தொழிலாளர்கள் நல தினமான இன்று அதற்கு வாழ்த்தும், வீர வசனங்களும் பேசும் முன் @mkstalin உள்ளிட்ட ஒவ்வொரு உடன்பிறப்புகளும் இதனைப் படித்து விட்டு (ஆதாரங்களுடன்) அதற்கான அருகதை தங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசித்தி விட்டு பிறகு வாய் திறக்கவும்!
திமுக தலைவர் ஸ்டாலினின் தொழிலாளர்
நலச்சட்டங்கள் குறித்த வீர வசனங்களில் சில இங்கே:-
"தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமான சட்டங்களை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் திமுக, தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமும், போர்வாளாகவும்” திமுக எப்போதும் திகழும் என்று
இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்." (மே-2021)
"முதலாளிகளை மட்டுமே மனதில் கொண்டு, அவர்கள் மேலும் மேலும் கொழிக்கும்படி வளர்க்கவும், முழு நேரமும் பாடுபடும் தொழிலாளர்களைத் தொடர்ந்து வஞ்சிக்கவுமான செயலில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஈடுபட்டு, ஏற்கெனவே தொழிலாளர்களின்
பாதுகாப்புக்கு இருந்த 44 தொழிலாளர் சட்டங்களுள், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டது. மீதியுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் திட்டமிட்டுப் பறித்து விட்டது." (நவம்பர்-2020)
"இன்றைக்கு 44 சட்டங்களை 4 ஆகச் சுருக்கி கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குக் கைகொடுப்பது, ரத்தம் சிந்திப் பெற்ற 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகப்படுத்துவது எனத் தொழிலாளர் நலன்களைச் சூறையாடி, அவர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது மத்திய பாஜக அரசு." (மே-2020)
அந்த 4 சட்டங்கள் உருவானதில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன?
1. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 2019
*02/08/2019 மசோதா மாநிலங்களவை- வில்சன் ஆதரித்து பேச்சு - Division வாக்கெடுப்பு - ஒருவர் எதிர்த்து ஓட்டு, 4 பேர் பங்கேற்கவில்லை
*30/07/2019 மசோதா மக்களவை - ரவிக்குமார் ஆதரித்து பேச்சு - குரல் வாக்கெடுப்பு
2. தொழில்துறை உறவுகள் சட்டம் 2020
3. சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020
4. பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்டம் 2020
*23/09/2020 மசோதாக்கள் மாநிலங்களவை - குரல்வாக்கெடுப்பு - வெளிநடப்பு - மசோதா மீது பேசவில்லை - வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
*22/09/2021 மக்களவை குரல்வாக்கெடுப்பு -
வெளிநடப்பு -
மசோதா மீது பேசவில்லை - வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது, வேலையிலிருந்து நீக்குவது, வேலை நேரம், ஊதியம், தொழிற்சங்கம், போராடும் உரிமை, தொழிலாளர் குறை தீர்ப்பு உள்ளிட்ட பல நடைமுறைகளை முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றிய இந்தச் சட்ட மசோதாக்களை பாசிச பாஜக அரசு
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த போது "திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை எதிர்த்து ஏன் பேசவில்லை, ஏன் திருத்தங்கள் கோரவில்லை, ஏன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை, ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை, உங்களுக்கென்ன தார்மீகம் இருக்கு மே தின வாழ்த்து சொல்ல?" என்று கேட்டுப்பாருங்களேன்..
அதற்கு நமது திமுக உடன்பிறப்புகளின் ஆகச்சிறந்த அறிவார்ந்த பதில்களாக, தர்க்கங்களாக "போடா ஈழ அகதியே, நாய் டம்ளரே, ஜோம்பியே, சங்கியே, அனாதை அகதியே, மாங்காவே, டயர் அடிமையே" +🔞 🔞 🔞 🔞 🔞 என்றே வரும்..👍
ரொம்ப அருமையா தர்க்கம் பண்ணுவாய்ங்க அவிங்க..👌😱
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.