மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Feb 26, 2020, 9 tweets

டெல்லியை காவி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டிடு! அனைத்து கட்சி, முற்போக்கு சக்திகளே இசுலாமியர்களுடன் துணைநில்லுங்கள்! பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்திட இணைவோம்! - மே 17 இயக்கம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற...

#DelhiCAAClashes #GenocideInDelhi

1/9

வலியுறுத்தி அமைதியாக போராடி வரும் இசுலாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவி பயங்கரவாதக் கூட்டம் வெறியாட்டத்தினை துவங்கியுள்ளது. குஜராத்தில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்ததைப் போல டெல்லியில் நிகழ்த்திட திட்டமிட்டு காவி பயங்கரவாத அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

2/9

இசுலாமிய குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து தாக்கியும், தீயிட்டு கொளுத்தியும், மசூதிகளை சேதப்படுத்தியும் வருகின்றனர். டெல்லியிலிருந்து வெளிவரும் தாக்குதல் வீடியோ காட்சிகள், நாடு மாபெரும் ஆபத்தில் உள்ளதை காட்டுகிறது. இந்த வன்முறையில் இதுவரை 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

3/9

ஆனால் இந்தியப் பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

காவி தீவிரவாதிகளின் கோரப்பிடியில் இந்தியாவின் தலைநகர் சிக்கியிருக்கிறது. இந்திய பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் காவி பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தினை அனுமதித்து வேடிக்கை பார்த்து வருகிறது.

4/9

இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யும் நோக்கோடு காவி கும்பல் நடத்தும் இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு உடந்தையாக செயல்படுவதையே இது காட்டுகிறது.

இசுலாமிய மக்களின் மீதான காவி கும்பலின் தாக்குதலை இரு பிரிவினருக்கு இடையிலான கலவரமாக சித்தரிக்க ஊடகங்களும், அரசும் முயல்கிறது.

5/9

காவி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்ற உண்மையை வெளிப்படுத்துவது முக்கியம். டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இத்தாக்குதலுக்கு காரணமான காவி கும்பலுக்கு எதிராக பேசாமல், இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகவே பேசி வருகிறார்.

6/9

தாக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் பக்கம் நின்று உண்மையைப் பேசுவதே நடுநிலை. ஆனால் கெஜ்ரிவாலின் அறிக்கை எந்தவிதத்திலும் வன்முறை கும்பலுக்கு எதிர்ப்பினை பதிவு செய்யவில்லை.

இசுலாமியர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்த திட்டமிடப்படுவதை தடுக்க அனைத்து கட்சிகளும், அமைப்புகளும்,...

7/9

தொழிற்சங்கங்களும்,மாணவர்களும் இசுலாமியர்களுக்கு பாதுகாப்பிற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இந்துக்கள், கிறித்தவர்கள் என மதவேறுபாடின்றி அனைத்து மதத்தினை சேர்ந்த மக்களும் இந்த நேரத்தில் இசுலாமிய மக்களுடன் இணைந்து காவி பயங்கரவாதத்திற்கு வலிமையான எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும்.

8/9

மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட அனைத்து மக்களும் காவி பயங்கரவாதத்தினை எதிர்த்து நிற்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

இனப்படுகொலை நிகழ்ந்திட நடக்கும் சதிக்கு துணைபோகும் பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

- மே 17 இயக்கம்
9884072010

9/9

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling