f u e d a l Profile picture
♥️ இங்க என்ன தோனுதோ அத பேசுவேன். 🧠 இங்க என்ன தோனுதோ அத செய்வேன்.

Feb 15, 2022, 26 tweets

#Mahaan என் பார்வையில் 👀✍️

படம் பார்த்தவர்கள் மட்டுமே படிக்கவும் !

@karthiksubbaraj @Music_Santhosh
#ChiyaanVikram #DhruvVikram
@SimranbaggaOffc @actorsimha

#BlockBusterMahaan #Mahaan

#MahaanReview #fuedalreview

நல்ல செயல் மட்டும் இல்ல கெட்ட செயலா இருந்தாலும் அத அவனா தான் தெரிஞ்சிக்கனும் நம்மளா போய் எதையும் திணிக்கக் கூடாது அப்படி ன்றத மூனு பேரோட சூதாட்டத்த வச்சு சொல்லறது தான் மாஹான்

இதான் படத்தோட கதைனு முதல வர ஃப்ளாஷ் பேக்லயே சொல்லிருவாங்க. கொஞ்சம் ஒப்பிட்டு பாத்தா போதும் புரியும்

சுதந்திரமற்ற காந்தி

அப்பா × மனைவி

காந்திக்கு

உண்மையான பிறந்த நாளே உண்மையான சுதந்திர தினம்

சுதந்திரத்தில் கிடைத்த சூதால் போதையே தொழிலானது

காந்திக்கு கடவுள் நம்பிக்கை தன் பையனோட போய்டுச்சு

சத்தியனுக்கு கடவுள் நம்பிக்கை தன் பையனோட வந்துருச்சு

இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வரும் சத்தியன்

வெளிச்சத்துல இருந்து இருட்டுக்கு போற காந்தி

காந்தி , சத்தியன் , ஞானம் இவங்க மூனு பேரும் விளையாட்ற சூதாட்டத்துல ஜோக்கரா வரது தான் அந்த ஜோக்கர்னே பேரு வச்ச காந்தியோட நாய்

ஜோக்கர் = தாதா

அங்க ஜோக்கர் இங்க தாதா

அப்பாவ பழிவாங்க அவனுக்கு சொல்லிக் கொடுத்த கொள்கையும் கோட்பாட்டையும் வச்சே,

அப்பாவோட ஆட்டத்துக்குள்ள அப்பா மாதிரியே உள்ள வர தாதா.

தான் மகன் உள்ள வந்ததால ஆட்டம் முடிஞ்சிருச்சுனு நினைக்கிற காந்தி கிட்ட

நிறுத்தாத ஆடு பா னு சொல்ற தாதா

கொள்கை கோட்பாடுனு தாதா மேல திணிச்சதோட விளைவு என்னனு நாச்சிக்கு புரிய வைக்கிற காந்தி

சத்தியனுக்கு புடிக்காத வேலைய தான் செய்யாம காந்திய வச்சு செஞ்சு முடிக்கிறான் ஞானம்

சத்தியனோட கண்ணோட்டத்துல இருந்து பாத்த அது காந்தியோட தப்பு தான் அதனாலயே, காந்திய‌ தண்டிக்கனும் னு நினைகிறான் சத்தியன்

அங்க ஒன்னுமே தெரியாத ஜோக்கர் × இங்க எல்லாமே தெரிஞ்ச தாதா

கடைசில தாதாவிடம்(ஜோக்கர்) ஏமாறும் காந்தி

எந்த ஜோக்கர வச்சு காந்தியையும் சத்தியனையும் ஞானம் பிரிச்சானோ, அதே ஜோக்கர வச்சே ஞானதுக்கு முடிவு கட்றான் காந்தி

காந்தியிடம் ஏமாறும் தாதா(ஜோக்கர்)

தாதா × ஜோக்கர்

உண்மையான சுதந்திரம்னா என்னானு சொல்ற காந்தி

அத புரிஞ்சிக்கிற தாதா

இத களவும் கற்று மற னு கூட எடுத்துக்காலாம் நீ செய்யிறது களவா இல்லையானு வேர ஒருத்தர் முடிவு பண்ண கூடாது நீ தான் முடிவு பண்ணனும்!

பிறந்தோன வைக்கிற பேரால கூட நம்ம சுதந்திரம் பறிக்கப்படுதுன்றத

திலகவதினு பேர வச்சிட்டு சூசையப்பர கும்பிடுறது

மைக்கெல்னு பேர வச்சிட்டு அம்மன கும்பிடுறது

அவங்கவங்க சுதந்திரம் ❤️

@karthiksubbaraj தமிழ் சினிமால இருக்கறத்துக்கு நம்ம தான் குடுத்து வச்சுருக்கனும் 💯🥺🙇🏻❤️

There’s nothing called art and commercial cinema in Tamil Nadu ~ Dir. Ram

சாதாரணமா இந்த பக்கம் இருந்து பாத்த அது நம்ம ரசனைக்கு ஏத்த படமா இருக்கும் ~ Commercial cinema

அந்த பக்கம் நல்லா பாத்த இயக்குனர் தன் கதைல சொல்ல வர விஷயம் மட்டுமே படமா இருக்கும் ~ Art cinema

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling