Daily X Updates Profile picture
Daily news and updates about X. Not affiliated with X Corp.

Sep 26, 2020, 5 tweets

🌺மகளே... நான் போதாதோ...🌺

🥀என் மகள்…🥀

செவியில் பாயுஞ் செந்தேனது
புவியிற் பிறந்து புதிரானது;
அன்னை என்றனுக் கன்பானது
என்னைப் படுத்தும் என்மானது!

கம்பனே சற்றே கண்மூடிடு...
செம்பென மிளிரும் செவ்வழகை
கண்விட மறுக்கும் கலையழகை...
எண்ணி எண்ணியே கவிபாடிடு!

கண்ண தாசனே கேளடா
எண்ண வீணையை மீட்டுடா....
சில்லென வீசும் சாரலை
சிறுநெருஞ்சி இடையைப் பாடடா!

வாலி சற்றிங்கே வாநீ
கேலிச் சொல்லதிலே தான்நீ...
கீதமது பாடிடவுங் கூடும்
தேகமதுந் துவண்டிடும் போதும்!

வைர முத்துவே வாடா
வைர வரிகளைத் தாடா...

கிராமத்து நளினமதைக் காட்டி
பாடவளின் அழகுக்குப் போட்டி!

ஔவைக் கிழவியே வாடி
சங்கக் கவிதைகள் தாடி...
துள்ளிடு மானினைப் பாடி
வர்ணித்து மயங்குவை யோடி!

காள மேகமே எங்கே
கண்கள் தேடுதே இங்கே...
சிலேடைச் சொல்லதுவும் வாழக்
கவிபாடு பாரிவளைத் தேட!

நக்கீர னவனிங்கே வேண்டாம்
சொக்கிடத்தா னவனிங்கு வேண்டாம்...
பொற்சிலையின் பொங்கு வனப்பையுங்
கற்சிலையாக் காணுவனே வேண்டாம்!

ஆசைகள் கோடியடி மகளே
ஆசுகவிகள் உன்னழகைப் பாட...
கொடுத்துவைக்க வில்லையடி கண்ணே
போகட்டும் கவிக்குழல் போதாதோ!!!

🌿கவிக்குழல்🌿

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling