Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Sep 30, 2020, 15 tweets

🌺நீட்டு இல்லாம மெடிக்கல் சீட்டு...
பரீட்சை இல்லாம டாக்டர் கோட்டு...
🌺

திருப்பூர் அருகே சஞ்சய் எனும் 10ம் வகுப்பு மாணவன், பள்ளி திறக்கப்போகிறது என்று சொன்னதும் தற்கொலை செய்து கொண்டானாம்....

இதைக் கேட்டதும் மனம் துடித்தது...

நம் நாட்டில் மாணவர்கள் இந்த அளவிற்கு சீர்கெட்டுப் போக யார் காரணம்??

மக்களைச் சந்தித்துப் பேசியதில் அவர்கள் எண்ணங்கள் இதுதான்...

பள்ளிப் பருவத்தில் இருந்த நல்ல அறங்களைக் கூறிப் புரியவைக்கும் கதைகள்...

இப்போது இல்லை...

இறை நம்பிக்கை தரும் ஆன்மீகக் கதைகள்...

இப்போது இல்லை...

தேசபக்திக் கதைகள்...

இப்போது இல்லை...

தேச பக்தர்களின் வரலாறு...

இப்போது இல்லை...

இந்திய வீரர்களின் சரித்திரம்...

இப்போது இல்லை...

மொழி வளர்க்க உண்மையாகப் பாடுபட்டவர்கள் பற்றி...

ம்ம்ம்... அது யாரு?

பள்ளியில் காலை இறை வணக்கப் பாடல்கள்...

இப்போது இல்லை...

ஆசிரியருக்கு மதிப்பு...

இப்போது இல்லை...

தேசத்தின் உண்மைப் பெருமைகள்...

இப்போது இல்லை...

நம் பூர்வீக அறிவியல் கண்டிபிடிப்பின் விபரங்கள்...

இப்போது இல்லை...

ஒழுக்கம், பண்பு, பக்தி, நாட்டுப்பற்று, தேசப்பெருமை...

அப்படின்னா??

அப்ப வேற என்னதான் இருக்கு?

நம்ம நாட்டை ஆண்டவனுடைய புகழ்...

ஓ.... இருக்கே...

அவர்களை எதிர்த்த நம் மன்னர்களை அசிங்கப்படுத்தும் பொய் வரலாறு...

ஓ.... இருக்கே...

பொய்யான அரசியல்வாதி பெருமை...

ஓ.... இருக்கே...

வெளிநாட்டு அறிவாளி வாழ்க்கை வரலாறு...

ஓ.... இருக்கே...

பிற நாட்டின் உண்மை தேசிய வரலாறு...

ஓ.... இருக்கே...

மொழி எதிர்ப்பு....

ஓ.... இருக்கே...

ஜாதி வெறி வளர்ப்பு...

ஓ.... இருக்கே...

பள்ளியில் பாகுபாடு...

ஓ.... இருக்கே...

வாத்தியாருக்கு அடிக்கத் தடை...

ஓ.... இருக்கே...

கடினமான தேர்வுக்கு எதிர்ப்புகள்...

ஓ.... இருக்கே...

பிஞ்சு நெஞ்சில் விதைக்கும் நஞ்சு...

ஓ.... இருக்கே...

கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை...

ஓ.... இருக்கே...

தவறான செயல்களுக்கு நீதிமன்றத்தில் ஆதரவு...

ஓ.... அதுவும் இருக்கே...

அப்பறம் எப்படி மாணவர்கள் உருப்பட முடியும்?

கோழைத்தனம் தான் வரும்...

என சொன்னதும், ஒருவர் முந்தியடித்து ஓடி வந்தார்...

“சார்... எவனும் பணம் கொடுக்கப் போகலையே...”

தூக்கிவாரிப் போட்டது...

”என்ன கேக்குறீங்க??”

“இல்லீங்க... இதுக்கும் பணம் குடுக்கப் போனாலும் போவானுக ஓட்டுக்காக...

அப்பறம் இன்னும் பத்து வீட்டுப் பிள்ளைங்க சாவைத் தேடிப் போகும்...

சரி.... பள்ளியூடமே வாணாம்....

இளுத்து மூடுங்கடா அத்தனையும்.... ஏன்னா அடுத்து எல்லாருக்கும்

”நீட்டு இல்லாம மெடிக்கல் சீட்டு... படிப்பே வாணாம் டாக்டர் கோட்டு...”

அப்படின்னு திட்டம் கொண்டு வருவானுக...

ஆனா இவனுக மட்டும் லண்டன்ல போயி மருத்துவம் பாத்துக்குவானுக...

எல்லா மவனும் டாக்டரானா...

அப்பறம் எவன் மத்த வேலை எல்லாம் பாக்குறது? அவனுகளுக்கு வேணுங்கறதை எவன் தயாரிக்கிறது?

இப்படிப்பட்ட ஒருத்தன் ஆபரேஷன்னு ஒன்னு செஞ்சு, அதால செத்தவங்களை எவன் எரிக்கிறது?

என்னாவோ.... இந்த வெவஸ்தை கெட்ட தமிழ் நாட்டுல இருந்து ஒன்னு...

இந்த திராவிடம், கம்யூனிசம், தமிழுன்னு வாய் கிழிய பேசுறவனுக ஒழியணும்...

இல்லை.... இவனுக இங்கேயே கிடக்கட்டும்...

நாம மக்கள் எல்லாரும் இங்கிருந்து ஒழியணும்...

இவனுகளே புள்ளய பெத்து, வெள்ளை கோட்டை மாட்டி டாக்டருன்னு சொல்லிக்கிட்டு,

ஊருல இருக்குற அம்புட்டு ஆசுபத்திரியிலயும் செத்த பொணத்துக்கு ஆபரேசனும் வைத்தியமும் செஞ்சுக்கிட்டுக் கிடக்கட்டும்...

வவுத்த எரியுது.... வேற என்ன சொல்ல??”

தலையில் அடித்துக் கொண்டு சென்றார்...

ஏற்கனவே தமிழ பா.ஜ.க. பலவீனமாய் உள்ளது. இதில் தி.மு.க காரர்கள், பதவிக்காக கட்சி மாறி

வருகையில் ஏற்பது இவர்கள் மேல் மட்டும் அல்லாது, பா.ஜ.க. மேல் உருவாகும் நல் எண்ணத்தை மக்களிடம் வேரோடு அழித்துவிடும் என ஏற்கனவே ஒரு பதிவைப் போட்டிருந்தேன்....

அது நடக்க ஆரம்பித்திருக்கிறது... இது மிக மிக தவறான போக்கு என்பதை மூத்த பத்திரிகையாளர்களும் குறிப்பிடுகிறார்கள்...

🥛பாலில் துளி விஷம்....🍷

தமிழக மக்களே...

எப்படியோ போங்கள்...

எக்கேடோ கெட்டிடுங்கள்...

வலியுடன்...

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling