Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Feb 1, 2023, 22 tweets

#எம்ஜிஆரின்_குளறுபடிகள்
80களில் ஒரு முறை இலங்கை உள்நாட்டு கலவரத்தால் இங்கு ஏற்பட்ட அரசியல் எழுச்சியை திசை திருப்பிட அப்போதைய முதல்வர் மகோரா தலைமையில் இருந்த அரசு தான் முதன்முதலில் மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயரை சூட்டியது. காமராஜர் சொந்த ஊரான விருதுநகரை காமராஜர் மாவட்டம், ஈரோடு

மாவட்டத்தை பெரியார் மாவட்டம் என்று பெயர் மாற்றினார் முதல்வர் மகோரா.அதில் அறிஞர் அண்ணாவிற்கு துளியும் சம்மந்தமே இல்லாத மதுரையை இரண்டாக பிரித்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார் மகோரா. அதன் பிறகு அதை 1989ல் அமைந்த திமுக அரசு செங்கல்பட்டு மாவட்டத்தை

அண்ணா மாவட்டம் என்று அறிவித்தார் முதல்வர் கலைஞர்.

இது போக மகோரா அரசின் மிகப்பெரிய குளறுபடியான கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை பாதியில் கைவிட்டது. அதை மீண்டும் கையில் எடுத்தார் முதல்வர். ஆந்திரா முதல்வரும் தேசிய முன்னணி தலைவர்களுள் ஒருவரான என்டிஆர் அவர்களை தானே போய் சந்தித்து பேசி,

ஏன் நிறுத்தப்பட்டது என்று விவாதித்து, மகோரா ஆட்சியில் வாக்குறுதி கொடுத்து ஆனால் நிறைவேற்றாமல் நிறுத்தப்பட்டிருந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்க, தவணைத்தொகையை தருவதாக உறுதியளித்தார் முதல்வர். 20 நிமிடங்களில் தீர்வு கண்ட இந்த சந்திப்பில் முதல்வரை அன்றைய கல்கி இதழ் பாராட்டியது.

(மீண்டும் அரசியல் காரணங்களுக்காக 1991-1996ல் கை விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை, 1996ல் சந்திர பாபு நாய்டுவோடு சேர்ந்து நிறைவேற்றி சென்னைக்கு தண்ணீர் கொண்டுவந்ததும் அன்றைக்கு 1996ல் முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியே)

திமுகவின் முந்தைய ஆட்சியான 1971-1976 ஆட்சியில்,

1974க்கு முன்பே துவங்கிய ஒரு மாபெரும் கட்டிடம், கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அம்போ என்று திறக்கப்படாமல் பாதியில் விடப்பட்டது. திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தை தவிர்த்து அந்த கட்டடம் கட்ட எந்த ஒரு தவறோ முறைகேடோ ஏதுமே நடைபெறாத போது, கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்தது என்ற

ஒரே காரணத்தினால் துவக்கப்படாமல் இருந்தது. 1989ல் திமுக அரசு ஏற்பட்டவுடன் திறப்பு விழா செய்தார்.அதுதான் சென்னை எழும்பூரில் இருக்கும் 12 மாடிக் கட்டிடம் தாளமுத்து நடராஜன் மாளிகை. மொழிப்போரில் உயிர் நீத்த தாளமுத்து நடராஜன் ஆகியோர் நினைவு போற்றும் வகையில் அவர்கள் பெயர் சூட்டப்பெற்றது

அடுத்து கலைஞர் செய்து மிகப்பெரிய சேவை மகோராவின் பெயரில் இயங்கிக்கொண்டிருந்த,ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியையும் அரசுடைமையாக்கியது. அது வரை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும், முறையே அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தமிழக அரசு.

ராமச்சந்திரா என்ற பெயரை மாற்றாமல் விட்டது கலைஞரின் பெருந்தன்மை. அதை அரசே எடுத்து நடக்கும் என்று அறிவித்த பத்தே நாட்களில் 'தாமரை'
என்ற தன்னாட்சி பெற்ற உயர்மட்ட மருத்துவ அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அமைத்திட தொடக்க விழாவும் ஏற்பாடு செய்தது தமிழக அரசு. அன்று அதான் தனியார்

நிர்வாகிகள் ஒரு மனதாக அரசுடைமைக்கு ஒப்புதல் அளித்தனர். இப்போது ஏன் அது தனியார் வசம் உள்ளது என்று கேட்பவர்களுக்கு...

1991ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதன் நிர்வாகிகள் அந்த கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1989ல் திமுக

ஆட்சியில் எந்த அறக்கட்டளையினர் தங்களாகவே அரசுடைமையாக்கத்திற்கு தமிழக அரசு கேட்டபோது அளித்தது மட்டுமல்ல, அந்த அரசு விழாவில் கலந்து கொண்டவர்களும் அதே அறங்காவலர்களே..

இன்னொரு கொடுமை என்னவென்றால் உயர்நீதிமன்றத்தில் 1991ல் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அதிமுக அரசு வந்தவுடன்

தீர்ப்பை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு மேல் முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகவேயில்லை. தீர்ப்பு அறக்கட்டளையினர் சார்பாக வந்ததும் அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இன்று வரை அது தனியார் வசமே இருந்து வருகிறது. இன்னொரு விஷயமும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு

செய்த துரோகமும் உண்டு. இங்கு குறிப்பிட வேண்டும். தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்திருந்தாலும் அமைச்சரவையை கூட்டி அவசர அவசரமாக தனியரிடமே ஒப்படைத்துவிட்டது அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.
மகோரா ஆட்சியில் ஒரு சட்டம் நிறைவேற்றினார். 'எந்த அரசாங்க கட்டிடத்திற்கும் உயிரோடு

இருப்பவர்கள் பெயர் இருக்கக்கூடாது' என்பதே அந்த சட்டம். ஆனால் அவரது பெயரில் ஒரு மருத்துவ கல்லூரி இயங்கியது விந்தை. அவர் உயிரோடு இருக்கும் போது ஆரம்பித்த கட்டிடம் அவர் மறைந்தவுடன் டாக்டர்.எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் என்று ஜானகி அம்மையார் ஆட்சியில் நிறுவப்பட்டது. ஆனால் அது

பெயரளவே நடத்தப்பட்டது. அதுவும் தரமணியில் ஏதோ ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது அரசு.

சென்னையில் வேறொரு மருத்துவமனையின் விழாவில் பேசியவர்கள் அனைவருமே, முதல்வர் கலைஞர் ஏதாவது நினைத்துக்கொள்வார் என்று வெறுமனே 'மருத்துவ பல்கலைக்கழகம்'என்றே குறிப்பிட்டு பேசினார். கடைசியாக

பேசிய கலைஞர், 'இங்கே பேசியவர்கள் அனைவருமே எம்ஜிஆர் பல்கலைக்கழகம் என்று அதன் துணை வேந்தர் உட்பட யாருமே குறிப்பிடவில்லை. இதில் நான் தவறாக எண்ணுவேன் என்ற எண்ணமே தேவையில்லை, உள்ளதை உள்ள படி குறிப்பிடுவதால் தவறு இல்லை, விரைவில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மாளிகை போன்ற

ஒரு கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.
சொன்னதோடு அல்லாமல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், டாக்டர், எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் முதல்வர் கலைஞர் விழாவிற்கு ஆளுநர் அலெக்சாண்டர் தலைமையில், குடியரசு தலைவர்

வெங்கட்ராமன் துவக்கி வைத்து உரையாற்றினார். அன்று அந்த விழாவில் பேசிய கலைஞர்,
"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்தகம்
நக நட்பது நட்பு"
என்ற குறளுக்கு ஏற்ப,
'40 ஆண்டு காலம் கலைத்துறை,அரசியல் துறை ஆகிய இரண்டு துறைகளிலும் என்னோடு தோளோடு தோள் நின்ற எனது அருமை நண்பர், மறைந்த முதலமைச்சர்

டாக்டர் எம்ஜிஆர் அவர்களுடைய பெயரால் தொடங்கப்பட்டு ஆனால் இதுவரை அதிகார்வ பூர்வமாக தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறாமல் இன்று நடைபெறுகிறது' என்று பேசினார்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அந்த கட்டிடத்தின் வடிவத்தை தன் கை பட வரைந்து கொடுத்ததும் கலைஞர் கருணாநிதி என்பது வரலாறு.பின்னர்

அடிக்கல் நாட்டப்பட்டு சில நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டு,பிறகு ஏற்பட்ட அதிமுக அரசின் முதல்வர் ஜெயலலிதா,தனது அரசியல் குருவான மகோராவிற்காக விரைந்து முடிக்ககூட இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது மிகப்பெரிய அவலம். பின்னர் அமைந்த 1996 திமுக ஆட்சியில்,கட்டிடம் கட்டும் வேலை முழுமை பெற்றது.

இன்று வானளாவிய தாளமுத்து நடராஜன் கட்டிடமாகட்டும், டாக்டர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்டிடமும் கலைஞர் மனதில் தோன்றிய கட்டிடங்கள். பத்திரிக்கை வாயிலாக தேடினால் விவரம் கிடைக்காது. இது போன்ற தமிழக அரசியல் வரலாற்று நிகழ்வுகளை பத்திரிக்கைகள் திட்டமிட்டு மூடி விடுவது வாடிக்கை.

மருத்துவக் கல்லூரி சீரழிவை குறித்த இக்கட்டுரை உதவி:
@IlovemyNOAH2019

பொறியியல் கல்லூரிகள் குறித்த சீரழிவுக்கு

என் முந்தைய பதிவு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling