Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 24, 2023, 9 tweets

#கலக்கும்ராகுல்_கலங்கும்BJP

இந்த ஒரு வாரத்தில், திமுகவை திமுகவே காய்ச்சி எடுக்குது.

பக்கத்து கர்நாடகாவில் திமுக பாணியில் பிஜேபியை காங்கிரஸ் கதறடிக்கிது

உள்கட்சி பிரச்சனையே ஓயாத நிலையில், ராகுல் மீதானா அனுதாபத்துடன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேற பிஜேபியை பாடாய் படுத்துது

இந்தத் தேர்தலில் ஹீரோவே திமுக தேர்தல் அறிக்கை என்று கலைஞர் ஒரு முறை கூறினார்.

மக்கள் அதை நம்பி வாக்களிக்க
ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அதனை நிறைவேற்றினார்.

அது முதல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் எதிர்நோக்க ஆரம்பித்தனர்

வேறு வழியின்றி ஜெயாவும் அதையே பின்பற்றினார்

பொதுவா இலவசத்துக்கு எதிரானவர் போல ஆளாத மாநிலங்களில் பிஜேபி வேஷம் போடும்.

ஆனால் வட இந்திய மாநிலங்களில் 15 லட்சம் தருகிறேன் போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும்

ஏமாந்த மக்கள் ஓட்டு போட்டு அதை மறந்து விடுவார்

காங்கிரஸ் திமுக பாணியில் பல வாக்குறுதி தந்திருக்கு

1. க்ருஹ ஜோதி திட்டம்:

ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்.

2. க்ருஹ லக்ஷ்மி திட்டம்:

2000/மாதம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம்.

3. யுவ நிதி:

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3,000 & வேலையில்லாத டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு ₹1500/மாதம் வழங்கப்படும் திட்டம்.

4. அன்ன பாக்யா:

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும்.

பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று இமாச்சல தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல வாக்குறுதி அளித்திருந்தாலும்

இந்த நான்கும் தான் காங்கிரசின் நங்கூர திட்டங்கள்

கட்சி தாவும் பிரமுகர்களையே சமாளிக்க முடியாத பி ஜே பி
செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களால் விரட்டப்படும் நிலையில்

காங்கிரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புரளியை கிளப்புது

சித்தாராமயா - சிவக்குமார் இணையோ பிஜேபி நோ பால் போட்டால் கூட அதில் சிக்ஸர் அடிக்குது

பிஜேபியின் ஹிந்து பெரும்பான்மை ஓட்டை குறி வைத்து லிங்காயத்து தலைவர்களை மடாதிபதிகளை வளைத்து போடுவதுடன்

ராகுலை நெற்றி நிறைய பட்டையுடன் வரச் செய்து
2024 எப்படி அமையப்போகுது என்பதை உணர்த்தி வருகிறது

கர்நாடகா வெற்றி
காங்கிரசின் மீட்சி
இந்தியாவின் வெற்றி

மரித்துப்போன மானுடத்தின் வெற்றி

அவனது ஆயுதங்களை எடுத்து அவனையே தாக்க
கர்நாடகாவில் கோயிலுக்கு போய் ராகுல் திருப்பி அடித்தால்

தமிழ்நாட்டிலோ புரளிக்கு கவுண்டர் புரளி கொடுத்து
கலங்கடிக்குது திமுக 👇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling