டோனி ஸ்டார்க்™ Profile picture
🚵🏼‍♂️ பயணம் நிகழ்கிற பாதை 👣 முழுதும் மேடையாய் மாறும், எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம்🎭 ஓடும்

Mar 5, 2022, 12 tweets

#TheLunchBox (2013)(Hindi)(Romance/Drama)(Netflix)(IMDB : 7.8)

அந்த போஸ்டர்ல இருக்க கேப்சன பாருங்களேன் 😍

" Can You fall in Love With Someone You Haven't Met? "

" நீங்கள் சந்திக்காத ஒருவரை காதலிக்க முடியுமா? "

ஆம் முடியும் என்கிறது இந்த Lunch Box, அதெப்டின்னு கேக்குறீங்களா!?

வாங்க கதைக்குள்ள போவோம்.

தன்னோட கணவனுக்கு லஞ்ச் செஞ்சு டப்பவாலா கிட்ட கொடுத்து அனுப்புற ஒரு நடுத்தர வயது குடும்ப பெண் தான் இலா (நிம்ரத் கர்).

(அதென்னடா டப்பவாலானு யோசிக்கிறீங்களா வட நாட்ல ஆஃபீஸ் போற ஆண்களுக்கு வீட்ல இருந்து சாப்பாடு கலெக்ட் பண்ணி ஆஃபீஸ்ல கொண்டு போய் சேக்குறவங்க

தான் டப்பாவாலா.)

இன்னொரு பக்கம் மனைவியை இழந்த 60 வயது மிக்க ஒரு பெரிய ஆள் தான் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான் கான்).

ஒரு நாள் நம்ம இலா செஞ்சு அனுப்புற லஞ்ச் பாக்ஸ் காலியா வீட்டுக்கு வந்ததை நெனைச்சு சந்தோஷப்பட்றாங்க. வீட்டுக்கு வந்த கணவன் கிட்ட சந்தோசமா அதை கேட்க்கும் போது தான்

தெரியுது அனுப்புன லஞ்ச் அட்ரஸ் மாறி போய்ருக்குனு, அப்படி தவறா போன லஞ்ச் பாக்ஸ் நம்ம சாஜனுக்கு போய் சேருது.

அடுத்த நாள் அந்த லஞ்ச் பாக்ஸ்ல ஒரு லெட்டர் எழுதி அனுப்புறாங்க இலா, அதை படிச்சி பாத்துட்டு நம்ம சாஜனும் பதில் லெட்டர் அனுப்புறாரு. இப்படி ஒரு லஞ்ச் பாக்ஸ் லெட்டர் மூலமா

ஆரம்பிக்கிற இவங்க உறவு எங்க போய் முடியுது? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? அந்த லெட்டர்ல அப்படி என்ன பேசிக்கிறாங்கன்றத படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

1 மணி நேரம் 40 நிமிடம் தான் படம், அப்படியே கவிதை படிச்ச மாதிரி அழகா இருக்கும் 😍. நாலு முக்கியமான கேரக்டர் வச்சி அதை ரசிக்கும் படி

தந்திருக்காங்க.

இலாவா வர்ற நிம்ரத் கர், தன்னோட சமையலுக்கு கணவன் கிட்ட இருந்து பாராட்டு பெறனும்னு ஏங்குறதாகட்டும், முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கிட்ட தன்னோட வாழ்க்கையை பத்தி பகிர்ந்துகிறதாகட்டும், அவர் கிட்ட இருந்து வர்ற லெட்டர்க்காக காத்திருக்கும் போதாகட்டும் அவ்ளோ அழாக,

சிம்பிளா ரசிக்கும் படி நடிச்சிருக்காங்க 😍👌🏼👏🏼.

சாஜனாக இர்ஃபான் கான், அந்த லஞ்ச் பாக்ஸ்க்காக வெயிட் பன்றதும், வந்தவுடனே ஆபிஸ் டைம்லயே அதை ஓபன் பண்ணி ஸ்மெல் பன்றதாகட்டும். முன்ன பின்ன தெரியாதவங்களுக்கா, அவங்களுக்கு என்ன ஆயிருக்குமோனு ஏங்கி தவிக்கிறதாகட்டும், வந்த லெட்டர சுத்தி

முத்தி யாரும் பாக்குறாங்களானு பாத்துட்டு அதுக்கு அப்பறம் படிச்சி பாத்துட்டு புன்னகைக்குறதும், கூட வேலை செய்யர ஒருத்தர் செஞ்ச தப்ப தாந்தான் செஞ்சேனு சொல்லி அவங்களை காப்பாத்துறதாகட்டும் " ச்ச என்ன மனுஷன் யா " அப்படின்ற அளவுக்கு அந்த சாஜன் ஃபெர்னாண்டஸாவே வாழ்ந்து ரசிக்க வைக்கிறார்

மனுஷன் 😍👏🏼👌🏼.

கடைசி வரை முகம் காட்டாத இலாவோட மேல் வீட்டு ஆன்டி, நவாசுதீன் சித்திக் ன்னு அனைவரும் ரசிக்கும் படி நடிச்சிருக்காங்க 👏🏼👌🏼.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ரசிக்கும் படி இருக்கு 👌🏼.

இப்படி கவிதை மாதிரி இருக்க இந்த படத்தை எப்டி எவ்ளோ நாளா மிஸ் பன்னேனு தெரியல 😓🤧.

இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனை ஃபாலோ செய்து ரிப்ளை செய்யவும்.

@Sivamsb @jayhara @sriganesh0329 @Its_muralivish @GowthamVjArr @Solitude_Here__ @Shiro_twitz @itzMe_Hariharan @vanhelsing1313 @SridharDowneyJr @Legacy_Daark @sangzsoccer @Unngal_Rio @Soru_MukkiyamDa @Ajit_karthi

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling