நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே,
உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க?
ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கமுடியுமா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கலாம்.
1/15
ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் எல்லோரும் ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலை செய்யலாமா இல்லையா?
ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் அங்கே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலைக்கு சேரமுடியும்.
2/15
சரி, ஓட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அது எப்படிண்ணே விடுவாங்க?
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரனா வேலை செய்யலாம், செய்யலாமா இல்லையா?
தாராளமா செய்யலாண்ணே.
3/15
சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரானக அங்கே வேலையில் சேர்ந்து போகலாம்.
சமையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் செய்யமுடியுமா?
அதெப்படிண்ணே எல்லாருமே சமையல் செய்யலாமே.
4/15
ஆரோக்கியமா இருக்கிறவன், ஓட்டலில் சரக்கு மாஸ்டரா தொழில் தெரிஞ்சவன் எல்லோரும் ஓட்டலின் சமையலறையில் வேலை செய்யலாம். இது சரியா தப்பா?
ஆமாண்ணே ரொம்ப சரிண்ணே.
5/15
அது சரி பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க.
பாங்க் காஷியர பயிற்சி பெற்றவன் எல்லோரும் பாங்க் காஷியரா வங்கி வேலைக்கு அமர்த்தலாம் அப்படிப்பட்டவன் உள்ளே போகலாமா?
ஆமாண்ணே போகலாம்.
6/15
பாங்க் காஷியராக வேலைக்கு சேர ஒரே ஒரு இனத்துக்கு மட்டும்தான் வேலைக்கு தகுதி உண்டா?
அதெப்படிண்ணே படித்த, தகுதியுள்ள அணைவரும் வங்கியில் காஷியரா வேலைக்கு சேரலாம்.
பாங்க் காஷியரா ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் வேலை செய்யமுடியுமா?
7/15
அதெப்படிண்ணே படித்த தகுதியுள்ள எல்லோருமே பாங்க் காஷியரா வேலைக்கு சேரலாம்.
தியேட்டரில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா, ஓட்டலில் சமையல்காரனாக, பாங்க் காஷியரா எங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம், சாதியை குறிப்பா சொல்லப்போனா பாப்பான் மட்டும்தான் வேலை செய்கிறானா?
8/15
இல்லைண்ணே நீங்க சொல்லுகிற எல்லா இடத்திலுமே எல்லா சாதியை சேர்ந்தவர்களும் முறையா பயிற்சி பெற்று அங்கு பணியில் அமர்த்தப்பட்டால் உள்ளே போகலாம், வேலையும் செய்யலாம்.
கோவிலுக்குள் நீ போகலாமா?
ஓ தாராளமா போகலாம் அண்ணே.
9/15
முதலில் உங்க அப்ப, தாத்தா காலத்துல எல்லாம் ஏன் கோவிலுக்குள்ளேயே போகவிடலை?
ஏண்ணே அப்ப போகவிடல?
கோவில் கருவரைக்குள் நீ போக முடியுமா?
அதெப்படிண்ணே முடியும்?
ஏண்டா கருவறைக்குள்ள மட்டும் பாப்பானுங்க மட்டும்தான் போகணும்ன்னு கட்டுப்பாடு?
10/15
அண்ணே, அவனுங்களுக்கு மட்டும்தாண்ணே சமஸ்கிரித மந்திரங்கள் தெரியும்.
சமஸ்கிரிதம் உனக்குத் தெரியுமா?
தெரியாதுண்ணே.
அங்கே பூசை பன்னுற பாப்பான் எவனுக்காவது சமஸ்கிரிதம் நல்லா தெரியுமா?
தெரியாதுண்ணே.
11/15
கோவிலில் அர்சகரா வேலை செய்யுற எந்த பாப்பானுக்காவது சமஸ்கிரிதம் தாய் மொழியா?
இல்லேண்ணே.
தமிழ்நாட்டில் சமஸ்கிரிதம் எங்கேயும் பேச்சு வழக்கில் உண்டா?
இல்லவே இல்லை இல்லேண்ணே.
12/15
சமஸ்கிரித மொழியிலதான் ஓதனும்னு எந்த கடவுளாவது சொல்லுச்சா?
அதெப்படிண்ணே சொல்லும்? அப்படியெல்லாம் எந்தக் கடவுளும் சொல்லாதுண்ணே.
ஏண்டா உனக்கும் தெரியாத, அதை ஓதுகிற பாப்பானுக்கும் தெரியாத சமஸ்கிரிதம் நமக்கு எதுக்குடா?
13/15
கோவில் கருவரைக்குள்ள முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் கருவரைக்குள்ள போறதுக்கு அரசே சட்டம் இயற்றி இருக்கு.
தமிழகத்து கோவில்கள் எல்லாமே தமிழர்கள் கட்டியது.
முன்பு தமிழகத்து கோவில்களில் சைவத் திருமுறைகள் மட்டுமே ஓதப்பட்டது.
14/15
கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல பார்பணர்கள் சூழ்ச்சியால் கோவிலை கைப்பற்றிக் கொண்டவர்கள்.
மண்ணையா, டேய் இப்ப சொல்லுடா முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் அர்சகரா கருவரைக்குள்ள போறதுக்கு முடியுமா?
நல்லா பேஷா போவலாம் அண்ணே!
15/15
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
