👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Aug 24, 2022, 11 tweets

நீங்க மட்டும் தான் புத்திசாலியா?
என உச்சநீதிமன்றம் கேட்கிறது ..
கேட்கவே காதுகளில் தேன் பாய்கிறது .. உனக்கு படிப்பே வராது உனக்கு அறிவில்லை என எம்மை ஒதுக்கிவைத்த காலம் உண்டு ..
..
எம் பிள்ளைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் 1904 ல் விக்டோரியா ஹாலில் நடத்த ஆங்கிலேய

அரசிற்கு பரிந்துரைக்க நடத்தபட்ட கூட்டத்தில் அயோத்திதாசர் கேட்டதும் அவர் வெளியேற்றபட்ட வரலாறும் உண்டு .. விடுதலையடைந்தும் 1952ல் சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் ஏறக்குறைய அதே கோரிக்கையை வைத்த போது
ராஜகோபாலாச்சாரி துறைசார்ந்த கோரிக்கையை கேளுங்கள் .. சவுக்காரம் மலிவுவிலையில்

வேண்டும் படித்துறை வேண்டும் என கேளுங்கள் என கேட்ட வரலாறு உண்டு .. "துறைசார்ந்த கோரிக்கை " என்ற பதம் கையாளபட்டது அப்போதுதான்
எம் பிள்ளைகள் கல்வியில் அறிவில் சிறந்து விளங்க வேண்டிதான் தொடர்ந்து உழைக்கிறோம் .. முதல்பட்டதாரிக்கு கல்வி இலவசம் பிறகு முதல் தலைமுறைக்கே இலவசம்

என தொடர்ந்து இயங்கி எம் மக்களை அறிவுடையோராய் மாற்றியிருக்கிறோம் அதனால் தான் மதவெறியர்களால் காலூன்ற முடியவில்லை
நாங்கள் புத்திசாலிதான் ஆனால் நாங்கள் மட்டுமே புத்திசாலிகள் என எங்கும் சொல்லவில்லை
PTR கூட எங்களை விட திறமையாக செயல்பட்டிருந்தால் தரவுகளை தாருங்கள் என்றுதான் சொன்னார் .

எதையும் அறிவுக்கொண்டு பார்ப்பவர்கள், சட்டத்தின் மூலமே தீர்வு வேண்டுமென நினைப்பவர்கள் எங்கள் IPC மீது அரசியல் சாசனம் எதை சொல்லியிருக்கிறதோ அதன் அடிப்படையில் தீர்ப்பு வேண்டுமே தவிர மநுநீதி அடிப்படையில் அல்ல .. அரசன் உத்தரவென்ன ஆண்டவன் உத்தரவிற்கே கேள்வி கேட்பவர்கள் நாங்கள்

காரணம் அறிவு தரும் தெளிவு ..
..
மலையப்பன் வழக்கில் தீர்ப்பை விமர்சனம் செய்தார் பெரியார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது ..அதில் நேர்நின்று பேசியது உண்மை ..உண்மையைதான் சொன்னேன் என்றார் .. எதையும் அறிவு கொண்டே சிந்திப்பவர்கள் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் தாக்கல்

செய்து கலைஞர் பேசியது
மலத்தை கையிலும் தலையில் அள்ளுவோருக்கு தனி ஒதுக்கீடை தலையில் தூக்கி ஆடுகிறேன் இதேபோல் பள்ளத்தை கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் பகுத்தறிவு துணைக்கொண்டு என்றார் .. ஆம் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் மின்னுகிறதே.. இங்கே மதவாதத்தின் பொய்

பிரச்சாரங்களை மக்களே எள்ளிநகையாடுகிறார்களே .. இறை நம்பிக்கையுள்ளவர்கள் இல்லாதோர் யாராயினும் மனிதத்தோடு வாழ்கிறார்களே
மத சாதிவெறியை தூண்டுபவர்கள் மக்களால் ஒதுக்கபடுகிறார்களே இவையாவும் திராவிடத்தால் நிகழ்ந்தது ஆம் திராவிடம் செப்பனிட்டது .
குஜராத்திற்கு ட்ரம்ப் வந்தபோது துணியைகட்ட

மறைக்கும் புத்திசாலிதிதனம் எங்களிடமில்லை .. எதையும் வெளிப்படையாக செய்யும் நேர்மையும் துணிவு உண்டு.. காரணம்
எங்களின் மக்கள் நல திட்டங்கள் காலங்கடந்தும் பேசபடுகிறது இந்திய ஒன்றியம் இப்போதுதான் கொண்டு வரும் திட்டங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எம் தலைவர்
கலைஞர் செயல்படுத்தி

காட்டினார் காரணம் பெரியார் எனும் பெருந் தீ தந்த அறிவின் வெளிச்சம் எம்மை முன்னேற்ற பாதையில் செலுத்தியது ..
..
இங்கே அறிவு தான் பேசபடும் .. இங்கே கல்விதான் தெளிவை தந்திருக்கிறது .. பொய் மூட்டைகளை மூடநம்பிக்கைகளை இனங்கண்டு புறந்தள்ளும் நேர்மையும் தெளிவும் உண்டு ..இயல்பாகவே தமிழர்கள்

பன்னெடுங்காலமாய் அறிவின் நிழலில் வாழ்பவர்கள் ஐம்பெரும் காப்பியங்களும் தொல்காப்பியம் திருக்குறளென எல்லா இலக்கியமும் அறிவையும் நன்னெறியையும் சொல்லித் தந்திருக்கிறது
திமுக மட்டும்தான் புத்திசாலி கட்சியா என கேட்போருக்கு
எங்கள் தலைமையகத்தின்
பெயர் கூட #அறிவாலயம் தான்
#ஆலஞ்சியார்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling