நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.
நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.
நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.
உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.
உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு பெற்றோர்களை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் கிடைத்தது.
நீ பண்டிகைகளை உறவினர்களோடு வண்ண தீபங்களோடு உல்லாசமாக கொண்டாடினாய். நான் பல பண்டிகைகளை சக வீரர்களுடன் பதுங்கு குழியின் இருட்டில் கொண்டாடினேன்.
நம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
உன் மனைவி தினமும் உன்னை பார்த்தாள் ஆசையுடன்.
என் மனைவி நான் உயிரோடு இருக்க வேண்டுமே என்று தினம் தினம் ஆசைப்பட்டாள். நீ வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு அனுப்பப்பட்டாய். நான் நாட்டின் பாதுகாப்புக்காக பல எல்லைக்களுக்கு அனுப்பப்பட்டேன்.
நாம் இருவருமே வீடு திரும்பினோம்.
நம் மனைவிகளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
நீ உன் மனைவியின் கண்ணீரை உன்னால் துடைக்க முடிந்தது. என்னால் என் மனைவியின் கண்ணீரை துடைக்க முடியவில்லை.
நீ உன் மனைவியை இறுக அணைத்துக்கொள்ளமுடிந்தது. என்னால் என் மனைவியை அணைத்துக் கொள்ள முடியவில்லை.
காரணம், நான் என் நெஞ்சுர மார்பில் பதக்கங்களை அணிந்து சவப்பெட்டியில் மிடுக்காகப் படுத்திருந்தேன். பாரத தாயின் மூவர்ண கொடியால் போர்த்தப்பட்டு,
நாம் இருவருமே 18 வயதில் வீட்டை விட்டு சென்றோம் தான். என் வாழ்க்கை முடிந்தது.
உன் வாழ்க்கை தொடர, என் குறுகிய வாழ்க்கையில் இந்திய ராணுவம் தந்த கல்வியை உன்னால் வாழ்நாளில் கற்க முடியாமல் போகலாம்.
நான் பயின்ற பாடங்கள், சிங்கம் போல தைரியமாகவும் புறா போல் மென்மையாகவும் இருப்பது எப்படி என்று.
ஒரு சாதுவை போல் அமைதியாகவும் தேசத்தை காக்க பயமறியா வீரனாகவும் இருப்பது எப்படி என்று.
தன்னை கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் காத்துக் கொள்வது எப்படி என்று.
வாழ்நாள் முழுவதும் அல்லது வீரமரணம் அடைந்து தாய் மண்ணில் சரியும் வரை உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது எப்படி என்று.
இவைகள் தானே ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனின் சித்தாந்தமும் (Philosophy) நம்பிக்கை கட்டமைப்பும் (Belief System) சரிதானே.
ஆம் என் இனிய இராணுவ நண்பா. உன் வாழ்க்கையையே எங்களுகாக வாழ்ந்தாய். எங்களுக்காகவே இறந்தாய்.ஆனாலும் நண்பா மரித்தாலும் நீ இந்த பாரதத்திருநாட்டில் என்றும்வாழ்வாய்.
அழிவில்லா இந்திய ராணுவ வீரனே உனக்கு என்றென்றும் எங்கள் சல்யூட்.... ஜெய்ஹிந்த் 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪 நன்றி அண்ணா @Pvd5888
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.