மதுசூதனன் பி சா Profile picture
தல ரசிகன்|தலைவி நயன்தாரா|தலைவன் யுவன்|அரசியல் பழகு| என்றும் எப்பொழுதும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று - சினிமா #PCMreview

Jun 3, 2021, 9 tweets

"The Con Artists(2014)" ,- "Heist Action Thriller".கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களை யூகிக்க முடியாத டிவிஸ்டுகளுடன் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும்.ஹீரோவும் அவன் மாமாவும் அடிப்படையாக திரமைவாய்ந்த திருடர்கள்.ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தில்

நுழைந்து ஒரு விலையுயர்ந்த சிலையை திருடிக்கொண்டு வருகிறார் ஹீரோ.ஆனால் பாதுகாவலர்கள் துரத்தும் பொழுது அந்த சிலை உடைந்துவிடுவதால் அதே போன்று 3D பிரின்டிங் செய்யப்பட்ட சிலையை செய்து விற்க முயல்கின்றனர்.ஆனால் வாங்குபவர் இது போலி என கண்டுபிடிக்க "இது போல் நீ பல போலி சிலையை ஏலத்தில்

விட்டிருக்கிறாய்.எனவே இதை விற்றுகொடு என மிரட்டுகின்றனர்.அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் இருக்கும் விலையுயர்ந்த டைமண்ட் கற்களை திருட முயல்கிறார்கள்.அதனால் கண்காட்சியில் அறிமுகமான ஹீரோயினை அழைத்துகொண்டு நகைகடைக்கு செல்கிறார்.கேமரா எவ்வளவு இருக்கிறது,வழிகள் என்ன என்ன இருக்கிறது என்பதை

அறிந்துகொண்டு வருகிறார்.இதற்கு ஒரு ஹேக்கர் வேண்டும் என்று முடிவு செய்து ஒருவனை தேர்வு செய்கிறார்கள்.அடுத்தநாள் சரியாக திட்டமிட்டு ஹேக்கர் உதவியுடன் டைமண்ட் கற்களை கொள்ளையடிக்கிறார் ஹீரோ.ஆனால் நகைக்கடை வில்லனிற்கு சொந்தமானது என்று அவர்களுக்கு தெரிவதில்லை.டைமண்ட் கொள்ளை போனது பற்றி

வில்லன் அறிந்து கொள்ளையடிதவர்களை தேடி கண்டுபிடிக்கிறார்.ஹீரோ உட்பட அனைவரும் மாட்டிகொள்கின்றனர்.உங்களின் நண்பர்கள்,மனைவி,குழந்தைகள் என அனைவரையும் கடத்திவிட்டேன்.நான் சொல்வதை செய்யவில்லை என்றால் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.ஹீரோ வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்.

அவர் செய்ய சொன்னது என்ன?என்ன வகையான கொள்ளை அது?அதை செய்து முடித்தார்களா? அதில் இருக்கும் ஆபத்துகள் என்னென்ன?ஹீரோ அனைவரையும் காப்பாற்றினாரா?என்பதே மீதிக்கதை.படத்தில் டிவிஸ்டுகள் தரமாக இருக்கும்.திரைக்கதை படத்தின் பெரிய பலம் என்றே கூறலாம்.அடுத்து என்ன என்று யோசிக்கவைக்கும் வகையில்

கதை நகர்கிறது.முக்கியமாக இவர்கள் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுவது,அதனை செயல்படுத்துவது என அனைத்து காட்சிகளும் அமர்க்களம் செய்திருப்பார்கள்.ஆபாச காட்சிகள் இல்லை.OTT எதிலும் இல்லை.கொரியன் மட்டுமே.தமிழ் டப் இல்லை.டெலிகிராம் லிங்க் எனது பயோவில் உள்ளது.இணைந்து கொள்ளவும்.நன்றி!வணக்கம்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling