#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
1927 சென்னை வந்திருந்த நேரு காமராஜ் அழைப்பை ஏற்று விருதுநகர் கூட்டத்தில் பங்கேற்றார். காமராஜ் காங்கிரசில் செல்வாக்கு பெற ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து நிகழ்ந்த காங்கிரஸ் போராட்டங்களில் பங்கெடுத்து சிறைக்குச் சென்ற காமராஜர் பின்னர் காந்திஜியாலும் கவனிக்கப்பட்டார்
சத்தியமூர்த்திக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து சென்னை பிரசிடென்சி காங்கிரஸ் தலைவர் ஆக உழைத்ததால் காமராஜருக்கே மாநில பொதுச் செயலாளர் பதவி கிடைத்தது.
களப்பணி மூலம் நேருவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது
காங்கிரஸுக்குள் பிராமணர் அல்லாதோர் ஒதுக்கப்படுவதாக கலக குரல் எழுந்தது
ராசகோபாலு எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சத்தியமூர்த்தி காமராஜரை மாநில தலைவர் ஆக்கினார்.
அதிலிருந்து காமராஜருக்கு குடைச்சல் ஆரம்பித்தது
பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னவுக்கு ஃபார்முலா போட்டு கொடுத்த போது, காமராஜர் எதிர்ப்பால் மூக்குடை பட்ட ராசகோபாலு காங்கிரசை விட்டு வெளியேறினார்
இதற்குள் தன்னை கட்சியில நன்கு நிலை நிறுத்திக் கொண்டார் காமராஜர்.
2 ஆண்டு கழித்து ராஜகோபாலு மீண்டும் காங்கிரஸில் இணைய விரும்ப
வல்லபாய் பட்டேல் சிபாரிசு செய்தும் பிடி கொடுக்காத காமராஜர்
மௌலானா ஆசாத் சொல்லியபோது தட்ட முடியாமல் ராஜகோபாலை காங்கிரசில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்
1946-ல் சென்னை மாகாண பிரதமராக பட்டாபியை தேர்வு செய்தார் காந்தி. காமராஜர் ஏற்றார்
தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் டி பிரகாசத்தை தூண்டிவிட்டு முதல்வர் பதவியை கைப்பற்ற வைத்தார் ராஜகோபாலு.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிரகாசம் தோல்வி அடைய, ஓ. பி
ராமசாமியை முதல்வராக்கினார் காமராஜர்
சுதந்திரத்திற்கு பிறகான முதல் தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் டிடி கிருஷ்ணமாச்சாரி மூலம் தன்னை அரசின் தலைமை அதிகாரியாக்க வேண்டும் என ராஜகோபாலு நச்சரித்தார்.
ஆயுள் முழுவதும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் கொல்லைப்புறம் வழியாகவே
பதவி சுகம் அனுபவித்த ராஜகோபாலு, சுதந்திர இந்தியாவின் வைஸ்ராய் (ஜனாதிபதி பதவி) பதவி வகித்தும், வெறி அடங்காமல் சென்னை மாநில முதல்வராக மீண்டும் 1952 ல் நுழைந்தார்.
காமராஜர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்
எதிர்க்க ஆள் இல்லாததால் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் ராஜகோபால்
ஏற்கனவே இந்தியை திணிக்க முயன்று மூக்குடை பட்டிருந்த இந்த சனாதன வெறியன், சிறு குழந்தைகளை படிக்க விடாமல் தன் மூதாதையர் தொழிலையே தொடர செய்யும் குலக்கல்வி திட்டம் இந்தியாவுக்கே பகுத்தறிவு போதித்து கொண்டிருந்த மாகாணத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியது
அகில இந்திய காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் விட்டு வைத்தால் பெரிய அபாயம் என்று முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி டெல்லி காங்கிரஸில் ஒளித்து வைத்தது.
1954ல் ஒரு வழியாக காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தடை நீங்கி முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி இன்றும் கொண்டாடப்படுகிறார்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.