டோனி ஸ்டார்க்™ Profile picture
🚵🏼‍♂️ பயணம் நிகழ்கிற பாதை 👣 முழுதும் மேடையாய் மாறும், எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம்🎭 ஓடும்

Jun 4, 2022, 10 tweets

#JanaGanaMana (2022)(தமிழ் తెలుగు മലയാളം ಕನ್ನಡ)(Crime/Drama)(Netflix)(IMDB : 8.5)

பாக்குற எல்லா படத்துக்கும் ரிவ்யூ எழுத தோணும், ஆனா ஒரு சில படங்கள் தோணுறதோட விடாமா உட்காந்து எழுத வைக்கும். அந்த மாதிரியான படம் தான் இந்த ஜன கன மன 💥🔥.

என்ன ரைட்டிங்! என்ன டைரக்சன்! 👌🏼👏🏼.

ஒரு கல்லூரி பேராசிரியரின் கொடூரமான கொலை மாணவர்களின் அமைதியின்மையைத் தூண்ட, அவ்வழக்கினை ஒரு காவல் அதிகாரி விசாரிக்க தொடங்க, மறுபுறம் அவ்வழக்கிற்கு நீதி கேட்டு வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களம்.

முதலில் படத்தின் எழுத்து வடிவத்தை பாராட்டியே

ஆக வேண்டும்.
#SharisMohammed இன் கதை, திரைக்கதை வடிவம் அவ்வளவு நேர்த்தியாக அழுத்தமாக சொன்னவிதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் #SurajVenjaramoodu வின் நடிப்பும், இரண்டாம் பாதியில் #PrithvirajSukumaran இன் நடிப்பும் ரசிக்கும்படியும் பாராட்டும் படியும் உள்ளது 👏🏼.

நாம் காணும், உண்மை என நம்பும் செய்திக்குப்பின் உள்ள அரசியல் நோக்கத்தைப் பற்றி அழுத்தமாக சொன்னதும்.

2016ஆம் ஆண்டு நடந்த நுங்கப்பாகம் சுவாதி கொலை வழக்கு தான் நினைவிற்கு வந்தது. இன்றுவரை அதன்பின் ஒழிந்திருக்கும் அரசியல் பற்றி நாம் அறியாதது, நம் முட்டாள்தனத்தினை நினைவு கூர்கிறது.

உச்ச நடிகர்களின் குப்பை படங்களுக்கு ஃபயர் விட்டு, அதற்காக சண்டைக்கட்டித் திரியும் நாம் இது போன்ற நல்ல படங்களை கண்டுக்காமல் போனது கேவலமான செயலாக தான் எண்ணத் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்தும் நாம் கண்டுகொள்ளாமல் போனது மேலும் வருத்திற்குரியது.

மேலும் படம் வந்த காலமும் படத்தை பற்றி நாம் அறியாமல் போனதிற்கு ஒரு காரணமாக இருக்கலாம், சற்று பொறுத்து தாமதமாக விட்டிருந்தால் திரையரங்கிலே கொண்டாடிருக்க கூடிய ஒரு படம் தான்.

#AravindSwaminathan வாழ்க்கைப் பற்றி விரிவாக சொல்லாததும், படத்தின் இறுதிக் காட்சியில் அவர் சொல்லும் வசனமும்

இரண்டாம் பாகத்திற்கான லீடாக வைத்துள்ளதாக நினைத்தேன். அது போலவே படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளிவர உள்ளதாக Wikipedia வில் குறிப்பிட்டு உள்ளனர்.

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் தான் இந்த #JanaGanaMana

படத்தின் இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனது பயோவில் உள்ள டெலிகிராம் சேனலின் இணைப்பில் இணைந்து, சேனலின் பின் லிஸ்ட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

@KalaiyarasanS16
@Gurumoorthy0512

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling