Kothaiyinselvan Profile picture
Physicist | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile |

Jan 10, 2023, 20 tweets

#prvnreads #readingchallenge2023

1: அபிப்பிராய சிந்தாமணி - ஜெயமோகன்

ஜெமோவின் நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு. இளவயது நினைவுகள், வாழ்க்கை அனுபவங்கள், நண்பர்கள், இறுதியாக தத்துவ, இலக்கிய பகடிகள் என புத்தகத்தை மூன்றாக பிரிக்கலாம். முதலிரண்டும் எனக்கு விருப்பமானத இருந்தது.

#prvnreads #readingchallenge2023

2. Genius: James Gleick

If you have read SYJ Mr Feynman, this book will give a different account of the life and style of Feynman. Physical concepts are given elegantly so even a novice can follow the book easily. A must read for Physicists.

#prvnreads #readingchallenge2023

3. ஜீவன் லீலா: காலேல்கர்

காலேல்கர் காந்தியின் சீடர். தண்ணீர் மீதான தன் தீராப்பித்தின் காரணமாக இந்தியா முழுவதும் நீர்நிலைகளை தேடி அலைந்தவர். அந்த தேடலின் தொகுப்பே இந்த நூல். இந்திய பயணத்துக்கு ஒரு கையேடும் கூட!

#prvnreads #readingchallenge2023

4. அரசூர் வம்சம்: இரா. முருகன்

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் தென்கோடியில் புகையிலை விற்று வாழும் பிராமண குடும்பத்தின் கதை. முன்னோர்களும், ராஜாவும் ராணியும் பின் பனியன் சகோதரர்களுமாய் நுரைத்து ஓடும் கதைவெளி!

#prvnreads #readingchallenge2023

5. விஸ்வரூபம்: இரா. முருகன்

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி. இரண்டாம் தலைமுறை உலகெங்கும் சிதறி பரந்து, தொலைந்து பின் கூடி பிரியும் மகிழ்ச்சியின், துயரத்தின் கதை.

#prvnreads #readingchallenge2023

இன்னுமொரு தலைமுறை, இன்னும் சில கதைகள். அரசூர் வம்சம்த்தின் தொடர்ச்சி...

#prvnreads #readingchallenge2023

அரசூர் வம்சத்தின் இறுதி நாவல். நான்கு தலைமுறை நான்கு திசையில் பிரிந்து கிடந்து இதில் கூடும் கதை.

#prvnreads #readingchallenge2023

8. இராமோஜியம்

1600, 1800, 1900களிலாக ராமோஜியும், ரத்னாவும் மீளப்பிறந்து வர இடையில் வரும் புவனாவால் என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. இரா. முருகன் நாவல்களில் நான் பெரும் ஏமாற்றம் அடைந்த நாவல் இது. ஆனால் வாசிப்பு சுவாரசியத்துக்கு அபாரம். 👌

#prvnreads #readingchallenge2023

9. What do you care what other people think?

Rather than a sequel it's a kind of appendix to SYJMF. Though it's not as satisfying as its predecessor, you can still enjoy the limitlessness of Feynman and his devotion to science.

#prvnreads #readingchallenge2023

10. ஒற்றன் - அசோகமித்திரன்

அயோவா சிடிக்கு பயணித்து ஏழு மாதங்கள் உலக‌ முழுவதும் இருந்து வரும் எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பு ஒரு தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கிறது. மனிதர்கள் இறுதியில் வெறும் மனிதர்கள் மட்டுமே தானே?

#prvnreads #readingchallenge2023

11. The bear and the nightingale

We're never too old to drown into the world of fairy tales. Set in the mediaeval Russia, the novel explores the life and encounters of 'witch' Vasya. 1st book of a triology compels to read the next.

#prvnreads #readingchallenge2023

12. Orienting: An Indian in Japan

I could say it's more than a starter to delve into the wonders and shortfalls of Japan - which long believed to be a nation of robots and technology.

#prvnreads #readingchallenge2023

13. நாபிக்கமலம்

இளமைக்குக்கு பின்பானதொரு நிரந்தர இலையுதிர் காலத்தில் கண்ணீரும் புன்னகையும் மாறா அன்புமாய் கிடக்கும் ஒரு தொகுப்பு ♥️

#prvnreads #readingchallenge2023

14. நெம்பர் 40, ரெட்டைத்தெரு - இரா. முருகன்

அறுபதுகளில் இருந்த ஒரு பத்து வயது சிறுவனின் நினைவுத்தொகுப்பு. முருகனின் உலகம் நல்லவர்களால் மட்டுமே ஆனாது. இதிலும் அப்படியே. ♥️♥️♥️

#prvnreads #readingchallenge2023

15. பிரதமன் - ஜெயமோகன்

ஐந்து சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவல் கொண்ட தொகுப்பு. சாதரண மனிதர்கள் வாழ்வில் அபூர்வமாக வந்து சேரும் உச்சங்கள் பற்றிய கதைகள்.

#prvnreads #readingchallenge

16. Kumarasambhavam - Kalidasa

One of the Sanskrit classics, beautifully translated by Hank Heifetz. Though it's hard for me to find poetry in many stanzas, the text I can match with A K Ramanujans' works.

#prvnreads #readingchallenge2023

17. மிளகு - இரா.‌ முருகன்

அரசூர் வம்சத்தின் விடை தெரியாத சில கேள்விகளுக்கு பதில்களோடு புதிய கேள்விகள் கொண்ட நாவல். 1600களின் கெருஸாப்பாவில் இருந்து டெல்லி லண்டன் அம்பலபுழை எனப்பரந்து கிடக்கும் வெளி. பிரதிகளின் ஊடாட்டம். 🙌

#prvnreads #readingchallenge2023

அறம் - ஜெயமோகன்

எத்தனாவது தரம் மறுபடியும் படிக்கறேன்னு தெரியல... ஆனா ஒவ்வொரு தரமும் புதுசா ஏதாவது ஒன்னு கிடைக்குது. இந்த தரம் மயில்கழுத்து கதை வேறோரு பரிணாமத்துல தெரிஞ்சது... ♥️

#prvnreads #readingchallenge2023

19. சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷல் தனினோ

இந்திய வரலாற்றில் ஆரியர் வருகை பெரும் விவாதத்துக்குரியது. ரிக் வேதம், அகழ்வாராய்ச்சி, செயற்கைக்கோள் தரவுகள் என ஆரியர் வருகையை மறுதலிக்கிறார் மிஷல். (But recent genetic evidence against this!)

#prvnreads #readingchallenge2023

20. ஆடு ஜீவிதம்

நிஜம் கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதுங்கறதுக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல். பாலைவன வெக்கைலைல மெல்லிய தூறல் கூட வசந்தம் தான்! ♥️

@kadaikkutty நன்றிகள் 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling