VISWA Profile picture
Reply for 🔂, RT for 🔁, ❤️ for ❤️

Dec 29, 2022, 9 tweets

#எம்ஜிஆர்_ரகசியங்கள்
#பகுதி5_சாடிஸ்ட்MGR
25 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார்.
அக்காலத்தில் அவருக்கு உதவியவர் ஜூபிடர் பிக்சர்சில் மேனேஜராக இருந்த டி.எஸ். வெங்கடசாமி .
யு. ஆர். ஜீவரத்தினத்தின் கணவர்.
கண்ணதாசன் முதல் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுத்தவர்

பாகவதர் நடித்த ‘அசோக் குமாரில்" ஓரு சிறு வேஷத்தில் நடித்திருந்த எம். ஜி. ஆரை ஜூபிடர் பிக்சர்சார் தங்கள் 'ராஜ குமாரி' படத்தில் கதாநாயகனாகப் போட்டார்கள்.
அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணநிதி அவர்கள்தான்.
அவரது வசனம் படத்தில் ஒரு சிறப்பான அம்சம்,
ஜூபிடர் பிக்சர்சில்

மேனேஜர் அறைக்கு நேராக இருந்த நாற்காலிகளில் தோழர்கள் எம்.ஜி.ஆரும், சக்கரபாணியும் உட்கார்ந்திருப்பார்கள்.
எம்.ஜி.ஆரை வெகு நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கூப்பிட்டு பணம் கொடுத்து அனுப்புவார் வெங்கடசாமி. அவர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்.
துணை நடிகனைக்கூட அவமானப்படுத்த
மாட்டார்.

எப்போதும் சிரித்த முகத்தோடு கொடிகட்டிப் பறந்த காலம் அது. ஜீவரத்தினத்தைத் திருமணம் செய்த பிறகு அவர் ஜூபிடரில் இருந்து விலகினார்.
திருமணத்திற்குப் பிறகு ஜீவரத்தினம் படங்களில் நடிக்கவில்லை.
சென்னைக்கு வந்த வெங்கடசாமி படங்கள் எடுத்துத் தோல்வி அடைந்து நஷ்டப்பட்டதால் கஷ்டப்பட்டார்.

முன்பு தான் எம். ஜி. ஆருக்கு
உதவியதை மனதில் வைத்துக்கொண்டு எம். ஜி. ஆரின் புகழ் உயர்ந்திருந்த நேரத்தில் அவரை வைத்துப் படம் எடுப்பதற்காக அணுகினார்.
வழக்கம்போல், எம். ஜி. ஆர். செயற்கையாகச் சிரித்து உற்சாகப்படுத்தினார்.
பிரமாதமான நம்பிக்கைகளையெல்லாம் உண்டாக்கினார்.

அதை நம்பி கடன் வாங்கி படத்தை ஆரம்பித்தார் வெங்கடசாமி.
நாலாயிரம் அடி படம் வளர்ந்தது. பிறகு வெங்கடசாமியையும் தெருத் திண்ணையில்
உட்கார விட்டார், எம்.ஜி.ஆர்.
செல்வாக்கோடும் சுயமரியாதையோடும் வாழ்ந்த வெங்கடசாமி, கடன்பட்டு எம். ஜி.ஆர். வீட்டுப் படிக்கட்டில் பிச்சைக்காரனைப்போல் நின்றார்

கஷ்டப்பட்ட வெங்கடசாமியை வேலைக்கு வைத்துக் கொள்வதாகச் சொல்லி சத்தியா ஸ்டுடியோவில் சேர்த்துக்கொண்டார்.
எந்த வெங்கடசாமி முன் அவர் கைகட்டி நின்றாரோ அவரையே தன் முன்னால் கைகட்டி நிற்க வைத்து சுய திருப்தி அடைந்தார் எம்ஜிஆர்
வெங்கடசாமியின் மனநோய் உடல் நோயாக மாறிற்று.

அந்த நேரத்தில் ஒரு தவறும் செய்யாத அவரை "தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டார்” என்று குற்றஞ்சாட்டி காலணக்கூடக் கொடுக்காமல் வெளியேற்றினார் எம். ஜி. ஆர்.
நோய் முற்றி, வேங்கடசாமி மாரடைப்பால் இறந்தார்
எம்.ஜி.ஆர்.காய்ந்து கிடந்த போது தண்ணீர் ஊற்றிய உத்தமனைக் காப்பாற்றி இருக்கமுடியும்.

வளைந்து கொடுக்காத ஜீவரத்தினத்தை
பழிவாங்கும் வெறியில் வேங்கடசாமி மரணத்திற்குக் காரண மானார்.
நாடகங்ளில் நடித்து வயது வந்த இரு பெண்களை காப்பாற்றி வந்த ஜீவரத்தினத்திற்கு
கழக மேடைகளில் கழகப் பாடல்கள் பாடச் சொல்லி உதவி செய்து அந்த குடும்பத்தை வாழ வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling