மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Nov 17, 2018, 5 tweets

#திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்கு பதிவு! சிறைக்குப் பின்னரும் அடக்குமுறையை தொடரும் அரசு!

கடந்த ஏப்ரல் மாதம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியினை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக தோழர் #ThirumuruganGandhi மீது வழக்கு பதிவு செய்து...

1/5

இன்று(17-11-18) சம்மன் அனுப்பியிருக்கிறது காவல்துறை.

ஸ்டெர்லைட் படுகொலையை ஐ.நாவில் பேசியதாக, ஆக.9ம் தேதி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று 55 நாட்கள் கழித்து விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளிவந்து 16 நாட்கள்...

2/5

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் கடந்த ஒரு மாத காலமாக Condition Bail காரணமாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு இன்று சம்மன் அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

3/5

ஆணவப் படுகொலைகளை, ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத அரசுதான் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தினை காக்க போராடியதாக வழக்கு பதிவு செய்கிறது என்றால், இந்திய அரசும், தமிழக அரசும் சாதி வெறிக்கு துணைபோகிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

4/5

சிறைக்குப் பின்பும் #மே17இயக்கம் சமரசமின்றி நிற்பதால், மேலும் அடக்குமுறையை தொடர்ச்சியாக அரசு ஏவிவருகிறது. இந்த அடக்குமுறைகளை சட்டரீதியாகவும், மக்கள் துணையோடும் எதிர்கொண்டு மே 17 இயக்கம் தொடர்ந்து சமரசமின்றி இயங்கும் என்பதை மோடி-எடப்பாடி அரசுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling