மகான் Profile picture
சாதி மதம் கடந்து மனிதம் போற்று ❤️ | #தந்தைபெரியார் | #சேகுவாரா | @vetrimaaran | @msdhoni 🏏| #RahulDravid 🏏| @faf1307 🏏 | | @JLo 💘 | உலகம் 🌎 சுற்ற ஆசை...

Aug 18, 2021, 10 tweets

#HACHI: A dog's tale Drama

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 1H 33M

Year : 2009

IMDb 8.1/10

Available on @PrimeVideoIN

ஜப்பானில் 1923 இல் பிறந்த ஒரு நாய் 🐕 அந்த நாயின் முதலாளி #DrEisaburoueno டோக்கியோ யுனிவர்சிட்டியில் பணிபுரிந்தவர்..

மே மாதம் 1925 யில் தான் பணிபுரியும் இடத்திலேயே இறந்து விடுகிறார்.. தன் முதலாளி வருவாரென்று அவர் மீதுள்ள அன்பினால் ஷிபுயா இரயில் நிலையத்தில் அடுத்த ஒன்பது வருடங்களாக காத்திருந்த உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார்கள்..
படத்தின் ஆரம்பக் காட்சியாக My Hero என்ற தலைப்பில் பள்ளிக்

குழந்தைகள் தங்கள் வகுப்பறையில் பேசுகிறார்கள்.. அதில் ஒரு சிறுவன் My Hero ஹாச்சி என்ற நாய் 🐕 என்றதும் அனைவரும் கேலியாக சிரிக்கின்றனர்.. அதன் பிறகு ஏன் அது என்னுடைய ஹீரோ என்ற காரணத்தை ஃப்ளாஷ்பேக்காக கூறுகிறான் அந்த சிறுவன்.. Mr.Parker வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வர அப்போது

யாரோ தங்கள் நாய்🐕 குட்டியை தவறுதலாக இரயில் நிலையத்தில் விட்டு சென்று விடுகிறார்கள்.. அப்போது Parker யின் எதிரே அந்த நாய் தென்பட்டதும் தன் வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.. முதலில் அவரின் மனைவிக்கு விருப்பமில்லை.. ஆனால் பிறகு அவரும் பாசம் காட்டுகிறார்..Parker யின் மகளும் அந்த நாய்🐕

மீது அன்பாக இருக்கிறார்கள்.. Parker ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் போது அந்த நாய் 🐕 அவருடனே சென்று வழியனுப்பி வைக்கும்.. மீண்டும் வேலையில் இருந்து திரும்பி வருபவரை இரயில் நிலையத்தில் காத்திருந்து அவருடனே வரும்.. நீண்ட நாட்களாக இது தொடரும்..Parker ம் அந்த நாய் மீது அளவு கடந்த

அன்பு வைத்திருப்பார்..ஒரு நாள் பார்க்கர் தன் வேலைக்கு செல்லும் இடத்தில் இறந்து விடுகிறார்...தன் முதலாளி வருவாரென காத்திருக்கும்.. இதுதான் படத்தின் திரைக்கதை..அப்படியொரு எமோஷனலான படம்..கடைசி 33 நிமிடங்கள் மனதை பிழியும் அளவிற்கு எமோஷனலாக இருக்கும் 🥺😭 நல்ல படம் அனைவரும் பாருங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling