நமது சமகாலத்தில் மாபெரும் போர் சூழலில் வாழ்ந்து, தனது கண் முன்னே இன உறவுகளை எதிரியின் குண்டுமழைக்கு இரையாய் கொடுத்து, ஏதிலிகளாய் அண்டம் எங்கும் பரவி, தனது அயராத உழைப்பால் பொருளீட்டி போரினை தொடர உதவி, இன்றும் அதே பெருங்கனவோடு நிற்கும் தமிழீழ இன சொந்தங்களின் வடுவை 1/6
#தமிழீழம் 🔥
போர் சூழலலை நேரில் கண்டு அறிந்திறாது, வெறும் அரசியல் அடிமை தனத்தையும், இன உரிமை மீட்சிக்காகவும் போராடும் நம்மோடு ஒப்பிடுவது சரிதானா!
தமிழ் தேசிய அரசியலின் தத்துவத்தை படிக்காமல், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் இலக்கை அறியாமல் கண்மூடி துதிபாடும் மூடர்களின் இதுபோன்ற பதிவுகள்..2/6
தமிழ்தேசிய அரசியலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் நிச்சயமாக வலு சேர்க்காது. மாறாக நம் மேல் வெறுப்பை தான் விதைக்கும்,
குறிப்பாக அந்த கடைசி வரி. 😡
வெறுமனே தலைவர் பிரபாகரனை கொண்டாட இங்கு எவனும் வரவில்லை, அவரது விடுதலை கனவு எனும் புனித இலக்கை நோக்கிய பயணம் இது என்ற, 3/6
புரிதலே இல்லாமல் "துதிபாடும் கூட்டத்தை கடந்து செல்வோம் என்பது, காலில் ஆணி அடித்து விட்டு நடந்து செல்வோம், என்பதற்கு சமம்".
எனவே, தத்துவம் தான் நம்மை வெல்ல வைக்கும், என்ற சீமான் அண்ணனின் வார்த்தையை நினைவு கூர்ந்து, அதை நோக்கிய பயணம் தான் பலன் தரும் என உணர வேண்டிய தருணம், இது.4/6
வலையொளி பின்னூட்டங்களில் பதிலளிப்பதாக நினைத்து துளியும் தத்துவ புரிதலின்றி, உளறி வைத்திருக்கும் இது போன்ற நபர்களை எப்போதும் போல கடந்து செல்லவே விரும்பினேன்!
ஆனால் இப்படி நமது கட்சிக்கு ஆதரவளிக்க, தலைவரை மரியாதையற்று பேசுவதும், ஈழத்தமிழ் உறவுகளை கொச்சைப் படுத்துவதும், 5/6
உதாரணம் எனும் பெயரில் கட்சி விட்டு போவதை விவாகரத்தோடு ஒப்பிட்டு, பெண்களை கொச்சைபடுத்தி, தமிழ்த்தேசிய அரசியலை பெண்சுகத்தோடு ஒப்பிடுவது தனது அரசியலை தானே அசிங்கப்படுத்தி கொள்வது என்று புரிதலற்ற நிலையை காட்டியதும், இதையே பல அறிவிழிகள் உதாரணமாக சொல்வதாலும் தான் இந்த பதிவு. 🙏 6/6
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
