KarthickPrabhakaran Profile picture
Iam a Universe Full Of Secrets 🌌 Thalaivar @Rajinikanth For Life ❤️ Forever Fan of @sachin_rt @arrahman @shankarshanmugh @undertaker

Sep 15, 2020, 8 tweets

கிழக்கு வாசல் பட வெள்ளி விழாவுல கலந்து கிட்ட தலைவர் #ரஜினி
நான் இன்னும் மூனு,நாலு வருஷத்துல படத்துல நடிக்கிறத குறைச்சுக்க போறன்
பிரபு, கார்த்திக், ராம்கின்னு இப்ப இருக்க நடிகர்கள் நிறைய படங்கள் நடிச்சு இன்னும் மேல வளர்ந்து வரணும் அதனால இந்த முடிவ எடுத்துருக்கன்னு தலைவர் சொன்னார்

சொன்ன மாதிரியே படங்கள குறைக்க ஆரம்பிச்சார்
90-களுக்கு முன்னாடி வரை வருஷத்துக்கு 7,8 படங்கள் நடிச்சுட்டு இருந்த தலைவர் ரஜினி
90-களுக்கு பிறகு வருஷத்துக்கு 3 படம் 2 படம் நடிக்க ஆரம்பிச்சு
95-க்கு பிறகு அத இன்னும் குறைச்சு வருஷத்துக்கு 1 படம் ரெண்டு வருஷத்துக்கு 1 படம்ன்னு

குறைச்சுக்க ஆரம்பிச்சாரு அதுக்கு காரணம் அடுத்து வந்த நடிகர்களான பிரசாந்த், விஜய்,அஜித் மாதிரியான நடிகர்கள் வளர்ந்து முன்னுக்கு வரணும்னு
2000-த்துக்கு அப்பறம் தலைவர் நேரடியா நடிச்ச படங்களோ எண்ணிக்கை 12 அதாவது 20 வருஷத்துல தலைவர் நடிச்ச படம் வெறும் 12 மட்டும் தான்

தலைவர் நினைச்சிருந்தா தொடர்ந்து எப்பவும் போல படங்கள் நடிச்சுட்டே இருந்திருக்கலாம் அவர வெச்சு எப்படியாவது ஒரு படம் இயக்கிடணும்னு பல இயக்குனர்கள் தவமா தவம் இருந்துட்டு இருந்தாங்க
ஆனா #தலைவர் அத செய்யல

தலைவர் ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்
மூனு வருஷத்துக்கு ஒரு படம்ன்னு நடிக்க ஆரம்பிச்ச காலகட்டத்துல தான் இன்னைக்கு இருக்க பல நடிகர்கள் வளர காரணமா அமைஞ்சது

"ரஜினி சார் பழைய மாதிரி படங்கள் நடிக்கிறதில்ல அதனால தான் எங்க பொழப்பு ஓடுது அவர் ரெண்டு வருஷம் மூனு வருஷம்ன்னு கேப் விடாம தொடர்ந்து படங்கள் நடிச்சுட்டுருந்தா எங்க கத அவ்வளவு தான்
ஒரு பேட்டியில நடிகர் விஜய் சொன்னது

அதுதான் உண்ம மத்தவங்க வளரணும்னு விட்டு கொடுத்தவரு தலைவர்
அது தான் தலைவரோட பெருந்தன்மை

[ பத்து வருஷத்துக்கு முன்னாடி பழைய ஐடியில போட்ட பதிவு #மறுபதிவு ]

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling