KANNAN. 🦚🦚♥♥♥ Profile picture
கொற்றவையின் மைந்தன் 🔥 பாலை நிலத்து காரன்🖤 சேது சீமை❤ இந்திய ராணுவத்தின் காதலன்🇮🇳💪 முருகன் அடிமை 🙏

Oct 14, 2021, 12 tweets

#கோட்டை_மாரியம்மன்
#திண்டுக்கல்

🌿பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர்.

அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.

🌿மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும்,

இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.

🌿இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்

🌿அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்

🌿8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.

🌿 இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பு,

🌿இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயிகள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

🌿 ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.

🌿சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள்,

பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது. மேலும் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார்.

🌿திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அமாவாசை முடிந்த 5ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும் அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்

🌿திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கோயிலுக்கு சென்று வரலாம்

🌿நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.

🌿 கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர்.

இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம்.

🌿தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும். அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும்,

மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்தும் அம்மனை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள்.🙏🙏🙏 @Pvd5888

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling