Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Dec 27, 2022, 7 tweets

#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி3
சுபாவத்திலேயே எம். ஜி. ஆருக்கு ஆணவம் உண்டு. அவரது ஒரு படம் வெற்றிகரமாக ஓடிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களைச் சித்ரவதை செய்துவிடுவார்.
யாரையும் அலட்சியமாகவே பார்ப்பார்.
அதே நேரத்தில்
தான் ஒரு திறமையான நடிகன் அல்ல என்பதை அவரே உணர்ந்திருக்கிறார்.

மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது கொட்டகைக்கு ஆள் ஆனுப்பி கேலி செய்வது,போஸ்டர்கள் மீது சாணி வீசச்செய்வது
தன் படங்களுக்கு டிக்கெட் வாங்கித் தந்து ரசிகர்களைக் கை தட்டச் செய்வார். உருக்கமான 'சீன்' எழுதினால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியர்களைக் கேளாமலேயே மாற்றிவிடுவார்.

நீங்கள் எழுதியிருப்பதை ஜனங்கள் விரும்பமாட்டார்கள்” என்பார். படத்தில் தன்னைப் புகழ்ந்து பாடல்கள் எழுத வேண்டும் என்பார்
அத்தகைய பாடல்களுக்குத் தான் முதலிடம் தருவார்.
ஜனங்களை எதிலே மயங்க வைப்பது, எப்படி நீண்டநாள் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.

சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும், எப்போதும் ஏமாற்ற முடியாது" என்றெரு பழமொழி உண்டு
அந்தப் பழமொழியைப் பொய்யாக்கியவர் எம். ஜி. ஆர். “திட்டமிட்டு வேலை செய்தால் எவரையும் நீண்ட நாளைக்கு ஏமாற்ற முடியும்" என்பதற்கு எம். ஜி. ஆர். உதாரணம்.

1950-ல் கட்சிக்குள் வந்தபோது நடிகர்களுக்குப் பெரிய மரியாதை தருவதை மூத்தவர்கள் எதிர்த்தனர்.
கஷ்டப்பட்டு பணத்தை இழந்து வேலை செய்கிறோம். அழுக்குப் படாமல் வந்துபோய் அலங்காரப் பொம்மையாக நடிகர்களை தொண்டர்கள் எங்களை ஏறி மிதித்துக்கொண்டு தொட்டுப்பார்க்கப் போகிறார்கள். இதை எப்படி அண்ணா

அவர்கள் அனுமதிக்கலாம் என்று போர்க்கொடி தூக்கினர்.
திருவொற்றியூர் காவலர் கூட்டத்தில் அறிஞர் அண்ணா
"எம்ஜிஆரைக் கட்சிக்கு இழுத்தது கருணாநிதி. அவரை மக்கள் திலகம்,புரட்சிவீரர் பட்டம் போட்டு அழைத்தது கண்ணதாசன் இப்போது கட்சியில் அவருக்கிருக்கிற செல்வாக்கெல்லாம் அவர்களால் வந்த வினை இது

இனி'நான் எதைக் காரணம் காட்டி எம்ஜிஆர்கட்சிக்கு வேண்டாம் என்று சொல்ல முடியும்?
என பேசி சமரசம் உண்டாக்கினார்
எம்ஜிஆரின் ஜாதகம் அசுரஜாதகமாவதற்கு, பிரக்ஞை இல்லாமலே கண்ணதாசனும் கலைஞரும் ஒத்துழைத்தால் வருந்தினர்.
எம்ஜிஆர் மீது என்ன குற்றம் சுமத்தினாலும் ஜனங்கள் அதை நம்ப தயாராக இல்லை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling