THE TRUTH SEEKER Profile picture
இங்கு நல்ல ரீல்கள் விற்கப்படும்

Feb 22, 2023, 14 tweets

#சர்க்காரியா_கமிசன்

27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது:
சர்க்காரியா கமிஷனிடம் இப்படி சொன்னாரா கலைஞர்?

2016, ஏப்ரல் 6, Mohan Raj என்பவர் முகநூலில் வெளியிட்டார். இதனை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து இருந்தனர், பின்னர் ட்விட்டரில் @ArasiAkila
2022 ல் பகிர்ந்தார்

கலைஞர் பற்றி விசாரணை செய்து, வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலுமே விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. தப்பு நடந்திருக்கிறது, ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் நம்பகமான வகையில் இல்லை என்றுதான், கூறியுள்ளது.
இதுதவிர, சர்க்காரியா கமிஷன் முதலில், இந்திய அரசுக்கும்,

மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில், பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்டதாகும். எமர்ஜென்சி காலத்தில், வேறு வழியின்றி ,அரசியல் ஆதாயங்களுக்காக, எம்ஜிஆர் அளித்த புகாரின்பேரில், இந்திரா காந்தி, கலைஞர் அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி சர்க்காரியா

தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். கமிஷன் என்பதற்கும், விசாரணைக் குழு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இது வதந்தியை வெளியிட்டவர்களுக்கு புரிந்திருக்கவில்லை.
அத்துடன், எந்த எம்ஜிஆர் கலைஞர் பற்றி புகார் எழுப்பினாரோ, அந்த எம்ஜிஆரே, பின்னாளில், ‘’என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொன்னதன்

அடிப்படையில்தான், கருணாநிதி மீது புகார் அளித்தேன். கருணாநிதி என்னென்ன ஊழல் செய்தார் என்ற விவரம் எனக்குத் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் எனக்கு தொகுத்து தந்த விவரங்களையே குடியரசுத் தலைவரிடம் கொடுத்தேன்,’’ எனக் கூறி, சர்க்காரியா விசாரணையில் இருந்து நழுவி விட்டார். இதனால்,

விசாரணைக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே தவிடுபொடியாகிவிட்டது. வேறு வழியின்றி, பல்லைக் கடித்துக் கொண்டு, பெயருக்கு ஒரு அறிக்கையை சர்க்காரியா குழு வெளியிட நேரிட்டது.
சர்க்காரியா குழு கலைஞர் அரசு பற்றி வெளியிட்ட அறிக்கை விவரம், பல்வேறு இடங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது.

இதனை வாபஸ் பெறுவதாக, மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது.
இதுதவிர, சர்க்காரியா குழு அறிக்கை விவரம் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு கிடைப்பதில்லை. காலம் காலமாக 3% கலைஞர் பற்றி எதாவது ஒரு வதந்தியை அடிப்படை ஆதாரமின்றி, பரப்பும்

ஸ்கிரிப்ட் போட்டு கொடுத்த சேலம் கண்ணன் யார் என்றால் எம்ஜிஆர் உடல்நலம் இல்லாமல் அமெரிக்காவில் இருந்த போது தன்னை முதல்வர் ஆக்கும்படி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை கொண்டு சென்ற மாமா பையன் தான் அது. ஜெயாவ அட்டாக் பண்ண கலைஞர் இது அடிக்கடி நினைவூட்டுவார்

அதன்படியே, கலைஞர் இப்படி சர்க்காரியா கமிஷனில் சாட்சி சொன்னார் என்ற கருத்தும் பரப்பப்படுகிறது. சர்க்காரியா முன்னிலையில் கலைஞர் சாட்சி சொல்லும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை.
மேலும், இது நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை இல்லை. எனவே, இதுபற்றி சர்க்காரியா தீர்ப்பு எதுவும் எழுதவில்லை.

அவர் விசாரணை அறிக்கை மட்டுமே சமர்ப்பித்தார். அதிலும், குற்றம் நடந்திருக்கிறது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சரி, இந்த பதிவில் உள்ளதுபோல, கருணாநிதி சாட்சி சொன்னாரா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, இதுபோல பரவிவரும் பல வதந்திகள் கிடைத்தன.

எஸ் நீங்கள் நினைப்பது சரி.
அந்த வதந்தியின் மூல புள்ளி தினமலம் தான்.
அது கொடுத்துள்ள லிங்கில்,
மேலும் கிளிக்கிய போது, வாசகர் குரல் பெயரில் தினமலம் ஐயர், ரைட் ஹேண்டில் எழுதி லெஃப்ட் ஹேண்டில் போஸ்ட் செய்த போலி வக்கீல் பெயரிலான போஸ்ட் இந்த கதையை நேரில் இருந்து பார்த்தது போல் கூறியது

விஞ்ஞான ஊழல் என்றே சர்க்காரியா விசாரணையில் சொல்லாத நிலையில், அதுபற்றி இஷ்டத்திற்கு, நேரில் பார்த்ததுபோல, இப்படியெல்லாம் வதந்தி பரப்பி வருகிறார்கள். இதனை அடிக்கடி கேள்விப்படும்போது, மற்றவர்களும் உண்மை என்றே நம்ப நேரிடுகிறது. இதுபற்றி விரிவாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டு இருக்கு

கலைஞர் அரசின் செயல்பாடுகள், அவர் அமைச்சரவை மற்றும் உறவினர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை வைத்துத்தான் சர்க்காரியா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், ரேஷன் சர்க்கரை மூட்டைகள் காணாமல் போனதாக, எந்த குற்றச்சாட்டும் இல்லை

புரளிகளை அடக்குங்க முதல்வரே

சர்க்காரியா கமிஷனில் எம்ஜிஆர் அப்படி என்னதான் குற்றச்சாட்டுகள் சுமத்தினார் அதில் உண்மை உண்டா அடுத்த பகுதியில் காணலாம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling