மே பதினேழு இயக்கம் Profile picture
அதிகாரப்பூர்வ கணக்கு | Official handle | Join Us: https://t.co/xKm4WgNs7I | https://t.co/guZWBM2hoE | https://t.co/P23lHH3hGg | Follow @May17Kural @ThisaiBookStore #May17Movement

Sep 29, 2020, 5 tweets

தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்

தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...

1/5

...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...

2/5

...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.

இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5

...ஆணையரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு நியமிக்காமல் இருக்கிறது. இதனால் இந்த ஆணையம் செயல்படாமல் இருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல ஒரு சூழ்நிலையை SC/ST மக்களுக்கும் செய்வதற்காகத் தான்...

4/5

தமிழக அரசு SC/ST ஆணைய கூட்டத்தை கூட்டாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாமல் இருக்க தமிழக அரசு SC/ST ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும் இதுவரை ஏன் நடத்தவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும் என மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling