DMK IT WING Profile picture
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrYAV5

Apr 18, 2023, 17 tweets

பலரும் பல்வேறு வகைகளில் அந்த ரசீதை (அது பில் இல்லை) பிரித்து மேய்ந்துவிட்ட நிலையில் எல்லாவற்றையும் இணைத்து வாட்சுக்கு பில்லு தரேன்னு சொல்லிட்டு ‘நான் வித்தேன்னு எழுதி தரேன் நீ வாங்குனன்னு எழுதி குடு’ன்னு வாங்கிய ரசீதை தூக்கிட்டு வந்த #மக்கு_மலை க்கு 16+ கேள்விகள்.

1/n

சேரலாதன் என்பவர் வாட்ச் வாங்கியதாக சொல்லப்படும் நாள் 21/03/2021. அந்த மாதம் (03.03.2021 - 31.03.2021) முழுவதுமே 24 மணிநேர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.. அப்படியெனில் அவர் எப்படி கடைக்கு சென்று வாட்ச் வாங்கியிருக்க முடியும்?

2/n

சேரலாதனிடம் தான் வாட்ச் வாங்கியதாக அண்ணாமலை கூறும் 27/05/2021 அன்று அண்ணாமலை செலுத்தியதாக சொல்லும் ரூ.3,00,000-த்திற்கான எந்த பண பரிவர்த்தனையும் அண்ணாமலையின் வங்கிக் கணக்கில் நடைபெறவில்லையே? அப்படியெனில் அது யார் பணம்? எப்படித் தந்தார்?

3/n

எப்படியோ தந்தார் எனில் Section 269ST of the Income Tax Act படி ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான எந்த பண கொடுக்கல் வாங்கலும் வங்கி மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அண்ணாமலை அதை மீற காரணம் என்ன?

4/n

ஊர் முழுக்க ‘டிஜிட்டல் இந்தியா’ என ஒன்றிய அரசு Digital Transactionகளை உருட்டிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அதை மீறக் காரணம் என்ன? அவர் கொடுத்த பணம் கருப்பு பணமா?

5/n

யார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? 4 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொண்டும் பில்லுடன் வராமல் ‘Delivery Challan’னுடன் வந்தது ஏன்? ஒரிஜினல் பில் எங்கே?

‘சேரலாதனின் கேரளத்து நண்பன் லோகநாதன் சேலத்தில் வாங்கிய செக்கன்ட்ஹேன்ட் வாட்ச்’ என்ற இந்த கதை கம்பி கட்டும் கதையாக தெரியவில்லையா?

6/n

சேரலாதனுக்கு எப்படி இந்த அமேசான் காடுகளின் அரியவகை ‘ரபேல் வாட்ச்’ கிடைத்தது? யார் இந்த சேரலாதன்? என்ன தொழில் பண்றார்? அப்படி ஒருத்தர் இருக்காரா? சேரலாதனின் வங்கி கணக்கையும் வெளியிடுவீர்களா? அவரைப் பொதுவெளியில் அறிமுகப்படுத்துவீர்களா?

7/n

‘ரேர் பீஸ் - ரபேல் கடிகாரம்’ இரண்டே மாதத்தில் அதை ஒன்னரை லட்ச ரூபாய் குறைத்து 3 லட்ச ரூபாய்க்கு சேரலாதன் விற்க காரணம் என்ன?? இல்லை அண்ணாமலை மிரட்டி வாங்கினாரா? தேசத்திற்காக சொன்ன விலைக்கு வாங்காமல் குறைத்து வாங்கியது ஏன்? ஓ.. இதுதான் ‘டிஸ்கவுன்ட் தேசப்பற்றா?’

8/n

இந்தியாவில் Bell&Ross வாட்ச்களை அதிகாரப்பூர்வமாக விற்பது Ethos மட்டுமே! அப்படி இருக்கும்போது இந்தியாவிலேயே இரண்டு ரபேல் வாட்ச்கள் தான் வாங்கப்பட்டுள்ளன என்று இவருக்கு எப்படி தெரியும்? இவர் வாட்ச் பில்லைத் தேடினாரா இல்ல வாட்ச்க்கான ஒனர்களைத் தேடி தேடி கெஞ்சினாரா?

9/n

அப்படிப் பார்த்தாலுமே 2010 ல் இருந்தே Zimson நிறுவனம் Computer Generated Invoice பில்லை தான் தருகிறது. தெரு முனை மளிகைக் கடைக்காரர் கூட இப்போதெல்லாம் பிரிண்டட் பில் தருகிறார்! அப்படி இருக்கும் போது ரூ.4,50,000 மதிப்புள்ள ரசீது பார்க்க பெட்டிக் கடையில் வாங்கியது போலுள்ளது!

10/n

HSN mandatory for all transactions. Without HSN that transaction is invalid என சட்டம் சொல்கிறது. அப்படி எனில் சேரலாதனும், Zimson நிறுவனமும் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறார்களா? அது தெரிந்தும் தான் அண்ணாமலை அந்த கடிகாரத்தை வாங்கினாரா?

11/n

Zimson நிறுவனத்திடம் ORIGINAL INVOICE உள்ளதா? அந்த Invoice அவர்களின் மாதாந்திர / ஆண்டுக் கணக்கு ஆடிட்டிங்கில் சமர்பிக்கப்பட்டுள்ளதா? இதில் வரி எய்ப்பு நடந்துள்ளதா ? அண்ணாமலை காட்டும் Delivery Challan -ல் நிறுவனத்தின் மெயில் ஐடி தவறாக இருக்கிறதே!? ஆமா இது எல்லாமே பொய்யா?

12/n

சேரலாதன் வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394CBL147. ஆனால் அண்ணாமலை பில்லில் இருக்கும் சீரியல் நம்பர் BRO394DAR147 ! இந்த சீரியல் நம்பர் தப்பா இல்ல சீரியல் நம்பரே பொய்யா?

13/n

வாட்ச்க்கு பில் சர்ச்சை எழுந்தபோது, அன்று 149-வது வாட்ச் என சொன்னார். ஆனால் Delivery Challanல் 147 என குறிப்பிடப்பட்டுள்ளது! இரண்டு வாட்ச்கள் உள்ளதா? உங்கள் அழுக்குகள் வாட்ச் நம்பரை மறைத்து விட்டதாக நீங்களே துப்பியிருகிரீர்களே! அப்போ நீங்கள்தான் அந்த அழுக்கின் வடிவமா?

14/n

திருவாளர் #மக்கு_மலை அவர்கள் சொன்னது போல அவரது மாத செலவினங்கள் ரூ.7.00 இலட்சம் நண்பர்களால் தரப்படுகிறது எனில் #அரசியல்கோமாளி_அண்ணாமலை வருடத்திற்கு அன்பளிப்பாக பெறும் ரூ.84 இலட்சம் தொகைக்கு 30% அன்பளிப்பு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பதனை 🐐 அறிவாரா?!

15/n

வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் எனில், வாட்ச் வாங்கும் அளவுக்கு பணம் கொடுத்துத் தள்ளும் நண்பர்கள் தான் யார்? அதானியா? ஆருத்ராவா?

16/n

‘ஈலோகத்தில் வாட்ச்க்கு பினாமி வச்ச ஒரே ஆளு ஈ ஆட்டுக்குட்டி மட்டுமே’!
மேலும் நீங்கள் கண்டறிந்த பிழைகள் மற்றும் தகவல்களை ரிப்ளை செய்யவும்! அடுத்து அண்ணாமலையின் வங்கிக் கணக்கு டீக்கோட் வருது!

17/n

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling