பெரியார்🔥🔥🔥 Profile picture

Feb 19, 2023, 10 tweets

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து நான்டெட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக RSS முன்னாள் நிர்வாகி யஷ்வந்த் ஷிண்டே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

1/n...

சங்பரிவார் அமைப்புகள் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை ஏற்பாடு செய்ததாகவும் நாடுமுழுதும் குண்டுவெடிப்புகளை நடத்தி இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தியதாகவும்

அது "2014 மக்களவை தேர்தலில் அவர்களுக்கு உதவியது” என்றும் RSS முன்னாள் நிர்வாகி யஷ்வந்த் ஷிண்டே கடந்த ஆண்டு நீதிமன்றத்தில்

2/n

தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் அதில் RSS,விஸ்வ ஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் ஆகியவற்றில் பணியாற்றியதாகக் கூறிக்கொள்ளும் யஷ்வந்த் ஷிண்டே வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுத பயிற்சி, ஆயுதங்கள் கையாளும் முறை..

3/n..

ஆகிய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதாகவும், பின்னர் குண்டுவெடிப்புக்காக கைது செய்யப்பட்டவர்களை சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது
நாடு முழுதும் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்றும், அதில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும்,RSS தேசவிரோத நடவடிக்கைகள்..
4/n

குறித்த பயங்கர விவரங்களையும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் யஷ்வந்த் ஷிண்டே பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார், இதைவிட முக்கிய செய்தி வேறென்ன இருக்க முடியும்?” என்று பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார், காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் துணிச்சலாக செயல்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவுக்கு...

5/n...

பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரியுள்ளனர்...
“பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததில் யஷ்வந்த் ஷிண்டே துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார் யஷ்வந்த் ஷிண்டேவின் பிரமாண பத்திரத்தில் குறிப்படப்பட்ட குற்றப்பின்னணி உள்ளவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது என்றும்...

6/n..

அவருடைய பாதுகாப்புக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்...

1990 ஆம் ஆண்டு முதல் தனது 18ஆவது வயதில் இருந்து RSS உடன்
தொடர்பில் இருந்ததாக அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது 1994ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்படுவதாக வந்த..

7/n..

செய்திகளை படித்து பின் அங்கு சென்றதாகவும் RSS மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் அவரை ராஜௌரி மற்றும் ஜவஹர்நகர் பகுதியின் விஸ்தராக் ஆக நியமித்தார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது,
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை தாக்கியதற்காக 1995ம் ஆண்டு கைது செய்யப்பட்டு...

8/n...

ஜாமீனில் வந்ததாகவும், அந்த வழக்கில் இருந்து 1998ம் ஆண்டு விடுவிக்கப்பட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

யஸ்வந்த் ஷிண்டே RSS இல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப்பயிற்சி பெற்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டார்..

9/n..

1999-ஆம் ஆண்டு மும்பை திரும்பியவுடன் பஜ்ரங்தள் தலைவராக நியமிக்கப்பட்ட
பின்னர் மாணவர் பிரிவான ABVP கர்ஜனாவுக்காகவும் பணியாற்றியதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார் முன்னாள் RSS நிர்வாகியான யஷ்வந்த் ஷிண்டே
மதவெறி RSS பற்றிய இந்த உண்மைகளை மக்களிடம் பரப்புங்கள்.🙏🙏
#banrss

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling