!
சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி 1922-ம் ஆண்டு,இந்து அறநிலையச் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

1922 ல் அறிமுகப்படுத்தப்பட்ட அது 1925-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. பின் கோயில்கள் அரசு நிர்வாகத்துக்கு மாறின.

1927-ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது
1951-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை உருவானது.

நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் ஓர் அங்கமாக இந்து சமய அறநிலையத்துறை மாறியது.

திருக்கோயில்களை முறைப்படுத்தி, அவற்றை நிர்வகிப்பதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் #கருணாநிதி.
Read 16 tweets
15 May 20
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
"ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

"நான், உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்''
என்றார் பெரியவர்.
பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், "அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப நல்லவர். ரொம்ப கஷ்ட ஜீவனம்.
Read 27 tweets
13 May 20
ஆளவந்தார் முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.

வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், ஆனால், "கொஞ்சம் துடுக்குத்தனம்" நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறை கூறுபவர். அவர் மனைவி மறைந்து விட்டார். பிள்ளைகள் இல்லை.

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவர் குடிவந்தார்.
அவருக்கு "ஆக்டிங் டிரைவர்" வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவார்.

மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பார்.

ஆளவந்தாருக்கு அவர் மேல் சந்தேகம்.

"திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.காலை 8 மணிக்கு மேல் வீடு திரும்புகிறான் இவன்.
சில நாள்களில் மாலையில் போகிறான். இரவில் வீடு திரும்புகிறான்"

"ஒருவேளை இவன் திருடனாக இருப்பானோ?!" என்பதே அந்தச் சந்தேகம்.

"இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது"

தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் அவதூறாகச் சொன்னார். காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.
Read 13 tweets
12 May 20
புதுமணத் தம்பதிகள் அவர்கள். இருவருமே சம்பாதிப்பவர்கள்.
எதோ கடுமையான கருத்து வேறுபாடு அவர்களுக்கு தம்மில்.

இறுதியில் என்ன.?! அதேதான்.
விவாகரத்தில் போய் நிற்கும் நிலை.

யார் யாரோ அவர்கள் இருவருக்கும் சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை. முடிவு ஒன்றே.?!
ஒரு நாள் பெண் வீட்டின் பக்கமிருந்து ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார், பெண்ணின் தந்தை வேண்டுகோளை ஏற்று.

புதுமணத் தம்பதிகள் அவரை அலட்சியமாக வரவேற்றனர்.

பெரியவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லுகிற மாதிரி அவர்களிடம் எவ்வளவோ சொல்லியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இறுதியில் பெரியவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம் என்றார் அந்த "ஆதர்ஷ்" தம்பதிகளிடம்.

அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர்.

இப்போது பெரியவர், ஒரு மெல்லிய நூலை காண்பித்து இதனை நீங்கள் அறுக்க வேண்டும் என்றார்.
Read 10 tweets
11 May 20
தனது இறுதிக் காலத்தில் "வாட்டர் லூ" போரில் தோற்று விட்டார் மாவீரர் #நெப்போலியன்.

ஆள் ரொம்பக் குள்ளம், தன்னை மற்றவர் முன்பு கம்பீரமாகக் காட்டிக் கொள்ள எப்போதும் குதிரை மேலேயே அமர்ந்து இருந்ததால் மூல வியாதி வேறு வந்து இருந்தது.
நெப்போலியனை பழி வாங்க தனித் தீவிற்கு அனுப்பினார்கள்.
அங்கு இருக்கும் ஆங்கிலேயத் தளபதிகளுக்கு #நெப்போலியன் எப்படி இருப்பார்.?! என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தது .

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கற்பனை பண்ணி வைத்து இருந்தார்கள் அவர்கள் எல்லாம்.
ஆனால் நடந்தது அதற்கு நேர்மாறு.
வந்த நெப்போலியன் இருந்தது பின்வருமாறு:
குள்ளமான உருவம், கை கால்களில், நாள்பட்ட தோல் வியாதிகள். மூல வியாதி உடன் மெதுவாக காலை அகற்றி வைத்து வருபவரைக் கண்டதும் அவர்களுக்கு சப்பென்று போய் விட்டது.

இவரா மாவீரன்.?!
இவரா நெப்போலியன்.?! என்று அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்.

அவருக்கு விளையாட்டு காட்ட முடிவு செய்தார்கள்.
Read 8 tweets
3 May 20
"சட்டப்படி" கடனா.?!
அது எப்படி.?!"

ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும்.

சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் 1 லட்சம் என வாங்கி விடுவார்கள்.
100 ஏக்கரும் சேர்த்து 1 கோடிதான்.
பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்து விடுவார்கள்.

இனி அந்த பகுதியில் ஏக்கர் 50லட்சம் என்பதுதான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.
பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது.

அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை.

100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருகிறதா.?!
Read 17 tweets
30 Apr 20
பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன "28 பேரில்" (இது வரை.?!) SC / ST / OBC /முஸ்லீம்கள்/ கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.

நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை ஆட்டைய போட்ட 28 தொழிலதிபர்கள் யார் தெரியுமா.?!
1) விஜய் மல்லையா
2) மெஹுல் சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
8) ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்
14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்.
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால்
19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்
23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்
28) ஆஷிஷ் சுரேஷ் பாய்

#அறிவோம்_புதிய_தகவல்
Read 5 tweets
28 Apr 20
"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.?!"

"கொஞ்சம்ம்ம்ம்ம்ம் பெரிய பதிவு"

#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது?

சத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.?!
என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.
#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

அவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்

#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.
Read 33 tweets
22 Apr 20
இது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.

வளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.

இது நீண்ட நாட்களாக நடப்பது தானே.?!
இதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.

#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.

ஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.

தன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.
Read 23 tweets
16 Apr 20
ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.

அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். அது மனித இயல்புதானே.?!

எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் பிடித்து வளர்த்தால் என்ன என்று விபரீதமாகச் சிந்தித்தான் அவன்.
அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் மக்களிடம் உயரும் என்று தீவிரமாக நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது.

ஆவலுடன் அதைக் கையில் பிடித்து பெருமையாக தன் வீட்டுக்கு எடுத்து வந்தான் அந்தப் பிரகஸ்பதி.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும், குழந்தைகளும், சக நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள்.

அவனோ அவர்கள் சொல்வதை எல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு அந்த முதலைக் குட்டியை தன் செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
Read 11 tweets
14 Apr 20
பெயர் கணேசன்.
இப்போது 67 வயதாகும் கணேசன் தஞ்சாவூரில் இருந்து 37 வயதில் தனது மனைவி லீலாவதியுடன் பிழைப்பு தேடி ஊர் ஊராக சென்றவருக்கு #காளஹஸ்தி பிடித்துப் போனது.

பிழைப்பிற்கு என்ன செய்வது என்று யோசித்தார். மனைவியிடம் கலந்து ஆலோசித்ததில் உணவு தயார் செய்து பசியாற்றலாமா? என்றார் அவர்.
சின்னதாய் ஒரு வீடு பிடித்து வீட்டிலேயே இட்லி, பொங்கல், தோசை மற்றும் வடை செய்து துாக்கு சட்டியில் கொண்டு வந்து கோயில் வாசலில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அதையே இன்று வரை தொடர்கிறார்.

ஆரம்பத்தில் காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேளையும் உணவு வகைகளை தயார் செய்தார் கணேசன்.
கோவிலுக்கு போகும் வழியில் ஒட்டல் வைத்திருந்தார் முதலில்.

பிறகு கோவிலை விரிவுபடுத்தும் பணி காரணமாக ஒட்டலை இழக்க வேண்டியிருந்தது.

ஒட்டலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத கணேசன் பழையபடி கோவில் வாசலில் தள்ளு வண்டியில் வைத்து வியாபாரத்தை தொடர்கிறார்.

இப்போது காலை வியாபாரம் மட்டுமே.
Read 7 tweets
12 Apr 20
#கேரளா முதலமைச்சர் #பினராயி_விஜயன் அவர்களே. உண்மையாக நீங்கள் யார்.?

ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.
கவனம் போதும் என்று.

மறுநாள் சொன்னீர்கள் வீட்டில் ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள் என்று.
அடுத்த நாள் உணவு பொருட்கள் ரேஷன் கடை வழியா இலவசமாக கிடைக்கும் என்று.

ரேஷன் அட்டை இல்லாதோர் ஆதார் அட்டை காண்பித்து வாங்கி கொள்ளுங்கள் என்று.

அடுத்த நாள் ரூ 1000 ரேசன் கார்டு ஒன்றுக்கு என்று.

போதாமல் எல்லா வித உதவி தொகைகளும் வரும் 2 மாத காலத்திற்கு முன்பாக அளிக்கப்படும் என்று.
மறுநாளே உதவித் தொகை மக்கள் கைகளில்.

நிவாரணப் பொருட்களை காவல் துறையினரும், கலெக்டரும், எம்எல்ஏக்களும் சுமந்து சென்று வீடுகளில் சேர்ப்பது என்ன.?

மறு நாள் அனைவருக்கும் உணவு இருக்கா கிடைத்ததா என்று விசாரித்தது என்ன.?

பிறகு உங்களுக்கே மேலும் ஒரு சந்தேகம் வந்தது.?
Read 6 tweets
11 Apr 20
ஒரு சீரான கதியில் அந்த இரயில் சென்று கொண்டிருந்தது.

குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும் இதமாக இருந்தது.

நன்கு காலை நீட்டி ஜன்னல் பக்கம் தலை திருப்பி வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன் நான்.

சென்னையின் நெரிசல்களை வேகமாகப் பின் தள்ளி வண்டி வேகம் எடுத்தது.
எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்ததால் சென்னையின் அந்த "பேவரேட் வாசம்" என் நாசிக்கு நாசிக்கு எட்ட வில்லை.

பை த வே, நான் சென்னையில் வேலை பார்ப்பவன். அலுவலக வேலையாக மதுரைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

நாளை இரவே சென்னை திரும்ப வேண்டும். திருமணம் இன்னும் ஆகவில்லை.
வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை "யாரிடமும்" சிக்கிக்கொள்ளாமல்.

என் பார்வையை உள்ளே திருப்பினேன்.
என் எதிரே அமர்ந்திருந்தவர் நடுத்தர வயதில் இருந்தார்.

அவர் சாப்பிடுவதற்கும், வேலை செய்வதற்கும் நிச்சயம் சம்பந்தம் இல்லை. நல்ல தொந்தியும், தொப்பியுமாக இருந்தார்.
Read 15 tweets
8 Apr 20
வேலை முடிந்து வீட்டிற்கு போன போது மனைவி சமையலறையில் இருந்தாள். மனைவி பெயர் ஓவியா!

அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள்.

கைகளை பற்றி,"எனக்கு விவாகரத்து வேண்டும் "என்றேன்.

"ஏன்?" என்றாள் ஒற்றை வரியில் சிரித்தபடியே.
ரசத்தில் உப்பு குறைவா? அதற்கா விவகாரத்து என்றாள்.

நிச்சயமாய் அவள் அதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நடத்தையில் புரிந்தது.

அதை ரசிக்கும் மன நிலையில் நான் இருக்கவில்லை.

எப்படியாவது எனது நிலைப்பாட்டை அவளுக்குச் சொல்லியே ஆக வேண்டுமென நினைத்தேன் நான்.
"அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சாராவை இரண்டு வருடங்களாக காதலிக்கிறேன்.
விவாகரத்து வேண்டும் என்றேன்"தீர்க்கமாய்.

எதுவும் பேசவில்லை அவள்.

திடீரென நட்டாற்றில் அவளோடு என் மகனையும் விடுவதாய் மனம் குத்திக் காட்டியது.

குடியிருக்கும் வீடு, கார், மற்றும் சொத்தின் 30% அவளுக்குரியது.
Read 22 tweets