KANNAN. 🦚🦚♥♥♥ Profile picture
கொற்றவையின் மைந்தன் 🔥 பாலை நிலத்து காரன்🖤 சேது சீமை❤ இந்திய ராணுவத்தின் காதலன்🇮🇳💪 முருகன் அடிமை 🙏

Oct 15, 2021, 19 tweets

#இன்று_ஒரு_கோவிலை_பற்றி
#தெரிந்து_கொள்வோமா.

#உறையூர்_வெக்காளியம்மன்_கோயில்

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும்.

தல வரலாறு...

“சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்” என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது.

இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

பழம்பெருமை வாய்ந்த உறையூர்..

காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர்,

சங்க இலக்கியத்திலும் சரித்திரங்களிலும் பேசப்படும் ஒரு முக்கிய நகரமாகும். இது தற்போது உள்ள திருச்சிராப்பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ளது.

இங்கு பல தொன்மையான சரித்திரப் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான கோயில் அருள்மிகு வெக்காளி அம்மன் கோயிலாகும்.

வெக்காளியம்மன் வரலாறு..

வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது (தெற்கு வாசல்)

அந்தி மாலை நேரத்தில் வெக்காளியம்மன் கோவில்
வெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது மரபு என்பதால் வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி அமைத்துள்ளார்கள். ஆனால் வெக்காளியம்மன் கூரையின்றி இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது.

வெட்டவெளியில் வெக்காளியம்மன்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டையில் தாயுமான சுவாமிகள் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் செய்கிறார். மலைக்கோட்டைக்கு மேற்கே உள்ளது உறையூர். அங்கு வன்பராந்தகன் ஆட்சி செய்த காலம்.

அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார்.

பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான்.

நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரை அலட்சியம் செய்தான்.

பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத்தாங்காமல்,

தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.

அப்போது, மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரனங்களும் தப்பி ஓடிப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள தங்களின் காவல் தெய்வமான

வெக்காளியம்மனை விட்டால் வேறு வழி இல்லை என்று தஞ்சம் புகுந்தனர்.

வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப்பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது.

மக்களின் துயர் கண்டு அன்னை வெக்காளி, ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.

ஆகவே அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை,

வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள்.

உறையூர் --- நாச்சியார் கோவில --- வெக்காளியம்மன் கோவில்

(கோவிலுக்குச்செல்லும் வழிகாட்டல்)
வெக்காளி அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து "உறையூர் வழியாகச் செல்லும்" பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இங்கிருந்து சிறிது தூரம் (500 மீட்டர்கள்) மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லலாம்.

(நாச்சியார் கோவில் நிறுத்தம்)
நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் எப்போதும் (காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை) தொடர்ச்சியாக பேருந்துகள் கிடைக்கும். பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியது இல்லை. நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் எப்போதும் ஆட்டோ ரிக்சாக்கள் கிடைக்கும்.

ஆகவே நாச்சியார் கோவில் நிறுத்தத்திலிருந்து வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்வதில் எந்தவிதமான சிரமமும் இருக்காது.

தங்க ரதம் ..
தங்க ரதத்தில் அருள்மிகு வெக்காளியம்மன்
வெக்காளியம்மனுக்கு, புதியதாக ஒரு தங்க ரதம் செய்ய பட்டுள்ளது. அது முதன் முறையாக பிப்ரவரி 18, 2010 தேதியில்

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வெள்ளோட்டமாக இழுத்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு, பக்தர்கள் தங்க ரதத்தை இழுப்பதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தினால் குறிப்பிட்ட தேதியில் மாலை 7 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில் வெக்காளியம்மனின்

தங்கத்தேரை உற்றார் உறவினருடன் இழுத்துச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்த தங்க ரத்ததின் உயரம் 9.75 அடி. தங்க ரதத்தை உருவாக்க 10.5 கிலோ தங்கமும் 25 கிலோ வெள்ளியும் பயன்படுத்தப்பட்டது..🙏🙏 @Pvd5888

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling