மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Feb 18, 2019, 5 tweets

#WhereIsMugilan?

ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறையை திட்டமிட்டு ஏவி துப்பாக்கிச் சூட்டை காவல்துறையே நடத்தியது எனும் ஆதாரத்தினை CCTV காட்சிகள் வழியாக 15-02-19 அன்று...

1/5

...சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணாமல் போயிருக்கிறார்.

CCTV கேமராக்களை உடைத்தது யார்? வாகனங்களுக்கு தீ வைத்தது யார்? ஆவணங்களை மாற்றி சமர்ப்பித்த அதிகாரிகள், தென்மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின்...

2/5

...நடவடிக்கைகள் குறித்தும் பல ஆதாரங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆதாரங்களை வெளியிட்டுவிட்டு ரயிலில் புறப்பட்ட அவரது தொலைபேசி திண்டிவனம் அருகே சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பண்டிருக்கிறது. தற்போது வரை தோழர் முகிலன் எங்கே என்பது தெரியவில்லை.

3/5

மக்கள் போராளியான தோழர் முகிலன் கடத்தப்பட்டிருக்கிறாரா? யார் அவரை கடத்தியது? அவர் எங்கே? எனும் கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மே 17 இயக்கத்தின் சார்பாக முன்வைக்கிறோம்.

4/5

முகிலன் அவர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனநாயக இயக்கங்களே! தோழர்களே! தோழர் முகிலனுக்காக குரலெழுப்புங்கள்!

தமிழக அரசே! பதில் சொல்! முகிலன் எங்கே?

#WhereIsMugilan?

- மே 17 இயக்கம்
9884072010

5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling