KarthickPrabhakaran Profile picture
Iam a Universe Full Of Secrets 🌌 Thalaivar @Rajinikanth For Life ❤️ Forever Fan of @sachin_rt @arrahman @shankarshanmugh @undertaker

Apr 21, 2020, 8 tweets

மூனு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சின்ன சம்பவம் இது 👇🏻
உங்க எல்லாருக்கும் தெரியும் நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவுக்கு #தலைவர்ரஜினி வந்தாருன்னு
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்கலாம்னு போனோம்

வழக்கமா #தலைவர் கலந்துக்கிற எந்த விழாவா இருந்தாலும்
நானும் என் பிரெண்டும் தலைவர பாக்குறதுக்காக போவோம்
அன்னைக்கும் அப்படித்தான் போனோம் நாங்க மட்டும் இல்ல
அங்க வந்த அத்தன பேரும் தலைவர பாக்க தான் வந்திருந்தாங்க
தலைவரும் வந்தாரு விழாவே அவருக்கு தான் காத்துட்டு இருந்தது

அதனால தலைவரோட காரு நேரா உள்ள போயிருச்சு
நாங்க எல்லாரும் #தலைவர் வெளிய வரும்போது பாக்கலாம்னு
வெயிட் பண்ணிட்டு இருந்தோம்
தலைவரும் கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டாரு
வெளிய வந்த காரு ரசிகர்கள பாத்தவுடனே நின்னுருச்சு
அதாவது #தலைவர் கார நிறுத்த சொல்லிட்டாரு
அப்புறம் கேக்கவா வேணும்

போலிஸையும், PoliceBarricade-ம் தள்ளி விட்டுட்டு​ ஓடி போய் தலைவருக்கு கை கொடுக்கவும்
ஃபோட்டோ எடுக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க
நானும் என் பிரெண்டும் உள்ள பூர முயற்சி பண்ணோம் ஆனா முடியல
இருந்தாலும் நானும் என் பிரெண்டும் தலைவர பாத்து கும்பிட்டோம் தலைவரும் எங்கள பாத்து கும்பிட்டாரு

அதுக்கு அப்புறம் #தலைவர் கார் கிளம்பிடுச்சு
அவர பாத்து கும்பிடவாது செஞ்சோமே அது போதும்னு
பேசிக்கிட்டே நாங்க பைக்க எடுக்க நடந்தோம் ஆனா கொஞ்சம் தூரம் போன தலைவரோட காரு கிளம்பல
காரணம் அங்க கொஞ்சம் பேரு தலைவருக்கு கை கொடுத்துட்டும்
ஃபோட்டோ எடுத்துக்கிட்டும் இருந்தாங்க

உடனே நானும் என் பிரெண்டும் ஓடுனோம் ஆனா அதுக்குள்ள கார் கிளம்பிடுச்சு
இருந்தாலும் நாங்க கொஞ்ச தூரம் ஓடுனோம் கொஞ்சம் தூரம் ஓடிட்டு நான் நின்னுட்டன்
ஆனா என் பிரெண்டு காருக்கு பின்னாடி கொஞ்சம் தூரம் ஓடுனான் அவன் ஓடி வரத பாத்து #தலைவர் கார நிறுத்த சொல்லிட்டாரு

என் பிரெண்டு கிட்ட போனான் #தலைவர் கார் கண்ணாடிய இறக்கிட்டு கும்பிட பதிலுக்கு என் ஃப்ரெண்டும் கும்பிட்டு தலைவருக்கு கை கொடுத்தான் தலைவரும் கை கொடுத்தாரு இதெல்லாம் கொஞ்சம் தூரம் தள்ளி நின்னு பாத்துட்டு இருந்தன்
ஃப்ரெண்டோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல

யோசிச்சு பாருங்க யாராவது இது மாதிரி செய்வாங்களா
கார் கண்ணாடிய கூட இறக்கியிருக்க மாட்டாங்க
அதான் மத்தவங்களுக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசம்
அதான் நம்ம #தலைவர்
எவனாவது யார் டா உன் தலைவன்னு கேட்டா
பெருமையோட சொல்வன் இவர் தான் என் தலைவன்னு
என் #தலைவன்
#ரஜினி_ஒரு_சகாப்தம் 😇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling