பெங்களூர் கலவரத்தில் அங்கு வசிக்கு தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. கலவரக்காரர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த கலவரத்தையும், கலவரக்காரர்களை கண்டிக்க துணிவின்றி இருக்கின்றனர் என்பது என் கருத்து. (1)
தேவர் ஜீவனஹள்ளி மலர்மதி கூறுவது "எங்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கொளுத்த 4 பேர் வந்தார்கள். நான் வெளியே போய், "நாங்கள் மிகவும் ஏழைகள். இந்த வண்டியில் தான் வேலைக்கு போய் வருகிறேன். தயவுசெய்து நெருப்பு வைக்க வேண்டாம் என கை எடுத்து கும்பிட்டேன். (2)
என்னையும் சேர்த்து தீ வைத்து விடுவதாக மிரட்டி, உள்ளே தள்ளிவிட்டனர். கஷ்டப்பட்டு காசு சேர்த்து கடந்த ஆண்டு புதிதாக வாங்கிய வண்டியை எரித்துவிட்டார்கள்" என கண்ணீரோடு கூறினார். தமிழர்கள் வாழும் வீடுகளில் புகுந்து டிவி, பீரோ, ப்ரிட்ஜ், மர சாமான்களை சேதப்படுத்தியுள்ளனர் கலவரக்காரர்கள்.
இரும்பு கம்பி, உருட்டு கட்டை ஆகியவற்றால் தாக்கியதால் 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 20 பேர் பெண்களும், வயதானவர்களும் ஆவார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் போதையில் இருந்தனர். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட் டிருந்த கார், வேன், ஆட்டோ, இரு (4)
சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். தடுக்க முயற்சித்தவர்களை கத்தியை காட்டி வெட்டி விடுவதாக மிரட்டினர். ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் என்கிறார் அப்பகுதி சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன். (5/5)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
