மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Mar 11, 2019, 8 tweets

பொள்ளாச்சியில் தொடர் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்ட மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

பொள்ளாச்சியில் ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான கும்பல் தொடர்ச்சியாக பல பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்தும் அவர்களை வீடியோ எடுத்து...

#ArrestPollachiRapists

1/8

...மிரட்டியும் மனித குலத்துக்கே விரோதமான மிக மோசமான செயலை மேற்கொண்டு வந்திருக்கிறது. இதனை தொடர்ச்சியாக சில பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இந்த மனித மிருகங்கள் அந்த பெண்களுக்கு செய்துள்ள கொடுமைகளைப் பற்றி கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

தற்போது இந்த கும்பலை...

2/8

...பாதுகாக்கும் வேலையில் தமிழக ஆளும் அரசை சேர்ந்த அதிகாரிகளும், அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமான சிலரும் இந்த கும்பலில் இருப்பதாகவும், அவர்களை காப்பாற்ற...

3/8

...காவல்துறை முயல்வதாகவும் குற்றச்சாட்டுகளை பல செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட செயல்கள் சமூகத்தில் தொடர்வது பெண்கள் பாதுகாப்பினை மேலும் கேள்விக்குறியாக்கும். அடுப்படியிலிருந்து வெளியே வந்து பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியான...

4/8

...அச்சத்தினை உருவாக்கி மீண்டும் அடுப்படிக்குள் அடைபடும் நிலையினை இது உருவாக்கும். இது போன்ற மிருகங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மனித குலத்திற்கே இழிவினை ஏற்படுத்திய இந்த கும்பலை அவர்களுக்கு உதவுபவர்களை ஒட்டுமொத்த சமூகமும் சமூகப்புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

5/8

ஆளும் அதிமுக இந்த கும்பலை காக்க முற்படுமானால் அந்த கட்சி தமிழ் மண்ணிலிருந்து மக்களால் முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பொள்ளாச்சியில் பெண்களை கூட்டு பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கி,...

6/8

...வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலின் ஒட்டுமொத்த வலைப்பின்னலும் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த விசாரணையில் ஆளும் அரசின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதால் சிவில் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரையும் இணைத்துக் கொண்டு...

7/8

...விசாரணையை மேற்கொள்வதே காவல்துறையின் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையின்மையை போக்கும்.

இந்த கும்பலுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படாவிட்டால், ஜனநாயக அமைப்புகளை ஒன்று திரட்டி மே 17 இயக்கம் போராட்டங்களை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

- மே 17 இயக்கம்
9884072010

8/8

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling