மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Oct 9, 2018, 6 tweets

பத்திரிக்கையாளர் #நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.

#NakkeeranGopal #நக்கீரன் @nakkheeranweb

1/6

பேரா.#நிர்மலாதேவி-ஆளுநர் #பன்வாரிலால் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக #ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற #நக்கீரன்கோபால் அவர்களை அங்கேயே கைது செய்திருக்கிறார்கள்.

2/6

ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக #நக்கீரன் கோபால் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர்...

3/6

மீதும் #தேசத்துரோகவழக்கு போடுவார்கள் என்றால் எத்தனை கோடி பேருக்கு சிறைச்சாலைகளை அரசு கட்டி வைத்திருக்கிறது? #மோடி அரசையும், தமிழ்நாட்டில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆளுநரையும், #எடப்பாடி அரசையும் எதிர்த்துப் பேசவோ எழுதவோ கூடாதென்றால் இங்கு என்ன மன்னராட்சியா நடக்கிறது?

4/6

#நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை விசாரிக்கச் சொல்வது குற்றமென்றால் அனைவரும் சேர்ந்தே தமிழக ஆளுநரை விசாரிக்க சொல்வோம்!

#நக்கீரன்கோபால் மீது ஏவப்பட்டிருக்கும் இந்த அடக்குமுறையினை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. #நக்கீரன் பத்திரிக்கைக்கும், அதன் பத்திரிக்கையாளர்களுக்கும்...
5/6

அதன் ஆசிரியர் திரு.#கோபால் அவர்களுக்கும் #மே17இயக்கம் முழுமையான ஆதரவுடன் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துரிமையினையும், ஜனநாயகத்தினையும் காத்திட இந்திய ஒன்றியம் முழுதும் உள்ள செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிணைவோம்!

6/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling