அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
பவனிவரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து.... படி அதிரவே நடந்த கழல் வீரா...
பரம பதமே செறிந்த செந்தில் முருகன் எனவே உகந்து பழனி மலை மேல் அமர்ந்த பெருமாளே 🙏🙏🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.