Mario Arulthas Profile picture
PhD candidate @soaspolitics, working on nationalism. Tweets in தமிழ்/Deutsch/English Dortmunder Jung' Support my work here: https://t.co/yFvCSmU48U

Jul 2, 2021, 8 tweets

70 ஆண்டுகளுக்கு முன்பாக, இலங்கை தமிழ் அரசு கட்ச்சியின் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:

1: "தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனமெனக் கணிக்கப் பெறுதற்கு அவர்களுக்குள்ள மறுக்கவொண்ணா உரித்துவத்தை எடுத்துரைப்பதுடன், அரசியல் சுயாதீனம் பெறுதற்கு அவர்களுக்குள்ள உரிமையையும், சிங்களவர்களுடன் சமஷ்டியமைப்பு முறையில் இணைவதற்கு அவர்களுக்குள்ள விறுப்பையும்"
தீர்மானிக்கப்பட்டது

2. "சோல்பரி அரசியலமைப்புத் திட்டம் அறிவுக்கொவ்வாததெனவும், தமிழ்பேசும் மக்களை அடிமை கொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்."

3. "தற்போதைய அரசியலமைப்பின் கீழ் தமிழ்பேசும் மக்களுறும் அரசியல் அவமதிப்பையும், குடியுரிமைச் சட்டங்களின் கீழ் அவர்களும் அவமானத்தையும் இம்மாநாடு குறிப்பெடுத்துக் கொள்கிறது எனக் கூறிடும் தீர்மானம்."

4. "தற்போதைய அரசியலமைப்புத் திட்டத்தின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் எதிர் நோக்கியிருக்கும் பேராபத்தை இம் மாநாடு சுட்டிக்காட்டுகிறது எனக் கூறிடும் தீர்மானம்."

5. "அரசாங்கத்தின் காணி அபிவிருத்திக் கொள்கையும், குடியேற்றத்திட்டக் கொள்கையும் இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களின் நிலைபேறான வாழ்வுக்கே ஓர் அச்சுறுத்தலாகும் என இம் மாநாடு கண்டிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்."

6. "இலங்கையின் அதிகார பூர்வமான கோடி - தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அவமானச் சின்னம் என இம்மாநாடு அக் கொடியை நிராகரிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்."

7. "மொழிவாரித் தமிழ் அரசினை, அனைவர்க்கும் சுதந்திரம், அனைவர்க்கும் சமத்துவம், அனைவர்க்கும் நீதி என்ற உயர்ந்த இலட்சியங்களின் மீது நிறுவுவதற்கு இம் மாநாடு உறுதியளிக்கின்றது எனக் கூறிடும் தீர்மானம்."

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling