DMK IT WING Profile picture
Official #DMKITWing @arivalayam. #SocialJustice & #SelfRespect WA: https://t.co/7UkkMTgUvj #DMK4TN 🌄

Mar 5, 2023, 16 tweets

சங்கிகளின் விஷம நேரேட்டிவ் #BJPAgainstTN:

இந்தியாவின் No.1 மாநிலமாக தமிழ்நாடு உருவாவதையும், இந்தியாவே போற்றும் #DravidianModel முதல்வராக கழகத் தலைவர் @mkstalin அறியப்படுவதையும் பொறுக்காத சங்கிகள், அவப்பெயர் ஏற்படுத்த கையிலெடுத்திருப்பதே 'வட மாநில தொழிலார்கள்' பிரச்சனை..

1/n

முதல்வரின் பிறந்தநாள் #HBDMKStalin70 விழாவில் வட இந்திய தலைவர்கள் முதல்வரின் ஆட்சியினை பாராட்ட மூக்கு வேர்த்த வெட்டி சங்கிகள் வெட்டி ஒட்டி பரப்ப துவங்கிய பிரச்சாரமே 'தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்' என்பது...

2/n

எப்போதும்போல விஷம் நிறைந்த பொய்களைப் பரப்பியுள்ளார்கள் அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பொய்யான வீடியோக்கள்: ஹைதிராபாத், பாஜக ஆளும் கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட இந்தியர்களுக்கு இடையே நடக்கும் தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடந்தது போல பரப்பியுள்ளார்கள். 3/n

இந்த பொய்யான வீடியோக்கள் எந்தவித சரிபார்ப்பிற்கும் உட்படுத்தப்படாமல், @DainikBhaskar, @abplive, @Live_Hindustan, பஞ்சாப் கேசரி உள்ளிட்ட பல்வேறு வட இந்திய 'ஹிந்தி' ஊடகங்களில் அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் வடிவிலும் பொய் செய்திகளாக பரப்பப்பட்டன.

4/n

ஹிந்தி பொய் செய்திகளின் நோக்கம் வடஇந்திய மக்களிடையே பீதியைக் கிளப்பி, தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே! அதற்கு இங்கிருக்கும் சங்கிகளும் உடந்தை @annamalai_k-யின் விஷம அறிக்கை அவர்தம் அல்லக்கைகளின் எடிட்டட் விஷம வீடியோக்கள் பரப்பப்பட்டன 5/n

ஹோலி உள்ளிட்ட வடஇந்திய பண்டிகைகளுக்காக, கிளம்பிய வடஇந்திய தொழிலாளர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்கள் தமிழ்நாட்டை விட்டுவெளியேறுவதைப் போன்று காட்ட முயற்சிக்கிறார்கள் முட்டா சங்கிகள், வடஇந்திய தொழிலாளர்களோ தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறி சங்கிகளின் முகத்தில் அறைந்துள்ளனர், 6/n

இதில் சங்கிகளால் திரித்து பொய்யாக பரப்பப்பட்ட இரண்டு விஷயங்கள் வட இந்திய தொழிலாளர்களான பவன் யாதவ் மற்றும் மோனு குமார் ஆகியோரின் மரணங்கள். இந்த மரணங்களில் உள்ள உண்மை என்வென்று பார்ப்போம்:

7/n

பிகாரைச் சேர்ந்த பவன் யாதவ் ஜார்கண்ட்டை சேர்ந்த உபேந்திர தாரி என்ற மற்றொரு வடஇந்தியரால் 19, பிப்ரவரி அன்று கொலை செய்யப்பட்டார் இருவரும் திருப்பூரில் வேலை செய்தவர்கள். இந்த கொலைக்கும் தமிழர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. பவன் யாதவின் சகோதரர் இந்த கொலை குறித்து கூறியதாவது,

8/n

கொலையாளி உபேந்திர தாரி தன் மனைவிக்கும் கொலை செய்யப்பட பவன் யாதவ்க்கும் தகாத உறவு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த கொலை நடந்துள்ளது. இந்த கொலைக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது பவன் யாதவ் சகோதரரின் வாக்குமூலம்.

9/n

மற்றொரு மரணம்: மோனு குமார்!

25,பிப்ரவரி மோனு குமார் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி காவல்துறையின் அறிக்கையின்படி மோனு குமார் குறிப்பிட்ட நாள் அன்று தனது அறையில் உள்பக்கமாக தாழிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர் துளசி குமார் கூறியுள்ளார் 10/n

இந்த இரண்டு பீகார் தொழிலாளர்களின் மரணங்களை ஆதாரமாகக் கொண்டே இதர வேறு மாநில வீடியோக்களை வைத்து இந்த விஷமப் பொய்ப் பிரச்சாரத்தை சங்கிகள் செய்துவருகிறார்கள். இதனை அவர்களது அதிகாரப்பூர்வ @BJP4Bihar பக்கத்திலும், தமிழ்நாட்டு சங்கிகளும் இந்த பொய் பிரச்சாரத்தை பரப்பிவருகிறார்கள்

11/n

இந்த சூழலில் தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வட இந்திய தொழிலாளர்களின் அச்சம் போக்க, தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் @cvganesan1 அவர்கள் வட இந்திய தொழிலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவதை உறுதி செய்துள்ளார்.

12/n

தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட பீகார் அரசு அதிகாரிகள் "பொய் வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம், வட இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்பதனை தெளிவுபடுத்தியுள்ளனர்.

13/n

இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கிறவர்கள் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க நினைப்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்ற மாண்புமிகு முதல்வரின் எச்சரிக்கையின் படி.

14/n

வெறுப்பைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டு, சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைத்த @annamalai_k, வடஇந்திய தொழிலாளர்களிடையே பீதியை கிளப்பிய @BJP4Bihar,@DainikBhaskar மற்றும் துணைபோன தமிழ்நாட்டு சங்கிகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, வதந்தி பரப்பிய இவர்கள் கைது செய்யப்படலாம்

15/n

தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மீது பரப்பப்படும் இவ்வகையான வெறுப்பைத் தூண்டும் விஷமப் பிரச்சாரங்களை முறியடித்து. மாநிலத்தின் நலனையும் நற்பெயரையும் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.

இந்த தகவலை அனைவருக்கும், அனைத்து பக்கங்களுக்கும் பகிரவும். நன்றி

16/n

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling