KarthickPrabhakaran Profile picture
Iam a Universe Full Of Secrets 🌌 Thalaivar @Rajinikanth For Life ❤️ Forever Fan of @sachin_rt @arrahman @shankarshanmugh @undertaker

Jun 28, 2020, 14 tweets

பலபேருக்கு தெரியாத பலவருசத்துக்கு முன்னாடி நடந்த உண்மை சம்பவம் இது

ஒரு நைட் டைம் பீச் ரோடுல
ஒருத்தர் தள்ளாடி தள்ளாடி நடந்து போயிட்டு இருக்காரு கொஞ்சதூரம் பின்னாடி ஒரு கார் வந்துட்டு இருக்கு
தள்ளாடி நடந்து போயிட்டு இருந்த அந்த நபர் நடக்க முடியாம கீழ விழ

பின்னாடி வந்த அந்த கார் அவர் கீழ விழுறத பாத்துட்டு நிக்க கார் உரிமையாளர் தன்னோட டிரைவர் கிட்ட சொல்லி என்னன்னு பாக்க சொல்ல அந்த டிரைவரும் கிட்ட போய் பாத்துட்டு திரும்ப வந்து கார் உரிமையாளர் கிட்ட அவர் குடிச்சிருக்காரு அதான் நடக்க முடியாம தள்ளாடி கீழ விழுந்திருக்காருன்னு சொல்ல

உடனே கார் உரிமையாளர் வாட்டர் பாட்டல கொடுத்து அவர எழுப்பி யாரு என்னன்னு கேளுங்கன்னு சொல்ல அந்த டிரைவரும் முதலாளி சொன்ன மாதிரி
அந்த நபர் கிட்ட போய் முகத்துல தண்ணிய தெளிச்சு கைத்தாங்கலா தூக்கி ஒக்கார வெச்சு யாரு என்னன்னு கேக்க அவர் தட்டு தடுமாறி தன்னோட அட்ரஸ சொல்ல

உடனே அந்த டிரைவர் தன்னோட முதலாளி கிட்ட வந்து சொல்ல கார் உரிமையாளர் சரி அவர கூட்டிட்டு வாங்கன்னு சொல்ல டிரைவரும் அவர கூட்டிட்டு வந்து கார்ல ஒக்கார வெச்சு அவர் சொன்ன அட்ரஸுக்கு போய் அவர் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி கார நிப்பாட்டி அந்த டிரைவர் அந்த நபர கைத்தாங்கலா கூட்டிட்டு வந்து

அவர் வீட்டு வாசல் ல ஒக்கார வெச்சுட்டு காலிங் பெல்ல அழுத்த உள்ள இருந்து ஒரு பெண் வந்து யாரு என்னன்னு கேக்க அந்த டிரைவர் நடந்தத சொல்ல அந்த பெண் பதறி போய் அவர் எங்க வீட்டுக்காரர் தான் ரொம்ப நன்றிங்கன்னு சொல்ல ஏன் இப்படி
குடிச்சிருக்காரு எதாவது பிரச்சனையா என்ன காரணம்னு

தன்னோட முதலாளி கேக்க சொன்னத கேக்க அதுக்கு அந்த பெண் நாளைக்கு எங்க மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை பெரிய இடம் ரொம்ப செல்வாக்கான குடும்பம் விடிஞ்சா கல்யாணம் எல்லாரும் மண்டபத்துல தான் இருக்காங்க மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணையா கொடுக்க வேண்டிய பணத்துல பாக்கி அஞ்சு லட்ச ரூபா இருக்கு

அந்த பணத்த நாளைக்கு மண்டபத்துல கொடுத்தாகனும் கடைசி நேரத்துல அந்த பணம் கிடைக்கல நான் எப்படியாவது பணத்த ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன் போனாரு பாத்தா இப்படி குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடந்திருக்காரு நாளைக்கு என்ன பண்ண போறோம்னு தெரியலன்னு சொல்லி அழ

உடனே அந்த விசயத்த திரும்ப வந்து கார் உரிமையாளர் கிட்ட சொல்ல அந்த கார் உரிமையாளர் சொல்ல சொன்னத திரும்ப அந்த டிரைவர் வீட்டுக்கு வந்து கவலபடாதீங்கமா நம்பிக்கையோட இருங்க கடவுள் யார் மூலமா உதவி செய்வாருன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்ப

மறுநாள் மண்டபத்துல பெரிய ஆளுங்க , அரசியல்வாதிங்க ஸ்டாலின் உள்பட பலபேரு வந்திருக்க பணம் கிடைக்காம கணவனும் மனைவியும் என்ன செய்றதுன்னு தெரியாம கைய பிசைஞ்சுட்டு இருக்கும்போது அந்த டிரைவர் கார நிறுத்திட்டு மண்டபத்துக்குள்ள ஒரு தட்டோட வர

அந்த பெண் நேத்து உங்கள கூட்டிட்டு வந்து விட்டவர் இவர் தான்னு சொல்ல அந்த டிரைவர் தட்டுல போத்தியிருந்த துணிய விலக்க அதுல பணக்கட்டும் ஒரு லெட்டரும் இருக்க அந்த லெட்டர எடுத்து அவங்க படிக்க
அந்த லெட்டர் ல

"நேற்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியும் நான் தான் உங்கள கூட்டிட்டு போய் உங்க வீட்டுல விட சொன்னேன் உங்க மனைவி நடந்த விசயத்த என்னோட டிரைவர் கிட்ட சொன்னாங்க இதுல உங்களுக்கு தேவையான அஞ்சு லட்சம் பணமும் அதோட மணமக்களுக்கான கல்யாணபரிசும் இருக்கு
'God Bless'

இப்படிக்குன்னு ஒரு பேர் போட்டிருந்தது அந்த பெயர் #ரஜினிகாந்த் "
இந்த விசயம் மண்டபத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு ஒரே பரபரப்பு நடிகர் ரஜினிகாந்தே தன்ன ரோட்டுல இருந்து கூட்டிட்டு வந்து பத்திரமா வீட்டுல விட்டு
விட்டுட்டு தன்னோட தேவைய உணர்ந்து தக்க சமயத்துல எதிர்ப்பார்க்காத

பெரிய உதவிய செஞ்சத நினைச்சு அந்த நபரும் மண்டபத்துல இருந்தவங்களும் மெய்சிலிர்த்து போனாங்க இந்த உண்ம சம்பவத்த தான் பாட்சா படத்துல ஆரம்ப காட்சியில வேற மாதிரி வெச்சிருப்பாங்க இப்படி வெளிஉலகத்துக்கு தெரியாத பல சம்பவங்கள் உண்டு
Man With Golden Heart 💛
#Thalaivar For a Reason 🤘🏻

[ நான் ஸ்கூல் படிக்கும்போது பத்திரிகையில் படித்தது ]

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling