👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Mar 29, 2023, 8 tweets

#இந்தியாவின்_புராதானநகரம்

எப்ப பார்த்தாலும் சென்னையை பற்றி பேசி பேசி போரடிக்குது

ஒரு சேஞ்சுக்கு இந்தியாவின் பழமையான நகரைப் பற்றி பேசலாம்

உடனே காசி தானே என வராதீங்க

அது பிணங்களின் நகரம்
இது தூங்கா நகரம்

உலகின் மிகப் பழமையான ராஜ பரம்பரை ஆண்டது

🔥மதுரை🔥

பொதுவா எல்லா இந்திய நகரங்களின் கட்டுமான அமைப்பு படி

கோயிலை சுற்றித்தான் நகரம் வளர்ந்து இருக்கு

2000-3000 ஆண்டுகள் என அதன் பழைமையை மதிப்பிட்டிருக்கு விக்கிபீடியா

15 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயிலை சத்தியமா ஒரே ஒரு அரசர் தன் ஆயுள் காலத்தில் நிர்மாணித்து இருக்க முடியாது

பாண்டியர்கள் ஆரம்பித்து படையெடுத்து வந்த நாயக்கர் ஊடாக

தேவகோட்டை செட்டியார் வரை இதன் கட்டுமானத்திற்கு பங்களித்து இருக்கின்றனர்

பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை பெரியார் என பெயரிட்டு அதை அம்மக்களும் ஏற்று

இன்னி வரை திருமங்கலம் ஆரப்பாளையம் அல்லது மாட்டு தாவணியில் பஸ் ஏறி

பெரியார் போப்பா என உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அட்ரஸ் சொல்லுவது ஆகப்பெறும் முரண் நகை

தமிழ் நாட்டில் மட்டுமே
சாத்தியம் 🤣

கோயம்பேடு பேருந்து நிலையம் பார்க்கும் முன் மாட்டுத்தாவணி தான் தமிழ்நாட்டின் பெரிய பேருந்து நிலையம் என நினைத்துக் கிட்டு இருந்தேன்

சோழர்களை அக்குச் சுக்கா அலசி ஆராய்ந்த கல்கி மதுரையை பற்றி எதுவும் எழுதி இருக்கிறாரா..

சாண்டில்யண் ஓரளவு கவர் பண்ணி இருக்கிறார் என நினைக்கிறேன்

சமகாலத்தில் @SuVe4Madurai படைத்த காவல் கோட்டம்

மதுரையின் சரித்திரம் பற்றிய
சிறப்பான அறிமுகம்

இங்கு உள்ள 1890 ல எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள இருந்து

இன்று வரை அது ஒரு பிக் சைஸ் வில்லேஜ் தான்

தற்போது அறிவித்துள்ள மெட்ரோ நிறைவேரினால்

வேலை அதன் கிராமிய தன்மை மாறி சென்னை போல ஒரு பிரபிப்பை உண்டாக்கலாம்

3000 வருட வரலாற்றைச் சுமந்தபடி இருக்கிற மதுரை
கோயிலை சுற்றி வீதிகளுக்கு பெயரிட்டு இருப்பதே ஒரு அழகு தான்..

இங்குள்ள பாளையம் என்ற பெயர் ஹைதர் அலி திப்பு சுல்தான் காலத்திலும் நாயக்கர் காலத்திலும் இங்கு படையெடுத்தவர் செல்வாக்கை காட்டுது

சமீபத்தில் வெளிநாட்டு பயணிகள் முதல் சாய்ஸ் தமிழ்நாடு,மதுரை, என படித்தேன்

ஆனா New York Times வெளியிட்ட அவசியம் காண வேண்டிய 52 இடங்கள் பட்டியலில் கேரளா தான் இருக்கு

வெறும் கோயில் மட்டும் வெளிநாட்டினரை ஈர்க்காது

தமிழ்நாடு அரசு ஏதாவது செய்யுமா?

🙅🏻‍♀️🙆😍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling