கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம்
கடந்த புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட தரவுகளில் தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கீனி மீனி (#KeenieMeenie)...
1/8
...என்ற நிறுவனம், 1980களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது என்ற ஒப்பந்தமிட்டுருந்தாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றொரு ஆயுதக்குழுவாக அது செயல்பட்டது. இலங்கை ராணுவத்தினரோடு இணைந்து புலிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.
2/8
கீனி மீனி கூலிப்படையினர் ஈவு இரக்கமற்று செயல்பட்டுள்ளனர். அதில் ஒன்றாக, 1986 ஜூன் 7 அன்று, ஒரு பேருந்தில் பொதுமக்களோடு புலிகளும் செல்கின்றனர் என்ற சந்தேகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அப்பேருந்தை சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.
3/8
இந்த தகவல்களை இங்கிலாந்து அரசு தாமதமாக வெளியிட்டுள்ளதால் இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பலர் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பியுள்ளனர். கீனி மீனியின் அப்போதைய தலைவர் ஜிம் ஜான்சன், இலங்கைக்கான மேலாளர் பிரையன் பேட்டி (Brian Baty) ஆகியோர் விசாரிக்கப்படாமலே இறந்துவிட்டனர்.
4/8
இது குறித்த பல்வேறு தகவல்களை திரட்டிய இங்கிலாந்தை சேர்ந்த பில் மில்லர் (@pmillerinfo), "Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் ஆவணப்படம் ஒன்றும் வெளிவர உள்ளது. பில் மில்லர் தமிழீழ இனப்படுகொலையில் ஈடுபட்ட...
5/8
...இங்கிலாந்து அரசை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறவர். இவரது ஆய்வுகளை, மே 17 இயக்கம் வெளியிட்ட "தமிழினப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு" என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளோம். மேலும், 2018-இல் தோழர் @thiruja மீது UAPA வழக்கு பாய்ந்த போது, அறிக்கை வெளியிட்டு ஆதரவளித்தவர்.
6/8
பில் மில்லர் வெளியிட்ட தகவல்களை கொண்டு கூலிப்படையினர் குறித்த ஐநா சிறப்பு பிரிவுக்கு @TamilInfoCentre கடிதம் எழுத, ஐநாவின் 6 சிறப்பு அதிகாரிகள் பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதியுள்ளனர். இங்கிலாந்து அரசு அதிகாரிகளின் நேரடி பங்கு குறித்து கேள்வியெழும்பிய நிலையில்,...
7/8
தற்போது பெருநகர காவல்துறை, தமிழர்களை கொன்ற கூலிப்படையினர் மீது விசாரணையை துவங்கியுள்ளது.
இவ்விசாரணைக்கு தேவையான ஆவணங்களை வழங்கி, விசாரணை முறையாக நடைபெற ஒத்துழைக்க வேண்டுமென நீதி வேண்டி போராடும் தமிழர்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.
மேலும் அறிய:
tamilguardian.com/content/britis…
8/8
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
