ಮಲ್ಲೇಶ್ವರ ( వంగిపురం ) Profile picture
आचार्य अभिमानमे उत्तारकम् 🙏 Rest will be washed & poured, so think twice before engaging with me. Sachin & Ilayaraja are not GODs TMK & ARR are 🪙

Nov 27, 2022, 34 tweets

[Music Thread] #LREswari
எல்லோருக்கும் வணக்கம். இனியொரு அருமையான இசை இழையில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. வழக்கும் போல் இனிய இசை நண்பர்கள் .@RagavanG @veeba6 இருவரும் இந்த இசை பயணத்தில் இணைகிறார்கள்.

எதிர் வரும் டிசம்பர் 8ந் தேதி, 83 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் லூர்து மேரி ஈசுவரி (எ ) எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் பாடல்களை கொண்டாடப்போகிறாம் இன்று முதல்.

எந்த பாடக பாடகியுரடனும் , எந்த வகையான பாடல்களாக இருந்தாலும், இலகுவாக இணைந்து பாடல் வரிகள், இசை, பாடல் காட்சிகளுக்கேற்ப பாடக்கூடியவர். அவரையுடைய திரை இசை 1950இல் தொடங்கி 2011லும் 'கலாசலா கலாசலா' என்று எல்லோரையும் ஆட வைத்தவர்.

அதிரடி பாடல்களா, கிளப் நடன பாடல்களா, வில்லி கதாபாத்திர பாடல்களா ஈசம்மா பாடினால், அந்த பாடல் கண்டிப்பாக வெற்றி பெரும் என்றொரு காலம். ஆனால் அவரே, காதல் ஜோடி பாடல்களிலும் பின்னி எடுத்தார்.

60 மற்றும் 70 களில் பெண் பாடகிகள் ஜோடி பாடல்கள் வெகு பிரபலம். இவர் நிறைய பெண் ஜோடி பாடல்களை, ஜமுனா ராணி, சுசீலா, எல் ஆர் அஞ்சலி, ஏ பி கோமளா அவர்களுடன் பாடி இருக்கிறார். எல்லா இசை அமைப்பாளர்கள் இசையிலும் பாடி இருக்கிறார்.

திரை இசை மட்டுமில்லாமல், ஆடி மாசம் என்றாலே, தமிழகமெங்கும் இவரின் பாடல்கள் தான் அத்தனை அம்மன் கோவில் திருவிழாக்களிலும் ஒலிக்கும்.
'செல்லாத்தா செல்ல மாரியாத்தா ' , 'கற்பூர நாயகியே கனகவல்லி'. 'உடுக்கை ஒலியினிலே, என்று ஆடியிலே அம்மன் அருளினால் இவர் ஆட்டம் தான்.

வரும் நாட்களில், அவர் தனியாக பாடியது மட்டுமில்லாமல், மற்ற பாடக பாடகியருடன் பாடிய பாடல்களை கேட்டு மகிழலாம்.

இன்றைய முதல் இழையில் நாம் பார்க்கவிருப்பது, ஏ எல் ராகவனுடன், ஈஸ்வரி அம்மா இணைந்து பாடிய பாடல்களை. ஏஎல்ஆர் ஒரு பாடகர் மட்டுமில்லாமல், நல்ல இசை அமைப்பாளரும்கூட. ஐவரும் ஈசம்மாவை போலவே பல்துறை வித்தகர்

முதலாவதாக வரும் இந்த பாடல் 'வேட்டைக்காரன்' படத்திலிருந்து கேவிஎம் இசையில்
'சீட்டு கட்டு ராஜா'
1/10 #LREALR

இந்த பாடலும் கேவிஎம் இசையில் 'யானை பாகன் ' 'படத்திலிருந்து
ஆம்பளைக்கு பொம்பளை அவசியம்தான்

2/10 #LREALR

'தாயில்லா பிள்ளை' படத்திலிருந்து கவியரசர் வரிகளை கேவிஎம் இசைக்க
காலம் மாறுது கருதும் மாறுது

3/10 #LREALR

மன்னர் கவியரசர் வரிகளுக்கு இசை அமைக்க 'மீண்டும் வாழ்வேன்' படத்திலிருந்து
உன்னை நெனைச்சா கொஞ்சம்
4/10 #LREALR

கே வி எம் இசையில் வியட்நாம் வீடு படத்திலிருந்து
மை லேடி


5/10 #LREALR

வானம்பாடி படத்திலிருந்து கே வி எம் இசையில்
நில் கவனி புறப்படு
6/10 #LREALR

விச்சு ராமு இசையில் 'கருப்பு பணம்' படத்திலிருந்து இந்த இனிமையான பாடல்
பட்டு சிறகு கொண்ட

7/10 #LREALR

கலைஞர் அவர்களின் வைர வரிகளில் 'காஞ்சி தலைவன்' படத்திலிருந்து
உலகம் சுத்துது எதனாலே

8/10 #LREALR

மன்னர் இசையில் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்திலிருந்து
என்ஜின் வேகம் இளமையின் வேகம்

9/10 #LREALR

கே வி எம் இசையில் கவியரசர் வரிகளில்
' இருவர் உள்ளம் 'படத்திலிருந்து

10/10 #LREALR

இந்த இழையை ரசித்திருப்பீர்கள். அடுத்த இழை நாளை அல்லது மறுநாளில் சந்திக்கும் வரை....🙏

அனைவருக்கும் வணக்கம். இன்றைய மாலையை இனிமையாக்க சக இசை நண்பர்கள் .@RagavanG @veeba6 மீண்டும் இன்னொரு ஈஸ்வரி அம்மாவின் பாடல்களை பார்ப்போம்

இன்று ஈஸ்வரி அம்மாவுடன் இணைந்து பாட போகிறவர் வெண்குல குரலோன், தெய்வ பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். இவர் பெயரை சொன்னவுடன் அவரின் பக்தி பாடல்கள், திரையிலும் அவர் பாடிய பக்தி பாடங்கள் தாம்.

அவர் பக்தி பாடல்கள் மட்டுமில்லாமல் நிறைய ஜனரஞ்சக பாடல்களையும் திரை இசைக்காக பாடியுள்ளார், தனியாவாகும், மற்ற பாடக பாடகியுரடனும். இன்றைக்கு அதிலிருந்து அவர் ஈஸ்வரி அம்மாவுடன் இணைந்து பாடிய பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்.

முதலாவதாக வரும் இந்த தெம்மாங்கு பாடல் 'வாழ்க்கை படகு' திரை படத்திலிருந்து
பழனிச் சந்தன வாடையடிக்குது பூசியது யாரோ
1/10 #LRESirkazhi

'பூஜைக்கு வந்த மலர்' படத்திலிருந்து வரும் இந்த மெலடி
வெண் பளிங்கு மேடை கட்டி
2/10 #LRESirkazhi

மற்றொரு தெம்மாங்கு பாடல் 'இது சத்தியம்' படத்திற்காக
சிங்காரத் தேருக்கு சேலைகட்டி
3/10 #LRESirkazhi

புலமைப்பித்தன் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த பாடல் இடம் பெற்ற 'மணிப்பயல் ' படத்திலிருந்து
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
4/10 #LRESirkazhi

மருதகாசி வரிகள் 'பாக பிரிவினை' திரை படத்திற்காக
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
5/10 #LRESirkazhi

சிவாஜி கணேசனடா :-)
'என் தம்பி' படத்திலிருந்து கணேசனுக்காக இந்த ஆட்டம் போடும் பாடல்
முந்தி முந்தி விநாயகனே
6/10 #LRESirkazhi

அசத்தும் அந்த ஆரம்ப எலக்ட்ரிக் கிடார், 'வல்லவனுக்கு வல்லவன்'
கண்டாலும் கண்டேனே உன் போலே
7/10 #LRESirkazhi

ஈசம்மாவின் அந்த ஹம்மிங் பாடல் முழுக்க
'உயிரா மானமா ' படத்திலிருந்து இந்த அற்புதமான பாடல்
குற்றால மலையிலே
8/10 #LRESirkazhi

என்னவொரு அற்புதமான பாடல் இது. 'சாரதா' திரை படத்திலிருந்து
சரணத்திற்கு முன்பு வரும் அந்த ஹம்மிங், சங்கதிகள்.
தட்டு தடுமாறி நெஞ்சம்
9/10 #LRESirkazhi

நீ பிறந்து இருக்கிற வேண்டியது இங்கிலாண்ட்
டி பி ராமசந்திரன் அவர்கள் இசையில் வரும் இந்த உற்சாகமான பாடல் 'மனம் ஒரு குரங்கு' படத்திலிருந்து
10/10 #LRESirkazhi

இந்த இழையை ரசித்திருப்பீர்கள். அடுத்த இழை நாளை அல்லது மறுநாளில் சந்திக்கும் வரை....🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling