பெரியார்🔥🔥🔥 Profile picture

Feb 18, 2023, 9 tweets

#வரலாற்றில்_இன்று

கும்பகோணத்தில் 1992ம் ஆண்டு இதேநாள் நடந்த மகாமக சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது,
அன்று நடந்த அந்த சோக சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் மகாமக குளத்தில் மூழ்கியும், கூட்டநெரிசலில் சிக்கியும் பலியானார்கள்...

1/n...

அந்நாளில் முதல்வர் ஜெயா தனது தோழி சசியுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணம், மகாமக குளத்தில் தான் குளிப்பதை பார்க்க வரச்சொல்லி போஸ்டர் ஒட்டி வந்த கூட்டத்தால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 300க்கும் மேல் படுகாயமடைந்தனர்...

2/n...

1992ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயாவுக்கு அவரின் கேரள ஜோதிடர்கள் “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தால் உங்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்" என்று கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... அதற்கு பலியானது 60 உயிர்கள் இதை சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி கடந்து சென்றது ஜெயா...

3/n...

மகாமக தினத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் காலை பக்தர்கள் புனித நீராடலுக்கு குவியத் தொடங்கினர், காலையில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது ஆனால் 10 மணிக்கு கூட்டம் அதிகரிக்க தொடங்கியது, அச்சமயத்தில்தான் ஜெயா குளிப்பதற்காக அங்கு வரவுள்ளதாக போஸ்டர் அடித்திருந்தனர் அடிமைகள்..

4/n..

இதனால் குளிக்க வந்த பக்தர்கள் ஜெயா குளிக்கும் நிகழ்வை பார்க்கும் ஆவலில் கலையாமல் நின்று விட்டனர்,இதனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது,
குளத்திற்குள் 40 ஆயிரம் பேர் வரைதான் குளிக்க முடியும், ஆனால் அதைவிட இருமடங்கு கூட்டம் அப்பகுதி முழுவதும் காத்திருந்தது..

5/n..

கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்டம் வருவதைத் தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் மிகப் பெரும் தள்ளுமுள்ளு அந்த இடத்தில் ஏற்பட ஆரம்பித்தது...
காலை 10 மணிக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு தாமதமாக 11.30 மணிக்கு தன் தோழி சசியுடன் குளிக்க வந்த ஜெயா...

6/n...

குளக்கரைக்கு வந்தவுடன் படிக்கட்டில் நின்று கையசைத்தவுடன் மக்கள் ஆரவாரத்துடன் முண்டியடித்தனர்,
அச்சமயம் பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்​புறம் இருந்த கிரில் வைத்த சுவர்மீது பலர் ஏறி ஜெயாவைப் பார்க்க முயன்றதில் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்து அங்கேயே பலர் நசுங்கி இறந்தனர்..
7/n

இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது, மக்கள் அங்குமிங்கும் ஓடியதில் கூட்ட நெரிசலில் பலர் குளத்திலேயே சிக்கி பலியானார்கள்,
இவ்வளவு நடந்தும்கூட ஜெயாவும், சசியும் குளிப்பதில்தான் கவனமாக இருந்தனர் குளித்தபின் பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்..

8/n..

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல காலமாக இந்த மகாமகம் நடந்து வருகிறது, ஆனால் இதுவரை இப்படிப்பட்ட விபத்து நடந்ததில்லை என்பது மிகப் பெரிய சோக வடுவாக அமைந்தது அதைப்பற்றி சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல், கவலைப்படாமல் கடந்து சென்றது A1,A2 குற்றவாளிகளான ஜெயா,சசி கும்பல்.🤦🤦

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling