இன்று திருமுருகன் காந்தியை சந்திப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மோசமான மனித உரிமை மீறல்களை கண்டித்தும் பேசினார்.
திருமுருகன் காந்தி கடந்த திங்கட்கிழமை...
#ReleaseThirumurugaGandhi
1/5
உடல்நலக் குறைவின் காரணமாக
வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்கு திரு.வைகோ அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
முதலில் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட...
2/5
தோழர் திருமுருகன் காந்தி மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று காலையிலேயே திருமுருகன் காந்தி அவர்கள் மீது சிறையில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து முக்கியமான அறிக்கையினை திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருந்தார்.
3/5
அதன் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த அவர் திருமுருகன் காந்தியை திரும்ப அழைத்துச் செல்லும் வரை சுமார் 5 மணி நேரம் நீதிமன்ற வளாகத்திலேயே இருந்தார்.
திருமுருகன் காந்தி கைதைக் குறித்து லட்சக்கணக்கான இளைஞர்களிடம் கோப ஆவேசம் இருக்கிறது. அவரது உடல் நலத்தினை கெடுத்து,...
4/5
அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு நடந்து வருவதாக திரு.வைகோ அவர்கள் குற்றம் சாட்டினார்.
ஐயா வைகோ அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
#ReleaseThirumurugaGandhi
5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
