Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Dec 28, 2022, 10 tweets

#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி4_அடிமைகள்
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் சேர்ந்தால் அன்று உங்களைக் கட்டித் தழுவி வரவேற்பார். செயற்கை சிரிப்புச் சிரிப்பார்.
பிறகு தெருத்திண்ணையில் உட்காரவைத்துவிடுவார்.
உங்கள் கடந்தகால சேவை, பெருமை, சுயமரி யாதை எதையும் கணக்கில் எடுக்கமாட்டார்

காமராஜரைப் போல கலைஞரை போல அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் அல்ல. அந்தப் பாரம்பரியம் உள்ளவர்களிடம்தான் பெருந்தன்மை இருக்கும்.
இவர் மேக்-அப் ரூமிலிருந்து மேடைக்கு ஓடிவந்தவர்.
ஸ்டுடியோவிலோ, ஆபீசிலோ பார்க்கப் போகிறவர்கள் வாயும் வயிறும் காய வெளித் திண்ணையிலேயே காத்துக் கிடந்தார்கள்

பி.டி.சரஸ்வதி ஒருவர்தான் நினைத்த நேரமெல்லாம் அவரைப் பார்க்க முடிந்தது
யாராவது புடவையை கட்டிக் கொண்டு போனால் உடனே பார்க்கலாம்
சரியான நேரத்தில் அவருக்குக் கைகொடுத்த மதியழகனையே தெருவில் விட்டார்.
டிரைவரை அனுப்பி,
'என் எதிரில் மதியழகன் சிகரெட் பிடிக்கக்கூடாது என சொல்லு' என்றவர்

அவரது அலுவலகத்தில் ஸ்டண்ட் நடிகரோடு நடிகராக MLA க்கள் எல்லாம் சத்யா ஸ்டுடியோவில் உட்கார்ந்திருந்தார்கள்,
எத்தனை ரதிகள் ரம்பைகள் வந்தாலும் அவர்களிடம் 5 நிமிடத்துக்குமேல் காமராஜர் பேசமாட்டார்.
கட்சிக்காரர்களைத்தான் சீக்கிரம் கூப்பிடுவார்.
கலைஞரின் கவனிப்பும் மிக உயர்வாக இருக்கும்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால்...பழமொழிக்கு எம். ஜி. ஆர். கண்கண்ட உதாரணம்.
அதோடு அவரது இன உணர்ச்சி உங்கள் கவனத்தில் இருக்கவேண்டிய ஒன்று.
கட்சியில் தனக்கு அடுத்த இடத்தை வேறு யாருக்கும் தர அவர் விரும்பவில்லை.
தன்னுடைய இனத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மனோகரனுக்கு அதைத் தந்தார்.

அதிமுக பொருளாளருக்கும் ஒரு ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் இன உணர்ச்சி இல்லாது அழிந்துபோனது தமிழ்ச்சாதி மட்டுமே.
எல்லோர் மீதும் ஊழல் ஊழல் என்று குற்றம் சாட்டிய எம். ஜி. ஆர்.மனோகரன் மீது சுமத்தியதில்லை.
தமிழ்நாட்டிலேயே “ஊழல் சக்ரவர்த்தி” பட்டம் அவருக்குத்தான் .

பல வட்ச ரூபாய் செலவில் அண்ண நகரில் அவர் கட்டியா வீடு எந்தச் சம்பாத்தியத்தில் வந்தது?
அவரது மூதாதையர்கள் தேங்காய் உரித்து சம்பாதித்ததா திருவனந்தபுரத்தில் வேறு ஏதாவது தொழில்கள் நடத்தினார்களா?
அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொழில் மட்டுமே பரபரப்பாகவும், பளபளப்பாகவும் நடைபெற்றது.

யாரையும் கலந்து ஆலோசிக்காமல்
பதினெட்டுச் செயலாளர்கள், முன்னூறு பொதுக்குழு உறுப் பினர்கள் என்று பட்டியல் போட்டார் எம்.ஜி.ஆர்.கட்சிக் கொள்கை அறிவிப்பு வெளியிடும்போது மனோகரனைத் தவிர வேறு யாரையும் கலந்து கொள்ளவில்லை
சுயமரியாதை உள்ளவர் அவர் கட்சியிலிருந்து அப்போதே வெளியேறி விட்டார்கள்

வேளைக்கொரு புடவை மாற்றிக்கொண்டு பி. டி. சரஸ்வதி மட்டும் எம்.ஜி.ஆரிடம் தனக்குள்ள செல்வாக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்.
கட்சியின் மகளிர் பகுதிக்கு நல்ல புதுமுகங்களையெல்லாம்
அவர் கொண்டு வந்தார்.
பரிதாபத்துக்குரிய தமிழ்ச்சாதி அவருக்கு ஓட்டும் போட்டு, ஆட்டமும் போட வைத்துவிட்டது.

கட்சிக்காரனைக் கண்மணிபோல் காப்பாற்றுபவர் கருணநிதி,
கட்சிக்காரர்களை எப்போதும் கவனத்திலேயே வைத்துக் கொண்டிருப்பவர் காமராஜர். இவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு எம்ஜிஆரை
தமிழ்ச்சாதி நம்பியது
இன்றைய டயர் நக்கிகள் தரை நக்கிகள் உருவாக அன்றே பிள்ளையார் சுழி இடப்பட்டது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling