Indu Makkal Katchi (off) Profile picture
Voice of Hindu Tamils

Sep 23, 2020, 5 tweets

"புரட்சி என்பது மரபுகளை மாற்றுவது இல்லை மரபுகளை பலப்படுத்தல்" என்று ஒரு பதிவின் மறுமொழியில் ஒருவர் எழுதுகிறார். ஆகா பிரமாதம் என்று மற்றொருவர் அதை ஆமோதிக்கிறார். அட, நல்ல சூப்பர் தத்து(பித்து)வமா இருக்கே என்று சிலர்.

மரணக் காமெடி என்றால் இதுதான்.

"புரட்சி" என்ற சொல்லையே பாரதியார் தான் உருவாக்கினார்.

அதற்கு முன்பு அந்தச் சொல் தமிழில் கிடையாது. புரள் என்ற வினைச்சொல்லிலிருந்து அது வருகிறது - புரட்டுதல், தலைகீழாக்குதல், புதுமை, மாற்றம், upsetting, overturning என்பதே அதன் பொருள்.

Revolution என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒரு சக்திமிகுந்த சொல்லாக பாரதி அதைப் பயன்படுத்தினார். அதற்கு இப்படி 180 degree முற்றிலும் நேர்மாறான ஒரு பொருளைக் கற்பனை செய்து இந்த நண்பர் கூறுகிறார்.

மிருகவதை என்றால் ஜீவகாருண்யம் என்று பொருள் சொல்வது போல இது :) இத்தகைய பொருள்கூறல்களையும் தமிழ்நாட்டில் மிகப்பலர் ரசிப்பார்கள் என்பது தான் கொடுமை.

Source : Jaatayu.

FB : facebook.com/10000429624199…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling