மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Nov 13, 2019, 8 tweets

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்; சாதி-மதவெறி IIT வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் - மே 17 இயக்கம்

@iitmadras-ல் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப்...
#JusticeForFathimaLatheef
1/8

9-11-19 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன் தற்கொலைக்கு காரணமாக சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய 3 பேராசிரியர்களை தன் செல்போன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மத ரீதியாக தான் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் ஏற்கனவே பலமுறை...

2/8

சொல்லியதாக அவரது பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர் நிறைய மதிப்பெண் எடுக்கிற மாணவி என்றும், ஆனால் ஐஐடி நிர்வாகமும், காவல்துறையும், அவர் மதிப்பெண் குறைவாக பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யை சொல்லி மடைமாற்ற முயல்வதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

3/8

இந்தியாவின் மிக உயர்ந்த நவீன கல்விக் கூடாமாக பிரதானப்படுத்தப்படும் IIT-க்குள் இப்படி சாதி-மத ஆதிக்கம் நிரம்பி வழிவதென்பது அவமானகரமானதாகும்.

மாணவியின் மரணத்திற்கு காரணமாக பேரா.பத்மநாபன் உள்ளிட்ட மூவரும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு பணி நீக்கம் செய்து, கைது செய்யப்பட வேண்டும்.

4/8

கடந்தாண்டு IIT வளாகங்களில் 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. சாதிமத ரீதியான பாகுபாட்டினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இன்னும் தொடர்வது ஏற்கவே முடியாத செயலாகும்.

IIT-க்குள் SC/ST & OBC மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் முறையாக நிரப்பப்படுகிறதா...

5/8

என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

IIT என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிற கல்விக்கூடம். ஆனால் ஐஐடி-யின் பேராசிரியர் பணியிடங்களில் 70%க்கும் மேல் உயர் சாதி மற்றும் பார்ப்பனிய பின்புலத்திலிருந்து வந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். இது களையப்பட்டு...

6/8

இடஒதுக்கீடு முறை IIT பேராசிரியர் பணிகளுக்கு முறையாக அமல்படுத்தப்படும்போது மட்டுமே இந்த பாகுபாடுகள் நிற்கும்.

சாதி மத ரீதியான ஆதிக்கத்தை நுழைக்க முற்படுகிற IIT பேராசிரியர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, மாணவி பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

7/8

இனிஒரு மாணவர் IIT-க்குள் தற்கொலை செய்வது தடுக்கப்பட வேண்டும். 3 பேராசிரியர்களும் உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

IITகளின் சமூகநீதி மறுப்பினை கேள்விக்குள்ளாக்கும் வேலைத்திட்டத்தினை கொண்ட அனைத்து கட்சி&இயக்கங்களின் கூட்டியக்கத்தையும் மே 17 இயக்கம் கோருகிறது.

8/8

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling