#SaveAnnaUniversity இன்று வந்திருக்கும் செய்தி, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்க்க தானடித்த மூப்பாக சூரப்பா மேற்கொண்ட நடவடிக்கையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
1570 கோடி ரூபாய் லாபம் வரும் என்று பட்ஜெட் போட்டுக் காட்டியிருக்கிறார் சூரப்பா. பதிலுக்கு என்ன கிடைக்கும்.
முதல் IOE ஆக வரும் பெருமையைப் பெறுமாம். அதை வைத்து நாங்கள் என்ன செய்ய? தங்கத்தில் திருவோடு வைத்துக் கொண்டு எம் மக்கள் மத்திய அரசிடம் பிச்சை எடுப்பதா? #SaveAnnaUniversity
அண்ணா பல்கலைக்கழகத்தைத் துண்டாட சட்டம் இயற்றும் மாநில அரசும் இதற்கு சாதகமான சூழலை உருவாக்கவே துடிக்கும்.
எங்கள் உழைப்பில் எம் மக்களுக்காக உருவான அண்ணா பல்கலைக்கழகத்தை வடநாட்டாரும், வந்தவரும் போனவரும் சூறையாட அனுமதிக்கமுடியாது மிஸ்டர் சூரப்பா! #SaveAnnaUniversity
எவன் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அண்ணா பல்கலைக்கழகம் மிகச் சிறந்த சாதனை படைக்கும் கல்வி நிறுவனம். #SaveAnnaUniversity
அண்ணா பல்கலைக்கழகத்தைப் போல எளிய மக்களையும் உயர்த்திவிட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் எது இருக்கிறது என்று விரல் நீட்டிச் சொல்லமுடியுமா இந்தியாவில்? #SaveAnnaUniversity
உயர்தட்டு மக்களுக்கு மட்டுமானதாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிற மத்திய அரசின் நிறுவனங்கள் போல் அல்லாமல், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் அறிவுக் கருவூலம் அண்ணா பல்கலைக்கழகம்.
எவன் வந்தாலும் சரி,
என்ன விலை கொடுத்தேனும் சரி...
அண்ணா பல்கலைக்கழகத்தைக் காப்போம்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
