யானைகளும் நெகிழியும்
1800களில் மேடைக் கோற்பந்தாட்டம் (Billiards) வளர்ந்து வந்த நிலையில், அதன் பந்துகள் காட்டு யானை வேட்டையாடப்பட்டு அதன் தந்தங்களால் செய்யப்பட்டு வந்தது. நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் "யானை தந்தத்துக்கு மாற்று"
#PhyFron. (1/16)
கொடுப்பவர்களுக்கு பாதாயிரம் அமெரிக்க டாலர் பரிசு என அறிவித்தது. அப்போது 1869ல் ஜான் விசிலே ஹயாத் (John Wesley Hyatt) என்பவர் பருத்தியிலருந்து "செல்லுலாய்ட்" என்ற நெகிழியை உருவாக்கினார். அது பொருளியல் துறையில் முக்கிய பங்களிப்பாக இருந்தது காரணம்... (2/16)
...இயற்கையாக கிடைக்கும் உலோகம், எழும்பு, கொம்பு தந்தம் ஆகியனவற்றில் தேவை இல்லாமல் மனிதனால் ஒரு பொருளை தயாரிக்க முடியும் என்ற ஊக்கத்தை "செல்லுலாயிட்" தந்தது. அன்று "செல்லுலாயிட்" ஆமை மற்றும் யானைகளை காக்க வந்த மீட்பராக விளம்பரப்படுத்தப்பட்டது. (3/16)
1907ல் லியோ பேக்லேண்ட் முழுவதும் செயற்கையாக உருவாக்கப்பட்ட "பேக்கலைட்" (Bakelite) என்ற நெகிழியை உருவாக்கினார். அதுவே தற்கால நெகிழி உற்பத்திக்கு அடித்தளமாக அமைந்தது. (4/16)
1920 ஹெர்மன் (Herman Staudinger) இன்று பாலிமர் (polymer - ஒரே மாதிரியாக பிணைக்கப்பட்ட பல அலகுகளைக் கொண்ட ஒரு மூலக்கூறு) என்றழைக்கப்படும் நெகிழியின் உற்பத்தியை சாத்தியப்படுத்தினார்.
2ஆம் உலகப் போரின் (1933 - 1945) போது உலோக மற்றும் பொறியியல் துறை போல... (5/16)
... நெகிழி தயாரிப்பிலும் பல முன்னெடுப்புக்கள் நடந்தது.
பாலியெத்திலின் (PE) 1933ஆம் இங்கிலாந்தின் உருவாக்கப்பட்டு (இது ரகசியமாக வைக்கப்பட்டது) விமானத்தில் ரேடார் இணைப்புகளுக்கு காப்பு படிவமாக (insulation) PE பயன்படுத்தப்பட்டது. (6/16)
பாலிஸ்டைரின் (Polystyrene - PS) அச்சு உருவ துத்தநாக மாற்றாக உருவாக்கினர். பின்னர் ரப்பருக்கு மாற்று மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. (7/16)
நைலான் 1939ல் தயாரிக்கப்பட்டு கயிறு, பாராசூட் செய்ய பயன்படுத்தப்பட்டது. 1941ல் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் விரி பாலிஸ்டைரின் (Expanded PS) தயாரித்து. அதன் திறன் மூலம் வெப்ப காப்பாகவும், ஷாக் அப்சார்பராக EPS பயன்பட்டன.1950களில் இருந்து நெகிழி உற்பத்தி சூடு பிடிக்க ஆரமித்தது. (8/16)
பாலியஸ்டர் 1950லும், இன்று அன்றாடம் பயன்படுத்தும் பாலிப்ரோப்பிலின் தயாரிப்பு 1954ல் தொடங்கப்பட்டது. இன்று பால் மற்றும் குளிர் பான அடைக்க பயன்படும் அதிக கனம் கொண்ட பாலியெத்திலின் (High Density PE), இதன் உருவாக்கம் நெகிழி உற்பத்திக்கு ஊக்கம் அளித்தது.
(Pic 2- appl of HDPE). (9/16)
1960களில் பாலிசல்போன் (Polysulfone) வகை நெகிழிகள் உருவாக்கப்பட்டு 1965ல் அப்பலோ விண்வெளி வீரர்களின் உடையாக பயன்படுத்தினர். (10/16)
1965ல் கேவ்ளர் என்ற செயற்கை நார் சக்கரங்களில் எஃகு வயர்களுக்கு மாற்றாக முதலில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் கேவ்ளர் கொண்டே குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கப்படுகிறது. (11/16)
1970களுக்கு பிறகு சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மக்கும் நெகிழிகளை தயாரிக்க முன்னெடுப்புக்கள் நடந்தன ( ஆராய்ச்சிகள் இன்றளவும் நீடிக்கிறது) (12/16)
இன்று பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி அதன் குறை எடையினாலும், பொருளாதார மற்றும் இயந்திர பண்புகளாலும் மின்னனு, மின்சாரம், கணிணி, உணவு, மருத்துவம், வானூர்தி, தானியங்கி, இதர பொறியியல் துறை என அதன் பயன்பாடு இன்றியமையாதது ஆகிவிட்டது
(Pic 1- in medical field, Pic -2 in electronic) .(13/16)
(எ.கா) வானூர்தி மற்றும் வாகனங்களில் நெகிழி பயன்பாடு எரிப்பொருளை மிச்சப்படுத்துகிறது. பால் மற்றும் இதர உணவுப் பொருட்கள் துறையில் தயாரிக்கும் இடத்திலிருந்து பயனாளிகளுக்கு அளவான பொருளாதாரத்தில், பாதுகாப்பாக சேர்க்க முடிகிறது.(14/16)
இந்த பூமியில் கிடைக்கும் எந்த பொருளும் எதோ ஒரு ஈடு செய்ய முடியாத விலையில்தான் கிடைக்கப்பெறுகிறது அது இரும்பு, அலுமினியமும், தங்கம், வைரம், கிராபைட், செம்பு என எதுவாக இருந்தாலும் சரி. (15/16)
நெகிழியின் சுற்றுச்சூழல் மாசு மறுக்க முடியாத உண்மை, ஆனால் நெகிழியை அச்சுறுத்தும் பொருளாக சித்தரிப்பது மிகையானதாக தோன்றுகிறது. நெகிழியை துரத்துவதை நிறுத்தி அதனை கையாளும் முறை மற்றும் மறுசுழற்சி திறனை மேம்படுத்த வேண்டும். (16/16)
இந்த பதிவு நெகிழியை உற்பத்தியை ஆதரித்து அல்ல மாறாக நெகிழியின் இன்றியமையாமையை விளக்கவே இந்த பதிவு.
நன்றி
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.