கோ.செந்தில்குமார் (மோடி வகையறா) Profile picture
| தமிழன் | இந்து | பாரதியன் | Belongs to Pure Tamilian Stock.

Sep 14, 2020, 10 tweets

இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிந்துவிட்டது.

இதில் Rank வாங்கி,
மருத்துவ படிப்பில் சேரப்போகும் மாணவர்கள் முழுக்க தமிழர்கள் மட்டும்தான்.

அனைவருமே சிறந்த மாணவர்களாக மட்டுமே இருப்பார்கள்.

அனைவருமே இடஒதுக்கீடு அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேறென்ன வேணும்?!
#NEET

இனி..
கல்வித்தரம் குறைந்த ஒரு மாணவன, கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து மெடிகல்சீட்டு வாங்கமுடியாது.

பேப்பர் சேஸ் பண்ணி மார்க் வாங்கி, மெடிகல்சீட்டு வாங்க முடியாது.

"பிராய்லர் கோழி வளர்ப்புமுறை"யில் படித்தும், மொன்னை மனப்பாடத்திலும் மெடிகல் சீட் வாங்க முடியாது.

வேறென்ன வேணும்?
#NEET

நீட் தேர்வுக்கு முன்பும் மெடிகல் படிப்பு ஏழைக்கு எட்டாக்கனி தான்.

நீட் வந்த பிறகுதான்..
ஏழை/அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
தமிழகஅரசு "நீட் பயிற்சி வகுப்புகளை" துவக்கியது.
7.5% உள்ஒதுக்கீடும் செய்தது.

இவை நீட் தேர்வால் விளைந்த நன்மைகள்.
#NEET

+2 மார்க் அடிப்படையில் மெடிகல் சீட்டுகள் நிரப்பப்பட்டபோது..
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10,000பேர்களோடு மெடிகல் சீட்டுக்கான வாய்ப்பு முடிந்துவிடுகிறது.

நீட்/நுழைவுத்தேர்வு அடிப்படையில் மெடிகல் சீட் தரப்படும்போது..
2லட்சம் மாணவர்களுக்கும் மறுவாய்ப்பு கிடைக்கிறது.
#NEET

முறையாக/முழுமையாக கற்பிக்கப்படும் போது..
தமிழக மாணவர்கள் NEET தேர்வில் தமிழக சீட்கள் மட்டுமின்றி All India சீட்டுகளையும் அள்ளுவார்கள்.
#NEET

நீட் வந்தபிறகு "கோச்சிங்" எனும் கூடுதல் சுமை ஏற்பட்டிருப்பதாக சிலர் பொங்குகிறார்கள்!

நீட்டுக்கு முன்பு கோச்சிங் என்பதே இல்லையா?

+1ல் இருந்தே +2 பாடத்துக்கு கோச்சிங்,
சம்மர் கோச்சிங்,
லீவிலும் கோச்சிங்,
தூங்கவிடாமல் கோச்சிங் என தனியார்பள்ளிகள் நடத்தியவை எல்லாம் கொடூர ரகம்.
#NEET

இன்றைய +2 மதிப்பெண்கள்..
பிராய்லர் கோழிப்பண்ணை பள்ளிகள்,
அட்டை டூ அட்டை மொன்னை மனப்பாட முறை,
பேப்பர் சேசிங் முறைகேடு போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதாலும்..

தனியார் மருத்துவகல்லூரிகளின் ஏகபோக/கட்டண கொள்ளையை தடுக்கவேண்டி இருப்பதாலும்..
நீட் போன்ற தகுதித்தேர்வு அவசியம்தான்.
#NEET

தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் NEET தேர்வு எழுதினாலும்,
அவர்களில் இருந்து 7,000 பேருக்கு மட்டுமே மெடிக்கல் சீட்டுகள் கிடைக்கும் என்பதை.. மாணவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரிய வையுங்கள் மீடியாக்களே!

தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்படலாம்.
#NEET

நீட் தேர்வினால் நிஜமாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்:

1.பிராய்லர் கோழிப்பண்ணை பள்ளிகளின் ஓனர்கள்.
2.கோடிகளில் டொனேஷன் வாங்கிய தனியார் மருத்துவக்கல்லூரி ஓனர்கள்.
3.தமது மக்குப்பிள்ளைகளை டாக்டராக ஆக்கமுடியாமல் தவிக்கும் இந்நாள் டாக்டர்கள்.
4.இவர்களால் ஆதாயம் அடைகின்ற திமுக.
#NEET

நீட் தேர்வின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளை, தமிழக மாணவர்கள் சீக்கிரமாகவே முழுமையாக புரிந்துகொள்வார்கள்.

அதன்பிறகு..
இந்த அரைவேக்காட்டு பிணம் திண்ணி அரசியல்வாதிகள் 'நீட் தேர்வை' ரத்து செய்ய முயன்றால்..
அதை மாணவர்களே கடுமையாக எதிர்ப்பார்கள்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
🙏🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling