ஸ்விகி பணியாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! - மே 17 இயக்கம்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க மறுப்பதோடு, தொடர் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற காரணங்களால் @swiggy_in நிர்வாகத்திற்கு எதிராக அதன் பணியாளர்கள்...
#Swiggy
#SwiggyStrike
1/7
கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்புகளற்ற சூழலில் பெரும்பாலும் பட்டதாரிகளே இந்த பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தி அவர்கள் உழைப்பை சுரண்டும் வேலையை ஸ்விகி நிர்வாகம் செய்கிறது. இது குறித்து சிலர் முறையிட்ட போது...
2/7
பணியாளர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நிர்வாகம் தரக்குறைவாக நடத்தியுள்ளது.
ஸ்விகி நிர்வாகத்தின் இது போன்ற செயல்களை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பணியாளர்களின் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவளிக்கிறது. தொடர் போராட்டம் வெல்லும் வரை பணியாளர்களுக்கு...
3/7
துணை நிற்போம் என உறுதியளிக்கிறது.
ஸ்விகி நிர்வாகமே!
- பணி ஒப்பந்தத்தின் போது வழங்கப்பட்ட ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியமாக உறுதி செய்து, பணி செய்த காலத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கிடு
- பணியாளர் உரிமை சட்டத்தின் கீழ் வேலை நேரத்தையும், அதற்கேற்றவாறு வேலைப்பளுவையும் குறைத்திடு
4/7
- வேலை நேரத்திற்கு மேல் பணி செய்பவர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும், ஊக்கத்தொகையும் வழங்கிடு
- பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதை நிறுத்தி, சுயமரியாதை பாதிக்காதவண்ணம் மரியாதையுடன் நடத்திடு
தமிழக அரசே!
- ஸ்விகி நிர்வாகத்திற்கு எதிரான பணியாளர்களின் போராட்டத்தில் உடனடியாக தலையிடு
5/7
- பணியாளர்கள் உரிமை சட்டத்தினை ஸ்விகி நிர்வாகம் முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடு!
- பணியாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்!
- பட்டதாரி பணியாளர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையை செய்யும் வகையில் தகுந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடு!
6/7
போராடும் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவர்களது சேவையை பெரும் நம் அனைவரது கடமை. ஆகவே, போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
-
மே பதினேழு இயக்கம்
9884072010
7/7
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
