மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Sep 11, 2020, 7 tweets

சாதி ஒழிப்பு போராளி ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராட உறுதியேற்போம்!

இம்மானுவேல் சேகரனார் அவர்கள், பட்டியலின மக்களை சமமாக நடத்த கோரியும், இரட்டை குவளை முறையை ஒழிக்க தனது 19ஆம் வயதில் மாநாட்டை நடத்தியவர். 1953இல்...

1/7

ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை துவக்கி, இராமநாதபுரம் பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களில், சாதி ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரின் வளர்ச்சி அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

2/7

1957ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ஒட்டி, பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, ஆதிக்க சாதியை சேர்ந்த கூட்டத்தினரால் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரனாரின் சமூகப்போராட்டம் முடிவுற, ராமநாதபுர மாவட்டத்தின்...

3/7

சட்டம் ஓழுங்கு சீர்குலைந்தது. பின் பெரும் கலவரம் வெடிக்க, அதுவே முதுகுளத்தூர் கலவரம் என்றானது.

ஆரியன் வகுத்த சாதியை தூக்கி சுமந்து தன்னோடு வாழும் சக மனிதனை தீண்டத்தகாதவனாக கருதி, அவன் உரிமைகளை தடுத்து தனக்கு கீழ் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களிடம்,

4/7

நாம் மனிதர்கள், நீயும் நானும் சமமாக வாழ வேண்டும், என்று சமுகநீதியையும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேசினால் ஆதிக்க சாதியினர் வன்முறையை பரிசாக வழங்குகின்றனர்.

பிறப்பால் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்...

5/7

சகமனிதனை கீழானவனாக நடத்தக்கூடிய மனநோயாக சாதி இன்றளவும் பலரிடம் ஊறிப்போய் உள்ளது. பார்ப்பனியத்தின் ஊன்றுகோலாக தமிழ் சமூகத்தை பிடித்திருக்கும் சாதி இன்று காவி பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. இச்சூழலில், சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இமானுவேல் சேகரனின் வரலாறு நமக்கு ஒரு படிப்பினை.

6/7

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட ஐயா இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் செய்த சமூகப்பணிகளை நினைவு கூறுவோம்!

தியாகி இமானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling